அண்ணாவைப் பற்றி அறிஞர்களும் / ஆய்வாளர்களும்
( டாக்டர். அண்ணா பரிமளம் )
பாகம் -34

தந்தையின் நோக்கிலே தலைவர்கள்! அண்ணா

அண்ணாவின் மறைவு தமிழ்நாட்டிற்கு மாபெரும் நஷ்டம் என்றே சொல்ல வேண்டும். தமிழ்நாடும், தமிழர் சமுதாயமும் அண்ணா ஆட்சியில் எவ்வளவோ அதிசயமான முன்னேற்றங்கள் அடையக் காத்திருந்தது. அவரும் பகுத்தறிவுக் கொள்கைகளைப் பரப்பி அதை உருவாக்குவதே தனது கடமை என்ற கருதி இருந்தார்.

அதற்கேற்ப, அவர் செய்த அரும்பெரும் காரியங்களில் முக்கியமானது, சுயமரியாதைத் திருமணச் செல்லுபடி சட்டம் ஆகும். இதில் கடவுளுக்கோ, மதத்திற்கோ, சாத்திர சம்பிரதாயத்திற்கோ இடமில்லை. மற்றும் பொதுப் பணி இடங்களிலுள்ள கடவுள் படங்களை அப்புறப்படுத்த வேண்டியது என்ற கட்டளை மிக மிகத் துணிச்சலான சீர்திருத்தமாகும்.
யானறிந்தவரையில், சரித்திரம் கண்டவரை அண்ணா முடிவுக்குப் பொது மக்கள் காட்டிய துக்கத்தில் நாலில் எட்டில் ஒரு பங்கு கூட வேறு எவருக்கம் காட்டியதாக நிகழ்ச்சி கிடையாது. அந்த அளவுக்கு அண்ணா தமிழ் மக்கள் உள்ளத்தில் இடம் பெற்றுவிட்டார்கள். இது அண்ணாவின் இரண்டாண்டு ஆட்சியால் தமிழர்களுக்கு ஏற்பட்ட உணர்ச்சி என்பதோடு, இவ்விஷயத்தில் மனித வாழ்வில் வேறு யாருக்கும் கிடைக்க முடியாத பெருமையை அண்ணா அடைந்துவிட்டார். எனவே, அண்ணாவின் நற்குண நற்செய்கை பெருமைக்கு இதற்கு மேல் எடுத்துக்காட்டு காட்டமுடியாது.
(பகுத்தறிவு - தந்தை பெரியார் 98வது பிறந்தநாள் மலர்)


திரட்டு

அது தேர்தல் சமயம். அரசியல் கட்சிகளுக்கு குறிப்பிட்ட சில இடங்களில்தான் பொதுக்கூட்டம் நடத்த அனுமதியளிப்போம். ஆனால் தி.மு.க.விலிருந்த முக்கிய புள்ளி ஒருவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் அனுமதிக்கப்படாத இடம் ஒன்றில் கூட்டம் போடவேண்டும் என்று அனுமதி கேட்டார். நாங்கள் அந்த இடத்துக்கு அனுமதி மறுத்தோம் . . . இங்குதான் கூட்டம் போடுவோம். நீங்கள் செய்வதைச் செய்துகொள்ளுங்கள் என்றார் . . . இப்படி அவர் என்னிடம் பேசியது குறித்து கட்சித் தலைவர் அண்ணாவுக்கு விரிவாக கடிதம் எழுதினேன். கடிதத்தை அண்ணா படித்திருப்பார் போலிருக்கிறது நெடுஞ்செழியன் எனக்கு போன் செய்தார்.

அதென்ன . . . எங்க கட்சிக்காரர்களை குறை கூறி அடிக்கடி அண்ணாவுக்கு கடிதம் எழுதிடுறீங்க . . . இதுவரை ஆறு கடிதம் எழுதியிருக்கீங்க என்று என்னிடம் கோபித்துக்கொண்டார். நான் உடனே பதில் சொன்னேன் . . . உங்களுக்காவது 6 முறை எழுதியிருக்கிறேன். காங்கிரஸ் தரப்பில் இருந்து தொல்லைகள் வரும்போது அந்தக் கட்சித் தலைவருக்கு 16 கடிதங்கள் எழுதியிருக்கிறேன். வலது கம்யூனிஸ்ட் கட்சி தலைவருக்கு 2 கடிதங்கள் எழுதியிருக்கிறேன் என்றேன்.

அதன் பிறகு அந்த முக்கிய தி.மு.க. புள்ளியை அண்ணாவே அழைத்து விசாரித்திருக்கிறார். மாநகர் போலீஸ் அதிகாரிக்கே சவால்விட்டிருக்கிறேன். அதனால் குறிப்பிட்ட அந்த இடத்தில் பொதுக்கூட்டம் நடத்தியே ஆகணும் என்று அந்தப் புள்ளி அண்ணாவிடம் வாதாடியிருக்கிறார். ஆனால் அண்ணா அதற்கு இடம் தரவில்லை என்பது பிறகு தெரிந்தது . . . அந்தத் தேர்தலில் காங்கிரஸ் தோற்றது, இது நடந்து ஆறு மாதங்கள் கழித்து காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலமாக வந்தனர் . . . அங்கே இருந்த முரசொலி அலுவலகத்தின் மீது கல்லெறிந்தனர் . . . போலீஸ் படை வருவதற்குள் முரசொலி பெயர்பலகையை நொறுக்கினர். . . .

முரசொலி அலுவலகம் தாக்கப்பட்ட சமயத்தில் போலீஸ் அதிகாரிகள் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை . . . போலீஸ் அதிகாரி காங்கிரசுகாரஙர்களுக்கு சாதகமாக இருந்துவிட்டார் என்று என்மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டை தொடர்ந்து எனக்குப் பணிசெய்ய விருப்பமில்லை. பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு போய்விட வேண்டுமென முடிவெடுத்தேன். இந்த ஊர்வல கலாட்டா நடந்த சில நாட்களில் நான் டெல்லிக்கு மாற்றிக்கொண்டு கிளம்பினேன். அப்போதும் முதலமைச்சர் அண்ணாவுக்கு ஓர் கடிதம் எழுதிவிட்டுத்தான் போனேன்.

பொருட்கள் சேதமடைந்தால் அதைத் திருமபப் பொற்றுக்கொடுக்கலாம். ஆனால் துப்பாக்கி சூடு நடத்தி சில உயிர்கள் பலியாகிவிட்டால் அது திருமப வருமா, அதனால்தான் நான் துப்பாக்கியை எடுக்கவில்லை. இருப்பினும் முரதொலி அலுவலகத்துக்கு ஏற்பட்ட சேதாரத்துக்கு என்னால் முடிந்த நஷ்ட ஈட்டுத் தொகை கொடுக்க விருமபுகிறேன். இதை அந்த பத்திரிக்கை ஆசிரியருககு அனுப்பினால், அவர் வாங்கிக் கொள்வாரா என்பது எனக்கு சந்தேகமாக இருககிறது. தாங்கள் அந்தப் பத்திரிக்கை சார்ந்துளள கட்சியின் தலைவர் என்றபடியால் இந்தச் செக்கை உங்களுக்கு அனுப்பியுள்ளேன் . . என்று அந்தக் கடிதத்தில் எழுதி அந்த செக்கையும் இணைத்து அனுப்பினேன். நான் அனுப்பிய செக்கையும் கடிதத்தையும் பார்த்து மிகவும் உணர்ச்சி வசப்பட்டார் அண்ணா. அவரே தனது கைபட எனக்கு ஒரு கடிதம் எழுதினார். நீங்கள் அனுப்பிய செக் எனக்குக் கிடைத்தது. அதை நான் உங்களுக்குத் திருபபி அனுப்பப்போவதில்லை. அதே சமயம் வங்கியில் போட்டு அதை பணமாகவும் மாற்றமாட்டேன். அதில் உள்ள உங்கள் கையெழுத்து ஒரு சிறந்த போலீஸ் அதிகாரி எனக்கு போட்டுக் கொடுத்த ஆட்டோகிராப்பாகப் பாதுகாத்து வைத்துக் கொள்வேன் என்று எழுதியிருந்தார்.

என் மதிப்பில் அண்ணா பலமடங்கு உயர்ந்துவிட்டார் என்றார் அந்த அதிகாரி

போலீஸ் மனிதர்கள் கட்டுரை
நன்றி: ஜீனியர் விகடன்.

 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai