அண்ணாவைப் பற்றி அறிஞர்களும் / ஆய்வாளர்களும்
( டாக்டர். அண்ணா பரிமளம் )
பாகம் -33

பேரறிஞர் அண்ணாவைப் பற்றி காண்டேகர், மராட்டிய புரட்சி எழுத்தாளர்


செல்வாக்கு பெற்ற பெருந்தலைவரென்றும், சிறந்த பேச்சாளரென்றும் கேள்விப்பட்டிருக்கின்றேன். அவர் தம்முடைய பத்திரிக்கைகளில் என்னுடைய நாவல்கள் குறித்து விமர்சனம் எழுதியுள்ளதாகவும் என்னிடம் தெரிவிக்கப்பட்டது. (காண்டேகருடன் நேர்காணல் - திரு.ஜி.குருமாணிக்கம் - தென்னகம் - 23.01.1959)

இந்தியில் இராஜ்யசபா என்று அழைக்கப்படும் மாநிலங்கள் அவையில் அண்ணாதுரை தமது கன்னிச் சொற்பொழிவை நிகழ்த்த 01.05.1963 அன்று எழுந்தார். மக்கள் தலைவர்கள் நாடாளுமன்றத்தில் செய்வது போல் இவரும தீப்பொறி பறக்கும் பேச்சை பேசுவார் - உரக்க கூச்சலிடுவார், ஜமபப்பேச்சு பேசுவார் என்ற அனைவரும எதிர்பாத்தார்கள். அவரது பேச்ச சொற்போர் வீரனின் பேச்சாக இருந்தது! காரணத்தோடும், புள்ளிவிவரங்களோடும் அவர் வாதாடினார்! அவரது குறிக்கோளுக்காக எதிரிகளின் பேச்சிலுள்ள மேற்கோள்களைக் காட்டினார். கேட்போரின் உள்மனதிற்கு அவர் வேண்டுகோள் விடுத்தாரே தவிர, அவர்களது உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு அல்ல!

தவறுகள் இல்லாத ஆங்கிலத்தில், அடிக்கடி குறிப்பைப் பார்க்காமல் - பணிவோடு பிரச்சினைகளை விளக்கினார்! தமது திராவிடநாடு பிடுதலை கோரிக்கைக்கு எதிரிடையான வாதங்களுடன் போரிட்டார்!
ஒரு மண நேரப் பேச்சுக்குப்பின்னர் அவர் அமர்ந்தபோது, நீண்ட கரவொலி எழுந்தது வேறெந்தக் கன்னிச் சொற்பொழிவுக்கும் இவ்விதம் நிகழ்நததில்லை. பேசியவரும் பேச்சைக் கேட்டவர்களும் அந்த நிகழ்ச்சியில், மதிப்பு மிக்க மக்களாய் திகழ்ந்தனர்!
நாடாளுமன்றத்திலேயே அன்று ஒரு பெருநாள்!
மாநிலங்கள் அவை உறுப்பினர் - 1962 - பேராசிரியர் எம் இரத்தினசாமி - கழகக்குரல் - இதழ் - 02.02.1975)

 

 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai