அண்ணாவைப் பற்றி அறிஞர்களும் / ஆய்வாளர்களும்
( டாக்டர். அண்ணா பரிமளம் )
பாகம் -32

அண்ணாவின் ஆங்கிலம்

அறிஞர் அண்ணா அவர்களின் அழகு தமிழ்ப் பேச்சும் எழுத்தும் தமிழக வரலாற்றில் தனிச்சிறப்பும் பெரும் புகழும் பெற்றவை என்பது அவரது எதிரிகளும் ஏற்றுக் கொள்வர். இருபதாண்டு காலத்திய அவரது கருத்துக்கள் 1944 முதல் 1964 வரை எத்தனையோ வண்ணங்களில் நமது இருதயத்தைக் கவர்ந்திருக்கின்றன. எண்ணியெண்ணி மகிழத்தக்கவைகளாகும்.

அண்ணாவின் தமிழைக் கேட்டுக்கேட்டு மகிழ்ந்தவர்கள் அனைவரும் அவரது ஆங்கிலத்தைக் கேட்டதில்லை. நீதிக் கட்சியின் தொடர்பின் போது அதிகமாக ஆங்கிலத்திலேயே பேசினார். எழுதியிருக்கிறார். கல்லூரி மன்றங்கள் அவரது ஆங்கிலப் பேச்சினைச் சில வேளைகளில் மட்டுமே கேட்டு வியந்துள்ளன. பதினைந்து ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் வானொலியில் (ஞநடியீடநள ஞடிநவ) என்ற தலைப்பில் பாரதியாரைப் பற்றிய உரை நிகழ்த்தினார். வானொலியில் ஆதிக்கம் பெற்றிருந்தவர்கள், அந்த அழகான அடுக்குத் தொடர்கள் நிரம்பிய ஆங்கில உரையைப் பெரிதும் பாராட்டிப் புகழ்ந்தார்கள்.

அண்ணா அவர்கள் ஆங்கிலத்தில் பேசுவார் எழுதுவார் என்பதை அறியாத சில அவசரக்காரர்கள் தமிழ் எம்.ஏ. படித்தவருக்கு எப்படி ஆங்கிலம் தெரியும் என்றெல்லாம் புலம்பித் தவித்தனர். 1957 - பொதுத் தேர்தல் முடிந்த சில நாட்களில் அண்ணாவின் ஹோம் லாண்ட் என்ற கிழமை இதழ் பவனி வந்தது. மிகப்பெரிய சட்ட வல்லுநர்கள் ஆங்கிலப் புலவர்கள் அவரது ஆங்கிலச் சொற்களைப் புரிந்துகொள்ள முடியாமல் திணறினார்கள். அலங்காரச் சொற்கள் ஆங்கிலத்தின் இனிமையெல்லாம் தொகுத்துக்காட்டின. ஹோம் லாண்ட் இதழ் ஒவ்வொரு கட்டுரையும் தமிழகத்திலே மட்டுமல்ல, துணைக்கண்டத்திலே மட்டுமல்ல; உலகத் தலைவர்கள் பலரின் பார்வைக்கும் சென்றன. அன்றைய தமிழக நிதியமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம் என்பவருக்காக கூந யஉஉரளபே கபேநச கட்டுரை எழுதியிருந்தார். அதனை மந்திரியார் பார்த்தார் - புதுப்புது ஆங்கில வார்த்தைகளைப் பார்த்துப் படித்துவிட்டுப் பொருள் புரிந்துகொள்ள ஆக்ஸ்போர்டு அகராதிகளைப் புரட்டினார் ஞடிளவ டிககஉந ளுடிஉயைடளைஅ என்ற தொடர் இந்திய சர்க்காரின் போலிச் சோஷலிசத்தை மதிப்பிட்டது. சுயஅடடைய யனே சூநாசர என்ற தலைப்பில் வந்த அண்ணாவின் கருத்துக்கள் திரும்பத் திரும்பப் படித்து மகிழத்தக்கனவாகும். அந்த இதழில் அருமையான அடுக்குகள் நிறைந்துள்ளன.

கூந வசநனேள யனே வநைள, வாந வசடிரடெநள யனே வசரெடயவடிளே, வாந வரஅரடவள யனே வயரவேள வடி நெ கடிரனே ளை வாந யீரடெஉ டகைந

இப்படி எத்தனையோ பகுதிகள்! சுரயீநந ளை ளஉம என்ற பேனா ஓவியம் பெரிய பெரிய பொருளாதார மேதைகளின் அறிவுத் திறனுக்கு விடப்பட்ட சோதனையாகும்! கல்லூரிப் பேராசிரியர்கள் அனைவரும் படிக்கவேண்டும். இன்னும் ஏராளமான அரசியல் தலைப்பில் எழுதியவை ரசிக்கத் தக்கவைகளாகும். நேருவைப்பற்றிய பல்வேறு குறிப்புகளில் அண்ணா அவரை மதித்த அளவுக்கு மறுத்தும் காட்டினார். அவைகளிலே ஒன்றுதான் ஞஉவரசந டிக சூநாசரள ஐனேயை என்பதாகும். அண்ணாவின் ஆங்கில எழுத்துக்களை தொடர்ந்து படிக்கும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கவில்லை - இடையிலே ஏமாந்து விட்டோம். மூன்றாவது பொதுத் தேர்தல் முடிந்த பிறகு அண்ணா டில்லிப்பட்டணத்தின் மேலவையிலே உரை நிகழ்த்தினார். அவரது முதல் முழுக்கம் பெரியதோர் அதிர்ச்சியை வழங்கியது. துணைக் கண்டத்தைத் துடித்து எழுச் செய்த அந்தப் பேருரை அவரது அறிவாற்றலுக்குத் தரும் சான்றாகும், பண்டிதர்களும், பகதூர்களும் அவர்தம் பக்தியிலே இருந்த படை வரிசையினரும், அண்ணாவின் உரையினைக் கேட்டனர், மகிழ்ந்தனர், வியந்தனர். பின்னால் ஆய்ந்தனர் - எல்லமே நடைபெற்றன. பேசட்டும் என்றவர்கள், பேசக்கூடாதென்று கூச்சலிட்டவர்கள், இடைமறித்துத் தடங்கல் செய்தவர்கள் ஏராளம் பேர்.

இரண்டாவது முறை பேசினார். வரவு செலவுத் திட்டத்தின் கோளாறுகளை இந்திய சர்க்காரின் இடுப்பொடிந்த பொருளாதார முறைகளைக் கணக்கிட்டுக் காட்டினார். மூன்றாவதாக மொழிப்பிரச்னை - இந்தி வெறியர்களின் இதயத்தைக் கொதிக்க வைத்தது. இப்போதைய பிரதமர் லால்பகதூர், சட்ட அமைச்சர் அசோக்சென், இப்படி யார் யாரோ அவருக்கு விளக்கம் சொல்லத் தெரியாமல் வெளியேறினார்கள். மிரட்டலும் அரட்டலும் அடிபணிந்தன. சீனத்தவர் படையெடுத்த போதும் அண்ணா பேசினார். நேருவும் கேட்டார்! சென்னை வானொலியில் பேசிய அவரது ஆங்கில உரை டில்லியிலிருந்து ஒலிபரப்பப்பட்டபோது உலகெங்கும் ஒலித்தது. அவரைத் தூற்றியே ஊர் சுற்றித்திரிந்த தமிழ்நாட்டு அமைச்சர்களும் வெட்கித் தலை குனிந்தனர். பேச்சுரிமையைப் பறிந்து தடை மசோதா நிறைவேற்றப்பட்டபோது முன்னேற்றக் கழகத்தைப் புரிந்து கொள்ளாதவர்களைப் பார்த்து அண்ணா நான்கு செய்திகளைச் சொன்னார்.

1. குசைளவடல லடிர யஎந டிவ ரனேநசளவயனே வாந யீசடிடெநஅ. 2. ளுநஉடினேடல லடிர யஎந டிவ யயேடணைளநன வாந யீசடிடெநஅ. 3. கூசைனடல லடிர யஎந டிவ யீரவ யடவநசயேவஎநள, யனே குடிசவாடல லடிர யஎந டிவ வயமந வாந யீநடியீடந வேடி உடிளேனைநஉந.

என்றெல்லாம் பாராளுமன்றத்தின் ஆதிபத்திய நடவடிக்கைகளைக் கண்டித்தார் - கேட்டார், முது பெரும் கிழட்டுத் தலைவர்கள் மூலை தேடி ஓடினர்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரும்பணியை உலகத்தவர் ஏற்றுக்கொள்ளும் வகை செய்ய அண்ணாவின் ஆங்கிலம் அருமையான கருவியாகும். திருப்பரங்குன்றம் மாநில மகாநாட்டின் போது அண்ணா அவர்கள் தனது தலைமையுரை, முடிவுரைகளைக் குறிப்புகளை வைத்தே விளக்கினார். அந்தக் குறிப்புகளை ஆங்கிலத்தில் கண்டபோது நான் திகைத்தேன். செய்தியாளர்களுக்கு விளக்கம் தந்தபோதும்: ஆங்கிலத்திலேயே தந்தார். அண்ணாவின் சுந னுளைஉடிஎநசல டிக னுசயஎனையயேன என்னைக் கவர்ந்த கட்டுரைகளிலே முதலிடம் பெற்றதாகும். சுநஅநஅநெச! ரெவ ஊயசசல டி என்ற புத்தகமும் பம்பாய் தி.மு.க.வினர் வெளியிட்டுள்ள ஞடிளவ டீககஉந ளுடிஉயைடளைஅ என்ற ஏடும் எல்லோரது கரங்களிலும் இருக்கவேண்டியவைகளாகும்!

அறிஞர் அண்ணா அவர்களின் ஆங்கிலக் கட்டுரைகள் புத்தக உருவிலே வெளியிடப் படவேண்டும். அவரது எழுத்துக்கள் மீண்டும் கிழமைதோறும் கிடைக்கவேண்டும். மராட்டியத்திலும் குஜராத்திலும் நான் சந்தித்த பல நண்பர்கள் இதனைத் திரும்பத் திரும்ப வலியுறுத்தினர். னுஆமு அயசஉநள டி என்று அண்ணா சொல்லும் போது, எங்கே என்று எதிரிகள் திகைக்கின்றனர்! அடக்கு முறைகள் வரும்போது னுஆமு ஊய வயமந வை என்று அறிவிக்கும்போது கற்றவர்கள் அண்ணாவின் சுவையான கட்டுரைகளை மீண்டும் கண்டு மகிழட்டும்.
(12.12.1965 - திருவிளக்கு)

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai