அண்ணாவைப் பற்றி அறிஞர்களும் / ஆய்வாளர்களும்
( டாக்டர். அண்ணா பரிமளம் )
பாகம் -21

அண்ணாவின் கோபம்
(தில்லை வில்லாளன், எம்.ஏ. பி.எல். - முன்னாள் எம்.பி.)

அண்ணாவுடன் நெருங்கிப் பழகும் தம்பியராகிய நம்மில் பலருக்கு அவரிடம்ன கோபம் வந்திருக்கும். அதுபோல அண்ணாவுக்கும் சிலரிடம் கோபம் வந்திருக்கும். மற்ற கோபங்களுக்கும், இக்போத்திற்கும் நிரம்ப வித்தியாசம் உண்டு. அண்ணா அகாபமாக இருக்கிறார் என்றால் அவரது நெற்றிப் புருவங்கள் மட்டுமே பேசும் - வாய் பேசாது! தம்பிமார்கள் தவறு செய்கிறபொழுது, திருந்தக் கையாளும் ஆயுதம், இந்த மௌனம்தான். ஆனால் அந்தக் கோபம் சான்றோர் கோபமாயிற்றே - நீண்ட நேரம் நிலைத்திருப்பதில்லை. நீரில் அம்பு புகுந்து ஏற்பட்ட வடுவுபோல் மாறிவிடும்.
நான் இரண்டு மூன்று தடவை கோபித்துக்கொண்டு பேனாவிடமும், மையிடமும் ஓடியிருக்கிறேன். எழுதவும் படிக்கவும் தெரிந்த இளைஞர்களுக்கு, நேரடியாகக் கூற முடியாத நிலை ஏற்பட்டால், உடனே பேனாவிடமும், தாளிடமும் தமது கோபத்தைக் காட்டிவிடுவர். அப்படி நான் காட்டி இருக்கிறேன். அண்ணா சிறுவர் மன நிலை தெரிந்தவராகையால் அம்மாதிரிச் சம்பவங்களைக் கவனத்தில் கூட வைத்துக்கொள்வதில்லை. எழுதிய நாம்தான் அவரைச் சந்திக்கிறபொழுது வெட்கப்படவேண்டும்.
அண்ணா, தனிப்பட்டவர்களுக்குக் கடிதம் எழுதுவதென்பது அபூர்வமான காரியங்களில் ஒன்று. இதைப் பார்த்த பிறகுதான், மன நிலை மாற்றங்களை வைத்து பேனாவிற்கும், மையுக்கும் அடிமையாகக் கூடாது என்று பாடத்தைப் பெற்றேன்.
அண்ணாவின் கண்டிப்பு முறை அலாதியானது. தவறு செய்வதர்களை நேரடியாகக் கேட்கமாட்டார். ஆனால் அந்தத் தவறைக் கண்டித்து, வேறு சிலரிடம் பேசுவார். அவருக்குத் தெரியும், இந்தக் கண்டனம், தவறு செய்தவருக்கு எட்டிவிடுமென்று. அப்படி சிலரை அஞ்சல் பெட்டியாக்கிக் கண்டனங்களை அனுப்புவார். நேரடி விசாரணை மிகக் குறைவு. ஆனால் அப்படி ஒன்றிரண்டு விசாரணைகளை நேரில் கண்டிருக்கிறேன். அவை மிகவும் கடுமையான விசாரணையாக இருக்கும் சொல்லடியும், பார்வை இடியும் தாங்கக் கூடியதாக இருக்காது.

மனிதருள் மாணிக்கம்
(இராம. அரங்கண்ணல்)

எட்டயிருந்து சசிக்கும்போது தென்றலாகவும், தேனாகவும் தென்படும் அரசியல் தலைவர்கள், நெருங்கிப் பழகும்போது நெருப்பாகவும் நெருஞ்சிமுள்ளாகவும் தென்படுவார்கள் என்கிற கொதுக்கூற்று உண்டு. கொஞ்ச நாட்கள்தான் பெரியார் அருகில் இருந்திருக்கிறேன். தெய்வம் என்கிறார்களே அதைவிட மேலான இடத்தில் என் உள்ளத்தில் நான் அவரை வைத்துத்தான் பார்ப்பேன், நடப்பேன். ஆனால் அத்தெய்வமும், நான் ஒரு மனிதன் என்பதைக் காட்டத் தவறவில்லை! அந்த அச்சத்தோடுதான், நான் திராவிட நாடு அலுவலகத்தில் அடியெடுத்து வைத்தேன். ஆண்டுகள் பத்துக்குமேல் ஓடிவிட்டன! அண்ணா, வில சமயங்களில் தெய்வமாகவும் விளங்குகிறார், சில சமயங்களில் மனிதனாகவும் இருக்கிறார். தெய்வமாக இருக்கும்போதும், மனிதத் தன்மையை இழந்துவிடுவதில்லை! மனிதனாக இருக்கும்போது உயர்ந்த பண்புகளை இழந்துவிடுவதில்லை! அறிவுரைகளைத் தரும்போதும், பிரச்சனைகளை அவர் அணுகும் இடத்திலும் திராவிட சமூகத்தைக் கட்டிக் காக்கக்கூடிய ஒரே தலைவன் என்று விளங்குகிறார். அரங்கண்ணல்! சாப்பிட்டாயா? குழந்தை அசாகன் எங்கே? அப்பா ஊருக்குப் போனாரா? என்று சொங்தப் பேச்சுக்களைப் பேச்சுக்களைப் பேசும்போது குடும்பத்தில் ஒருவராகி, நம்மைப் போல ஒருவர் ஆகிறார். தலைவர் என்பதாலே குடும்ப பாசத்தை மறப்பதில்லை! குடும்ப பாசம் காட்டிவிட்டால் போதும் ஏனைய பொதுப் பிரச்சனைகளை வேறு விதத்தில் அறகலாம் என்றும் இருப்பதில்லை!
அங்கே அவர் தலைவர்! இங்கே அவர், என் போன்றோருக்கு அண்ணா!! தலைவராகவும், அண்ணனாகவும் அறிஞராகவும், அன்பராகவும், மேதையாகவும், மேன்மை தங்கிய குடும்பப் பெரியாராகவும், மேதையாகவும், மேன்மை தங்கிய குடும்பப் பெரியாராகவும், ஒப்பற்றவராகவும் உள்ளங்களை ஆள்பராகவும்; இந்த உலகிலேயே அவர் ஒருவர்தான் அரசியலில் உலவுகிறார்! தலைவனானதால், மனிதனுக்குத் தேவையான தன்மைகளை இழுந்தோருண்டு. அதனால்தான் அப்படிப் பட்டவர்களுடைய தலைமை நீண்ட நாட்கள் நீடிப்பதில்லை. ஆனால் அண்ணா முற்றிலும் மாறுபட்டவர். தலைவர்க்குத் தலைவர்; அதே சமயம் மனிதருக்குள் மாணிக்கம். அவர் வானத்திலேயே நினைவுகளைப் பதித்துவிட்டு, பூமியை மறப்பதில்லை! பூமியில் உழல்கிறோம் என்பதாலேயே பொதுப் பிரச்சனைகளை விட்டுவிடுவதில்லை!
அதனால்தான் அவரால் இலட்சோப இலட்சம் இதயங்களிலே கண்கண்ட கடவுளைப் போலவும்; அதே சமயம் தங்களுடன் உலவும் ஒரு அண்ணனைப் போலவும் விளங்க முடிகிறது.
இந்த உயர் தனிச் சிறப்பு அவருக்கு உரியது! அவரை நெருங்கியப் பழக ஆரம்பித்தோர் பிரிவதில்லை; சந்தித்துத் தொடர்பு கொட்டோர் சலிப்பதில்லை; தூரத்திலிருந்து பார்க்கும்போது தென்றலாகத் தென்படுகிறது, அருகே வந்து பழகப் பழகத் தென்றல் மட்மல்ல இது ஓர் தேனருவி என்று கூறும் வகையிலே திளைக்கின்றனர்! எளிதில் வசமாகிவிடுகின்றனர்! இந்தப் பத்தாண்டுக் காலத்திலே, நானும் நினைத்து பார்க்கிறேன், அவர் என் மனம் புண்படும்படி ஏதாவது சொல்லியிருக்கிறாரா என்று; கவனத்து வருவதெல்லாம் அவர் உளளம் நோகும்படி நான் செய்துள்ள தவறுகள்தான்!!

அண்ணா, நீ ஆளுகவே!
(பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார்)
பண்ணார்ந்த தமிழுலகம் பாடுகின்ற பாண்ணாகி,
எண்ணார்ந்த தமிழரகளின் இனியகனா நடையாகி,

விண்ணார்ந்த கலைப்புகழின் வேட்பாளராம் கலைஞர்
அண்ணாந்து நோக்குகின்ற அண்ணா நீ வாழியவே
எண்ணக்கோல் பிடித்தெழுதும் எழுத்தாளர் உலகதனின்
எண்ணங் கலந்த இதயங்கொள் எழுத்தாள!

 
 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai