அண்ணாவைப் பற்றி அறிஞர்களும் / ஆய்வாளர்களும்
( டாக்டர். அண்ணா பரிமளம் )
பாகம் -15

அண்ணா
ஏ.கே.வில்வம்

ஒரே வாயில் இரண்டு நாக்குகளையும் ஒரே உடம்பில் இரண்டு இதயங்களையும் வைத்துக்கொண்டு வாழும் அதிசயப் பிறவிகள், கொசுக்கூட்டம் போல் உலவிக்கொண்டிருக்கும் ஒரு நாட்டில், ஒரே நாக்கும் ஒரே இதயமும் பெற்றிருந்த ஒருவர், வறுமையின் அழுத்தத்தையும், வன் கண்ணாளர்களின் அலட்சியத்தையும், குறைமதியினரின் எதிர்ப்புகளையும், அரைகுடங்களின் ஏசல்களையும், அளவிட முடியாத அசாதாரணப் பொறுமையுடன் தாங்கிச் சமாளித்து, அரசியலில் ஊர்ந்து உயர்ந்து, தன் அறிவையே தனது வளர்ச்சிக்கு முதலீடாக வைத்து, ஆற்றலையும் அன்புள்ளத்தையும் பக்க பலமாக்கிக்கொண்டு ஒரு இருபது ஆண்டுகளில், தமிழகத்தில் தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லையென்ற நிலையை ஏற்படுத்தி, தான் தொட்ட ஒவ்வொரு துறையிலும் தனக்கென ஒரு பாரம்பரியத்தை உருவாக்கிவிட்டு, புகழ் கோபுரத்தின் உச்சியிலே நின்று, இந்தியத் தணைக் கண்டத்திற்கே ஒளிகாட்டிய வல்லமையை இந்த இருபதாம் நூற்றாண்டில் ஒரு தனி மனிதர் பெற்றிருந்தார் என்றால் அந்தப் பெருமகனின் திருப்பெயர்தான் பேரறிஞர் அண்ணா என்று பெருமித்ததுடன் கூறுகின்றார்கள் சரித்திரக்காரர்கள்,

ஒரு ஸ்தாபனத்தை உருவாக்கி, அந்த ஸ்தாபனத்திற்கு தனது அறிவாற்றலை, குண நலர்களை, தனித் தன்மைகளை எருவாக்கிவிட்டு, மறைந்தவர்களைத்தான் விசேஷ மரியாதையுடன் விமர்சிக்கின்றார்கள் சரித்திரக்காரர்கள்.

ஹயே றடைட யடறயலள நெ சநஅநஅநெசநன வாந ழளைவடிசல டிக ஐனேயை யள ஞயவசடிவ, ய ளடநகடநளள ளநசஎயவே டிக கூயஅடை யீநடியீடந யனே ய பசநயவளடி டிக கூயஅடையேனர.

இந்திய வரலாறு அண்ணா ஒரு தேசபக்தர் என்பதையும் தன்னலம் துறந்து தமிழ் மக்களுக்குத் தொண்டாற்றிய தமிழகத்துப் பெருமகன் என்பதையும் என்றென்றும் நினைவு கூறும்

சாகர் அலுவாலியா என்பவர் ஹயே வாந கூநஅயீநளவ யனே வாந ளநய என்ற வரலாற்று நூலில் அண்ணாவைப் பற்றி இப்படிக் குறிப்பிடுகின்றார்;

அண்ணா என்ற சான்றாண்மைத் தமிழ் மகனைச் சாவு அணைத்துக் கொண்டபோது, இந்தியக் குடியரசின் அப்போதையத் தலைவர் டாக்டர் ஜாகீர் உசேன் அவர்கள், அண்ணாவை ழுசநயவ டநயனநச என்று விளித்து, அவரின் மறைவு ஹசைசநயீயசயடெந டடிளள டிவ டிடேல வடி கூயஅடையேனர ரெவ வடி வாந றாடிடந டிக ஐனேயை
மாபெரும் தலைவரான அண்ணாவின் இழப்பு தமிழக்திற்கு மட்டுமல்லாமல் இந்தியத் துணைக் கண்டத்திற்கே இட்டு நிரப்ப முடியாத இழப்பாகும் என்று மனம் கசிந்து தமது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்தார்கள்.

க்ஷநடடிஎநன டுநயனநச டிக வாந யீநடியீடந மக்களின் அன்புக்கு உரிய தலைவர் என்று கூறி அண்ணாவின் புகழ் மகுடத்தில் தமது இரங்கல் காணிக்கையை இணைத்தார்.

புகழ்க் கதிர்
சா.கஜேந்திரன்

இறவாப் புகழ் எய்தி மீளாத் துயிலில் நம்மையெல்லாம் பரிதவிக்கவிட்டுச் சென்றுவிட்ட அறிவுலக மேதையோடு தொடர்புடைய இரண்டு நிகழ்ச்சிகளை தென்னகம் வாசகர்களிடம் கூறிச் சரித்திரத்தில் சாகா நிலை பெற்றுவிட்ட பேரறிவாளர் தம் பிறந்த நாளில் இப்பெரு மகனாருக்கு என் இதய காணிக்கையைச் செலுத்தி அஞ்சலி செய்திட விரும்புகிறேன்.

1944-ஆம் ஆண்டு மதுரையிலே சந்திரோதயம் நாடகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நாடகம் முதன் முதலில் நடத்திக் காண்பிக்கப் பட்டது வட ஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த திருவத்திபுரத்தில்! மதுரை நாடகத்திற்கு விருதுநகர் நீதிக்கட்சித் தலைவர் திரு.வி.வி.ராமசாமி அவர்கள் தலைமை ஏற்பாரென்று அறிவுக்கப்பட்டிருந்தது. அவ்வமயம் நாடகத்தை முன்னின்று நடத்தியவர்களுள் பழம்பெரும் நீதிக் கட்சித் தொண்டர் திரு.சி.எம்.வேணுகோபால் என்பாரும் ஒருவராகத் திகழ்ந்தார்.

மதுரையில் நடைபெறவிருந்த நாடகத்திற்குச் செல்லவேண்டுமென்ற எண்ணம் எனதுள்ளத்தில் தோன்றியவுடனே அதை அய்யாவிடம் தெரிவித்தேன். உன்னால் டிராமா, சினிமா பார்க்காமலிருக்க முடியாது என்று வழக்கம்போல் அறிவுரை வழங்கிய பெரியார் தமக்கே உரித்தான பாணியில் சரி போய்வா; பாரதிதாசன் கவிதைகள் நூறு புத்தகங்கள் எடுத்துக்கொண்டு போ என்று பணித்தார்.

பாரதிதாசன் கவிதைகள் என்ற நூலினை முதன் முதலில் பதிப்பித்து வெளியிட்டவர் தோழர் எஸ்.குருசாமி; பிற்காலத்தில் குத்தூசி குருசாமி என்று திராவிடர் கழத்தில் குறிப்பிடத்தக்க பிரமுகராகவும், விடுதலையின் தலையங்க எழுத்தாளராகவும் விளங்கியவர். அதனை அதிக பக்கங்களுடனும் முதல் பதிப்பில் வராத கவிதைகளுடனும் குடியரசு வெளியீட்டகம் இரண்டாவது பதிப்பாக ரு.1.40 விலையில் 1944-ஆம் ஆண்டில் வெளியிட்டது எங்கு அய்யா சொற்பொழிவாற்றச் சென்றாலும் அங்கு கடைபரப்பி குடியரசு பகுத்தறிவு வெளியீடுகள் விற்கப்படுவது வாடிக்கை. அந்த நாட்களில் ஈரோட்டுப் பாசறையிலிருந்து வெளிக் கிளம்பும் நூல் எதுவுமே பார்க்க ரம்மியமாயிருக்காது. கண்கவர் வனப்பு அற்ற மிக சாராதணத் தாளில், விலை குறைவான மையில் மங்கலான அச்சில், ஆனால் மிகக் குறைந்த விலையில் அது வெளியிடப்படும், ஆலையில்லா ஊருக்கு இலுப்பப்பூ சர்க்கரை என்பதிற்கொப்ப சுயமரியாதை இயக்கக் கடவுள் மறுப்பு பார்ப்பன வெறுப்பு கருத்துக்களைத் தாங்கி நூல்கள் பிரசுரிக்க வேறு நிலையான பதிப்பகம் நாட்டிலே இல்லாதிருந்த காரணத்தால் அந்நாட்களில் குடியரசு பகுத்தறிவு வெளியீடுகளுக்கு முற்போக்கு எண்ணங்கொண்ட படித்தவரிடையேயும் பாமரரிடையேயும் ஏகப்பட்ட கிராக்கி இருந்துவந்ததென்பது கண்கூடு. ஆனால் வழக்கமாக வெளியிடப்பட்டு வந்த சாதாரண நிலைக்கு மாறாக பாரதிதாசன் கவிதைகள் என்ற நூல் மட்டும் ஓரளவு அந்தக் காலத்துத் தரத்தை வைத்து நோக்குங்கால், கவினுறு படைப்பாய் விளங்கி நின்றது.


அழைக்கின்றார் அண்ணா!
அ.பொன்னம்பலனார்

பொது வாழ்க்கையில் முப்பத்தைந்து ஆண்டுகள் தொடர்புகொண்டுள்ள நான், நம் அண்ணாவைப் பொது வாழ்க்கையில் கட்டாய இந்தி எதிர்ப்புக் காலத்தில் தமிழகம் முழுதும் சுற்றுப் பயணம் செய்ய அழைத்தேன். தமிழ் நாட்டு மக்களுக்கு நல்லதொருவிழிப்புணர்ச்சி ஊட்டினார்கள். விடுதலைப் பத்திரிகை ஆசிரியர் பொறுப்பேற்றுப் பணியாற்றிட வேண்டி விரும்பி அழைத்த காலத்தில் அன்புடன் வந்த, நற்பணியாற்ற ஆக்கமும் ஊக்கமும் தந்தார்கள் அண்ணா! அது முதல் இதுவரை நம் அண்ணா பொது வாழ்க்கையில் நல்லதொரு சிறந்த இடத்தைப் பெற்றது எனக்கு அளவில்லா மகிழ்ச்சி.

அறிஞர் அண்ணா போன்ற எண்ணமுள்ள நல்ல உள்ளம் படைத்தவர்களையும், எதிர்கால ஆக்க இளைஞர்களையும் தமிழத்தில் நாம் உழைப்பின் பயனாகப் பெற்றோம். நம் உழைப்பு வீண்போகவில்லை. நம் முயற்சியும் உழைப்பும் இறுதியில் வெற்றி பெற்றே தீரும் என்ற நம்பிக்கையோடு நம் அண்ணாவின் அன்பழைப்பை மகிழ்வுடன் ஏற்றுப் பணியாற்றுகின்றோம். நம் பணி தமிழகம் தென்னகம் மட்டுமின்றி கடல் கடந்து வாழ்ந்திடும் நம் மக்கள் உள்ளத்திலும் இடம் பெற்று நம் அண்ணார் புகழ் ஏகிப் பாராட்டி வாழ்த்தப்படுகின்றார். நம் அண்ணா அழைக்கின்றார்! திரண்டு வாரீர், திராவிட நாடு திராவிடருக்கே என்ற நிலைபெற உழைக்க வாரீர். அறிஞர் அண்ணாவின் அழைப்பை மகிழ்வுடன் ஏற்று பணிபுரிய வாரீர். வாழ்க அண்ணா என்ற மீண்டும் வாழ்த்துகிறோம்.

நம் அண்ணாவிற்கு வயது ஐம்பது ஆண்டு முடிவடைந்து ஐம்பத்தி ஒன்றாம் ஆண்டில் புகுந்திடும் இந்த சமயம் நாம் அண்ணாவின் உழைப்பையும் திறமையையும் பாராட்டி வாழ்த்தி மகிழ்ந்திடுவோம். நம் அண்ணாவைத் தூற்றியும் பொது வாழ்க்கையில் தலையிடாமல் செய்திடத் திட்டம் தீட்டியும், இழிவாகப் பேசியும், எழுதியும் உண்மையை மறைத்துப் பொய் கூறியும் பொதுமக்களிடம் தவறாகப் பிரச்சாரம் செய்வதும் இறுதியில் தோல்வி கண்டவர்கள் பலர். அவர்களில் தங்கள் தவறை உணர்ந்து திருந்தியவர்களுமிருக்கிறார்கள்.

மக்கள் இருள் நீக்கவந்த உதய சூரியனாகக் காட்சி தரும் அறிஞர் அண்ணா வாழ்க, திராவிட மக்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் காண ஓயாது உழைக்கும் முத்தமிழ் வளர்த்திடும் காஞ்சி தந்த கருவூலம் எங்கள் அண்ணா, இன்பத் திராவிடம் கண்டிடத் துடிக்கும் எங்கள் உள்ளம் நிறைந்த அண்ணா வாழ்க, வளம் பல பெற்று வாழ்க என்று மன மகிழ்வுடன் அன்புடன் வாழ்த்துகின்றோம்.
(19.09.1959 - தென்னகம்)

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai