அண்ணாவைப் பற்றி அறிஞர்களும் / ஆய்வாளர்களும்
( டாக்டர். அண்ணா பரிமளம் )
பாகம் -11

அண்ணாவும் எமிலிஜோலாவும்
அல்லது
(மனிதநேயம்)

புதுவை மு.ந.நடராசன்.
பொருளாளர், பகுத்தறிவாளர் கழகம், புதுவை உள்ளிட்ட தமிழகம்

எழுத்துவேந்தன் எமிலிஜோலா, பிரான்சு நாட்டின் இதழாசிரியர், வழக்கறிர, மிகச் சிறந்த மனிதாபிமானி. அவன் நடத்திய இதழ்கள், அகோரி, பிகாரோ. பிரான்சு நாட்டில் விபச்சார தடைச் சட்டம் போடப்பட்டது. அதன் காரணமாக நாநா என்கிற விபச்சாரி காவல் துறையினரால் துரத்தப்பட்டு, தப்பி வரும்போது, ஒரு சிற்றுண்டிக் கடையில் எமிலிஜோலாவும் அவர் நண்பர் செஸாநோவும் உணவருந்திக் கொண்டிருந்தனர். ஓடிவந்த நாநா எமிலிஜோலாவிடம் தங்சம் அடைகிறாள். எமிலிஜோலா வந்தவளை என்னவென்று விபரம் கேட்கிறார். நாநா தன் வாழ்க்கை வரலாற்றை சொல்கிறாள். காவலர்கள் நெருங்கி வருகிறார்கள். கைது செய்ய முயற்சிக்கிறார்கள். உடனே எமிலிஜோலா, அவளைத் தொடாதீர்கள், அவள் என் அன்பார்ந்த மனைவி. அவளை கைது செய்ய தேவையில்லை என்று மறுக்கிறார். பிரான்சின் சட்டப்படி ஒரு பெண்ணுக்கு ஒருவர் பாதுபாப்பளித்தால், அவளை எந்தக் குற்றத்தின் மதும் கைது செய்யக்கூடாது என்பது நிலை. காவலர்கள் திரும்பிவிட்டனர். அன்புள்ள நாநா, நீ ஏன் இந்த தொழிலில் ஈடுபட்டாய்? என்ன காரணம்? என்று எமிலிஜோலா கேட்கிறால். அவள் தன் குடும்ப சூழ்நிலை, வயது வந்த பெண் தனிமையில் இருப்பதால் வரும் கேடு, வறுமை ஆகியவற்றை எடுத்துச் சொல்கிறாள். அனைத்தையும் கவனமாக கேட்டுக்கொண்டிருந்த எமிலிஜோலா மனம் குமுறிப்போய், அவளையும், அவள் பிரச்சினைகளையும் வைத்தே ஒரு நூல் எழுதினார். அதன் பெயர்தான் நாநா அதன் மூலம் எமிலிஜோலா பிரான்சு நாட்டின் எழுத்து வேந்தன் ஆனார். அப்படி என்னதான் எழுதினார்?

விபச்சாரத்தை ஒழிக்காமல் விபச்சாரியை ஒழிக்க முடியுமா?
பிச்சையை ஒழிக்காமல் பிச்சைக்காரனை ஒழிக்க முடியுமா?

குற்றம் இருப்பதால் குற்றவாளி தோன்றுகிறான். வறுமையின்றி வாழ முடியாதவன் திருடனாகிறான், கொள்ளைக்காரனாகிறான், கொலைகாரனாகிறான் என்று ல்லி மக்களை சிந்திக்க தூண்டினால். அப்படிப்பட்ட எமிலிஜோலாவுக்கு ஒரு வழக்கு வந்து சேர்ந்தது. பிரான்சு நாட்டின் தலை சிறந்த தளபதி ட்டைபஸ் பிரான்சின் பலபோர்களில் தன் நாட்டுக்கு வெற்றி தேடித்தந்தவன். பிறப்பால் அவன் ஒரு யூதன். அவன் வாழ்ந்த காலத்தில் உலகம் முழுவதும் யூத எதிர்ப்பு மிக கடுமையாக இருந்தது. அதன் தாக்கம் பிரான்சு நாட்டிலும் எதிரொலித்தது. யூதனொருவன் நம் நாட்டுக்கு தளபதியாய் இருப்பதா? என்று பொறாமை கொண்ட சிலபேர் தவறான குற்றச்சாட்டுகளை சுமத்தி, ட்ரைபசுக்க இராறவ நீதிமன்றத்தால் தண்டனையளிக்கப்பட்டு டெவில்ஸ்தீவில் சிறையிலடைக்கப்பட்டான். மனைவி, மக்கள், உடன் பிறந்தோர் கதறியழுதனர் . . . வழிவகை தெரியாமல்? செய்தி எமிலிஜோலாவின் காதுகளை எட்டுகிறது. முன்பின் சந்தித்திராத மனிதன் ட்ரைபஸ். ஓர் மனிதனுக்கு அதுவும் குற்றமற்றவனுக்கு குறிப்பாக பிரான்சு நாட்டின் பல வெற்றிகளுக்கு காரணமானஇ நல்ல நிர்வாகிக்கு, அவன், யூதன என்ற ஒரே காரணத்தால், நாம் வாழும் நாட்டில், நம் காலத்தில் இப்படி ஒரு அக்கிரமமா? என்று ஆர்த்தெழுந்தால். கறுப்புடை அணிந்து நீதிமன்ற நெடிய படிக்கட்டுகளில் ஏறி தன் வறுமை நிலையைக்கூட பொருட்படுத்தாமல் பசியையும், பிணியையும் பொறுத்துக்கொண்டு, நாம் மனிதன் என்று நிலைநாட்டவேன்ண்டும், எனும் குறிக்கோளோடு இராணுவ நீதிமன்றத்தில் வாதாடி, ட்ரைபசுக்கு வெற்றித் தேடித்தந்து விடுதலையடைய செய்தார். விடுதலை பெற்ற ட்ரைபஸ் இழந்த பொறுப்பினை மண்டும் பெற்று அவசர அவசரமாக எமிலிஜோலாவைக் காண வருகிறான். எமிலிஜோலா பிணமாகி கிடக்கிறால். இறுதி சடங்கு நடைபெறுகிறது. மனித நேயகாவலன் எமிலிஜோலா மறைந்தார்.

இதோ நம் பேரறிஞர் அண்ணா, முதல்வரான ஓராண்டில் அமெரிக்க யேல் பல்கலைக் கழகத்தில் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைக்கப்படுகிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுவிட்டு அய்ரோப்பிய நாடுகளுக்கு வருகிறார். இத்தாலியில் வாட்டிகன் சிட்டிக்.கு செல்கிறார். உலகில் நூற்றி அய்ம்பது கோடிக்கும் மேலான கிறித்துவர்களின் நம்பிக்கை நட்சத்திரமாம் போப்பை சந்திக்கிறார். போப்பவர்கள் அண்ணாவின் ஆங்கில புலமை, அவரின் எளிமை, தோற்றப் பொலிவு கண்டு மகிழ்ச்சி அடைகிறார். அண்ணா அவர்கள் நான் தங்களை சந்திக்க வந்ததில் ஒரு முக்கியமான செய்தி ஒன்றுண்டு. அதை தாங்கள் முடித்துத் தரவேண்டும் என்று வேண்டுகிறார். போப் அவர்களும் என்னாலானதை செய்கிறேன் என்ற உறுதியளிக்கிறார். அண்ணா அவர்கள் கோவாவின் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட ரானடே எனப்படும் உடன் பிறப்புகள் இருவர் போர்ச்சுக்கல் நாட்டில் லிஸ்பன் சிறையில் வாடிக்கொண்டுள்ளனர். கோவா விடுதலை பெற்று பல ஆண்டுகள் ஆகிவிட்டது. எனவே, அவர்களை விடுவிக்க தாங்கள் ஆவண செய்யவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். போப் அவர்கள் அண்ணாவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு உறதியளிக்கிறார். விடுதலைக்கு அரசாங்க சடங்குகள் முடிய மூன்று அல்லது நான்கு மாதங்கள் ஆகும். அதுவரை பொருத்து கொள்க என்று போப் கேட்டுக்கொள்கிறார். அண்ணா மகிழ்ச்சியும், நன்றியும் தெரிபித்து திருக்குறள் ஆங்கலப் பதிப்பையும், தஞ்சாவூர் தட்டையும், காஞ்சிபுரம் பட்டாடையும் அன்பளிப்பாக அளித்துவிட்டு விடைபறுகிறார். அதன்பின் பேரறிஞர் அண்ணா அவர்கள் நோயின் ஆதிக்கத்தால் சில மாதங்களில் இயற்கையடைகிறார். அண்ணா அவர்கள் ரானடே சகோதரர்களை நேரில் கண்டவரல்ல! கோவாவின் விடுதலை போராட்ட நிகழ்வுகளை ஏட்டில்தான் படித்தார். அதன் மூலம் அறிந்தவற்றை வாய்ப்பு கிடைத்தபோது மனித நேய பற்று இருந்த காரணத்தினால், யார், எவர் என்கிற பேதமில்லாமல், மனிதனை மனிதன் மதிக்கவேண்டும் என்கிற கண்ணியத்தோடு கடமையாற்றினால். விடுதலை பெற்ற ரானடே சகோதரர்கள் சென்னை வந்து தமக்கு விடுதலை பெற்றுத் தந்த அண்ணாவை படமாகத்தான் பார்க்கமுடிந்தது. மனித நேயம் அண்ணாவிடம் இருந்தது.

ஆனால், விளம்பரம் வெளிச்சம் பெற்ற மகாத்மாக்களின் நிலையென்ன? விடுதலை போராட்டத்தில் கோகலே மிதவாதி, திலகர் தீவிரவாதி, வெள்ளையனை போரிட்டுத் துரத்தவேண்டும் என்கிறார்! சுபாஸ் சந்திரபோஸ். அதைப்போல பகவத்சிங் வெள்ளையனை புரட்சி செய்து விரட்ட வேண்டும் என்று அதற்கான, திட்டம் வகுத்து செய்லபடுகிறார். ஆக, அனைவரின் நோக்கமும், வெள்ளையனை விரட்டவேண்டும் என்பதுதான். பாலகுரு, பகவத்சிங், சுகவேவ் மூவரும் இளைஞர்கள், வாலிப பருவத்தைத் தாண்டாதவர்கள், இளைஞர்களுக்கே உரித்தான நிலையில் அவர்களின் நடவடிக்கை அமைந்தது. ஆனால் தேசப்பிதா செய்ததென்ன? அப்போது இருந்த இந்திய தலைமை அதிகாரி வைஸ்ராய் இர்வின் பிரவு(அவருக்கு மேல் பதவி கிடையாது) பகவத்சிங், சுகதேவ், பாலகுரு மூவர்க்கும் லாகூர் சதி வழக்கு என்கிற பெயரால் குற்றம் சாட்டப்பட்டு தூக்குத் தண்டனை தரப்பட்டு சிறைக்காவலில் உள்ளனர். இடைப்பட்ட (30 நாட்களில் காலத்தில் மகாத்மா காந்தியார், இர்வின் பிரபு அவர்களை மூன்று முறை சந்திக்கிறார். செய்தியாளர்கள் வைஸ்ராய் இர்வினை சந்தித்து இளைஞர்களான மூவருக்கும் கருணை அடிப்படையில் தூக்குதண்டனையை குறைத்து ஆயுள் தண்டனையாக்கக் கூடாதா என்று கேட்கின்றனர். அதற்கு இர்வின் அளித்த பதில், காத்தியார் கேட்டுக் கெண்டால் ஆவணச் செய்கிறேன் என்றார். ஆனால் காந்தியார் மௌனம்தான் சாதித்தார். இருவருக்கம் நேசம் வளருகிறது. இர்வினை காந்தி மகாத்மா என்கிறார். காந்தியை, இர்வின் மகாத்மா என்கிறார் ஏனோ இரண்டு மகாத்மாக்களம் சேர்ந்து மூன்று சாதாரண ஆத்மாக்கள் பற்றி கவலைப்படவில்லை. காந்தியார் நினைத்திருந்தால், இர்வின் பிரபுவிடம் சொல்லி, தூக்கு தண்டனையை குறைந்தளவு ஆயுள் தண்டனை என்கிற அளவுக்காவது குறைத்திட முடியும்! செய்தார்களா? காத்தியார் அதற்கான முயற்சி எடுத்தாரா? தனக்கு நேராக தொடர்பில்லாத பிரச்சனைக்கு தீர்வு கண்டவர் வேரறிஞர் அண்ணா! எமிலிஜோலா! தன்நாட்டில்தான் கலந்துகொண்ட விடுதலைபோராட்டத்தின் ஒரு பகுதிதான் பகவத்சிங் குழுவினரின் தீவிரவாத போராட்டம். வயதோ 25 வயதுக்குட்பட்டவர்கள், தண்டனை தந்தவர்களே குறைக்க முன்வந்தும் மகாத்மா மனம்பிரங்கவில்லை. சாதாரண ஆத்மா அல்லவே! மகாத்மா ஆயிற்றே! எனவே மனிதாவிமானம் என்பது யாரிடம் இருந்தது? யாரிடம் இல்லை? விடை உங்களிடம்!

வாசகர்களாகிய நீங்கள் தீர்மானித்துக் கொள்ளுங்கள். இந்நாட்டு பத்திரிக்கைக்காரன் நினைத்தால், தூணை துரும்பாக்குவான்: யானையை எறும்பாக்குவான், கடுகை கடப்பாரையாக்குவான், இதுதான் பார்ப்பன பத்திரிகா தர்மம். தமிழர்களே சிந்தியுங்கள்! உண்மை நிலையை அறிந்துகொள்ளுங்கள்!


அண்ணா கேட்கிறார்
தமிழர் தலைவர் கி.வீரமணி
பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்

பகுத்தறிவு மாமேதை பேரறிஞர் அண்ணாவின் சிந்தனைகள் எப்போதும் சமுதாயப் புரட்சி என்பதையே மையமாக வைத்துச் சுழன்ற ஒன்றாகும். பச்சையப்பன் கல்லூரியிலிருந்துகொண்டு, பச்சை அரசனை பாட நூலக்ளோடு தனிவிருப்பம்கொண்ட விருப்பப்பாட நூல்களாக்கிக்கொண்டே தமிழ்ச் சுமுதாயத்தின் சமூகப் புரட்சிக் கர்த்தாவாம் தந்தை பெரியார் அவர்கள் பால் ஈர்க்கப்பட்டவராக அண்ணா அன்று ஆன நிலையிலிருந்து இறுதி மூச்சு அடங்கும்வரையில் அவர் இந்த இலட்சியத்தினின்று ஒரு அணு அளவில் கூடப் பிறழ்ந்ததே இல்லை!

இன்ற சமுதாயச் சீர்திருத்தம் பேசுவது எளிது. ஏன் சிலருக்கு லாபமானதும் கூட ஆனால் அன்று?

வீட்டிலிருந்து நாட்டுக் கோடி வரை எங்கும் எதிர்ப்பு ஏளனம் என்ற நிலைமைதானே இருந்தது?
வளமை அறிய ஒரு குடும்பத்தில் தலையெடுத்து, கல்லூரி சென்று படித்துப் பட்டம் பெற்ற நிலையில், பதவியும், உத்தியோகமும் மிகவும் எளிதாக(சல்லீசாகக்) கிடைக்கும் நிலை இருந்த அக்காலத்தில் அதனைக் கவனியாது, இலட்சியம் செய்யாது, வீட்டொருக்க ஆற்ற வேண்டிய பணியைவிட நலிந்த நம் நாட்டொரக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஏராளம் என்பதையறிந்து, கசப்பு மருந்து தருவதனாலும், மக்களின் எதிர்ப்பை மலையெனப் பெறுபவர் ஆனாலும் தந்தை பெரியார்தான் தம் ஒரே தலைவர் என்று சென்றவர் என்றால் அவர்தம் சமூகப் புரட்சி உணர்வால் அன்றி வேறு என்ன?

அரசியலோ, பதவியேல அவருக்குத் தேவையென அந்த நாட்களில் அவர் கருதியிருந்திருப்பாரேயானால், அவர் ஒரு கதர் அணிந்த தேசியத்தின் பிரச்சார பீரங்கியாக காமராஜர் அவரோடு அல்லவா சென்றிருப்பார்? சுயராஜ்யத்தின் சொதுசினைத் தீட்டிக் காட்டிடும் பேனா மன்னராக அல்லவா ஆகியிருப்பார்?

அண்ணா அவர்களக்கு அதனால் ஆதாயம் மட்டுமல்ல அகில உலகமும் உடனே கண்டு வியக்கும் அளவுக்கு அபார விளம்பரமும் கூடக் கிட்டியிருக்கும் என்பதில் யாருக்கும் அய்யமிருக்குமோ? இலுப்பைப் பூக்கள் சர்க்கரையாக இனிக்கையில், உண்மையான சர்க்கரையின் மதிப்புப் பெருகியிருக்கும் என்பதில் எவர்தான் இரண்டு கருத்தினைக் கூறமுடியும்?

என்றாலும் அண்ணா அரசியல் பக்கம் செல்ல மனமில்லாமல், மற்றவர் நுழைய அஞசும், புலிவாயில் தலையைவிடும் சர்க்கஸ் வித்தைக்காரரின் தந்தை பெரியாரி சீடகோடியாகச் சேர்வதிலேயே தனித்த ஒரு இன்பங்கண்டார்!

வற்றாத அவர்தம் சிந்தனை ஊற்று, இந்தப் பணிக்காகவே அவருடைய ஆற்றல்களை அத்தனையும் தொகத்துத் தருவதாக அமைந்துவிட்டது!

அண்ணாவின் இறுதி நாட்களில் அவர் விருப்பத்திற்கும், இயல்புக்கும் மாறான வகையில் அவர் அரசியலில் முழு ஈடுபாடு காட்டவேண்டியவரானார் என்பது உண்மைதான். என்றாலும் அவர் தாம் கொண்ட சமுதாயப் புரட்சிக் கொள்கைகளை, லட்சியக் கனைவைச் செயலாக்க அதற்கு முன்னர் அவர் நாடகத்தை திரைபடத்தைப் பயன்படுத்தியது போலவே, அரசியலையும் (ஆட்சியையும்) பயன்படுத்தினார் என்று சொன்னால் அது மிகையாகாது.

சில சந்தர்ப்பங்களில் சமூக சீர்திருத்தம் பேசும் அரசியல்வாதிகளையே கண்டு பழக்கப்பட்ட நம் நாட்டுச் சரித்திரம், பேரறிஞர் அண்ணாவின் (பரம்பரை)மூலம் புதியதோர் வகையினரைக் கண்டு வியந்துவருகிறது.

சமூக சீர்த்திருத்தத்திற்காக அரசியலுக்குச் சென்று வெடித்திடும் இரட்டைக் குழல்களில் ஒன்ற அற்தக் குழல் என்பதை இதயதீமாகச் கொண்டார்கள் அண்ணாவும் அவர் வழிவந்தோரும்.
ஆட்சி இவர்களது இலட்சியமல்ல இலட்சியங்களை நிலைவேற்ற அது ஒரு சக்திவாய்ந்த கருவி என்றே நினைத்து அரசியலை அணுகுபவர்கள்.

அண்ணாவைப்பற்றி, மதிப்பீடு செய்யும் எவரும் - இந்த அம்சத்தை மறந்துவிட்டாலே, அல்லது மறைத்துவிட்டாலோ எந்தப் பயனும் விளையாது.

சட்டமன்றதில் அண்ணா அபசியபோதெல்லாம் சமூகப் புரட்சிக் கருத்துக்கள் நயாகரா நீர்வீழ்ச்சியாகத்தான் வீழ்ந்தது இத் தி.மு.க. அமைச்சரலையே பெரியாருக்கு அளிக்கப்பட்ட காணிக்கை என்பதன் தத்துவமே சமுதாயப் புரட்சி வீரர்கள்தான் நாங்கள் என்பதை அறிவித்து, தனி வரவாற்றுக் குறிப்பைப் படைத்ததல்லாமல் வேறு என்ன?

இன்றைக்கு 25 ஆண்டுகட்கு முன்பு பேரறிஞர் அண்ணா அவர்தம் வலிவும் பொலிவும் வாய்ந்த சிந்தனைச் சோலையாக திராவிட நாடு ஏட்டில் எழுதியதொரு கட்டுரையின் பகுத்தறிவுக் கருத்தை எவ்வளவு மடை திறந்தாற்போல் காட்டியிருக்கிறார் என்பது மிகவும் சுவையானது என்பதால் அதனைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அண்ணாவின் பகுத்தறிவு அருவி எவ்வளவு அருமையாகப் பாய்கிறது என்பதைப் பார்ப்போம்.

25 ஆண்டுகட்கு முன்பு எழுதிய எழுத்துதான் என்றாலும் இன்று கூட அது தேவை அற்ற ஒன்றாக ஆகிவிடவில்லை!

அண்ணா அந்தக் கட்டுரைக்குத் தந்த தலைப்பு எண்ணிப்பார். கோபியாமல்! என்பதாகும்!

எலக்ட்டிரிக், ரயில்வே, மோட்டார், கப்பல், நீர்மூழ்கிக்கப்பல், அதைக் கண்டுபிடிக்கும் கருவி. டார்பீடோ, அதனின்றும் தப்பும் கருவி, விஷபுகை, அதை தடுக்கும் முகமூடி, இன்ஜக்ஷன் ஊசி, இனாகுலேஷன் ஊசி, இசைகளக்கான மருந்து, ஆப்ரேஷன் ஆயுதங்கள், தூரதிருஷ்டக் கண்ணாடி, ரேடியோ, கிராமபோன், டெலிபோன், தந்தி, கம்பியில்லாத் தந்தி, போட்டோ மெஷின், விமானம், ஆளில்லா விமானம், டைப் மிஷின், அச்சு யந்திரம், ரசாயன சாமான், புதிய உரம், புதிய விவசாயக் கருவி, சுரங்கத்துக்குள் போகக் கருவி, மலை உச்சி ஏற மெஷின், சந்திர மண்டலம் வரை போக விமானம், அணுவைப் பிளக்கும் மெஷின்.

இன்னும், எண்ணற்ற, புதிய, பயன்தரும், மனிதனின் கற்பனைக்கே எட்டாதிருந்த, மனிதனின் உழைப்பைப் குறைக்கும் முறைகள், கருவிகள், பொருள்கள், ஆகியவைகளைக் கண்டுபிடித்தவர்கள், எல்லாம், இன்னமும், கண்டு பிடிக்கும் வேலையிலே ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்கள் எல்லாம்,

சரஸ்வதி பூசை, ஆயுத பூசை கொண்டாடாதவர்கள்!!

அமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ், இற்தியாவுக்கு வழிகண்டுபிடித்த வாஸ்கோடகாமா, இந்தியாவை ஆதியில் ஜெயித்த அலெக்சாண்டர், இவர்களெல்லாம், சரஸ்வதி பூசை செய்தவர்களல்ல; நவராத்திரி கொண்டாடினவர்களல்ல.

நூற்றுக்கு நூறுபேர் என்ற அளவில் படித்துள்ள மேனாட்டிலே சரஸ்வதி பூஜை இல்லை.

ஓலை குடிசையும், கலப்பையும், ஏரும், மண்வெட்டியும், அரிவாளும் இரட்டை வண்டியும் மண்குடமும் எனக்குத் தெரிந்த கண்டுபிடிப்புகள்!

தீக்குச்சிப் பெட்டிக்கூட நீ செய்ததில்லை. கற்பூரம் கூட நீ செய்ததில்லை.

கடவுள் படங்களுக்கு அலங்காரத்துக்குப் போடும் கண்ணாடி கூட, சரஸ்வதி பூஜை அறியாதவன் கொடுத்ததுதான். நீ, கொண்டாடுகிறாய்!

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை!

ஏனப்பா, கொஞ்சம் யோசிக்கக் கூடாதா?

மேனாட்டான், கண்டுபிடித்து தந்த அச்சுயரத்தின் உதவி கொண்டு உள் பஞ்சாங்கத்தை அச்சடித்துப் படித்து, அகமகிழ்கிறாயே!

அவன் கண்டுபிடித்த ரயிலில் ஏறிக்கொண்டு உன் பழைய, கடவுள் அற்புதம் நடைபெற்ற திருத்தலம் போகிறாயே!

அவன் கண்டுபிடித்துக் கொடுத்த ரேடியோவிலே, உன் பழைய பஜனைப் பாட்டைப் பாட வைத்து மகிழ்கிறாயே!


ஒரு கணமாவது யோசித்தாயா? இவ்வளவு பூசைகள் செய்து வந்த, நாம், நமது மக்கள், இதுவரை, என்ன, புதிய, அதிசயப் பொருளைப் பயனுள்ள பொருளைக் கண்டுபிடித்தோம், உலகுக்குத் தந்தோம், என்று யோசித்துப் பாரப்பா! கோபப்படாதே! உண்மை அப்படித்தான், கொஞ்சும் நெஞ்சை உறுத்தும். மிரளாமல், யோசி - உன்னையுமறியாமல் நீயே சிரிப்பாய்

ஆம், அண்ணா இன்றம் கேட்கிறார்! நாளையும் கேட்பார்; இனிச் சமுதாயம் மாறும்வரைக் கேட்டுக்கொண்டெதான் இருப்பார்!

இதற்கு விடை காணுவதுதான் இன்றைய தலைமுறையின் தலையாய பணி.

வாழ்க அண்ணா!

வளர்க பகுத்தறிவு!

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai