அண்ணாவைப் பற்றி அறிஞர்களும் / ஆய்வாளர்களும்
( டாக்டர். அண்ணா பரிமளம் )
பாகம் -10

அண்ணாவை அறிஞர் அண்ணா என்று சொல்லக் காரணம் அவரது அறிவின் திறம்தான். அவரது ஆட்சிகாலத்தில் எந்த தமிழனுடைய உரிமையையும் அவர் புறக்கணிக்கவில்லை. அதனாலேயே தமிழர் சமுதாயத்த்தினருடைய அன்பை இதுவரை யாரும் பெற்றிராத அளவுக்கு அண்ணா பெற்றிருக்கிறார் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயமாக இருக்கிறது. நாட்டில் எல்லா கட்சியாருடனும் எல்லா மக்களுடனும் மிக்க அன்புக்குரியவராகவும் நேசமாகவும் இருந்து வந்தார்.
(தந்தை பெரியார்)

1945-ல் நடைபெற்ற சர்ச்கை
அண்ணா எழுத்தாளரா?

(அறிஞர் அண்ணாவும், எழுத்தாளர் ஜீவாவும்)
- தி.வ.மெய்கண்டார் -
(கழகக் குரல் இதழில் 1976-ல் எழுதிய கட்டுரை)

சிறுகதை - புதினம் - கவிதை - கட்டுரை - நாடகம் - இலக்கிய விமரிசனம் - இசை விமரிசனம் - இதழ் நடத்துதல் என்னும் இலக்கியத்தின் பல்வேறு துறைகளில் ஈடுபட்டு, ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகர ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாகப் பணியாற்றித் தம்முடைய எழுபதாவது வயதை எட்டியிருக்கும் பழம் பெரும் எழுத்தாளரான நாரணதுரைக் கண்ணன் (ஜீவா) அவர்கள் ஆசிரியராக இருந்து நடத்திய - 1945 நவம்பர் 15 ஆம் நாளிட்ட பிரசண்ட விகடன் இதழில் ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது; ஜில்லா என்னும் புனை பெரில், தமிழ் இலக்கியத் திறனாய்வாளர் ஒருவர் எழுதியிருந்தார்; அது வருமாறு:- இன்றைய இலக்கிய உலகிலே உண்மைச் சரக்கிற்கு விலையில்லை; இரவல் சரக்கிற்கு இரட்டிப்பு விலை; இலக்கிய உலகம் - பிரபலஸ்தர்கள் சிலலால் ஏகபோக ஆட்சி செய்யப்பட்டு - களவாணி இலக்கியம் கலைப் பொக்கிஷமாகக் கருதப்படுகிறது!

ஒரு குறிப்பிட்ட வகுப்பாரால் தனியாட்சிநடத்தப்பட்டு வரும் இலக்கிய உலகில், உண்டையான கலைஞனுக்கு - எழுத்தாளனுக்குச் சிறிதும் மதிப்பில்லை; அவனை அமுக்க ஆட்கள் அநேகர்; ஆற்றலை அளக்கம் அளவு கோவில் மாசு படிந்திருக்கிறது; பத்திரிகைகளிலே, சஞ்சிகைகளில் வரும் விமர்சனங்கள், உண்மையான மதிப்பீடுகள் அல்ல; தங்கள் சொந்த நலன்களைப் பாதுகாத்து தங்களுக்கு வேண்டியவர்களைப் புகழ்ந்தும், வேண்டாதவர்களை இகழ்ந்தும் எழுதப்படுபவைகள், பெரும்பான்மையான விமர்சனங்கள் என்பது என் துணிவு; பொது ஜனங்கள்தான் உண்மையான விமர்சகர்கள்; அவர்கள் அபிப்ராயங்களிலே சொந்த விஷயங்கள் குறுக்கிட வழியில்லை; அவர்களுக்கு எல்லா எழுத்தாளர்களும் சமமானவர்களே; எந்த எழுத்தாளர் தயவும் விரோதமும் அவர்களுக்கு வேண்டியதில்லை.

எனக்குத் தெரிய, பொது ஜனங்களது அபிப்பிராயங்களைத் தைரியமாகப் பிரசுரிப்பதிலே பிரசண்ட கிடன் முதன்மை ஸ்தானம் வகிக்கிறது என்பது என் நீண்ட கால அனுபவத்தின் முடிவு!

ஆக, நான் எழுத்தாளன் அல்லன் - ரசிகன்; ஒரு வாசகன்; எனக்கு எல்லா எழுத்தாளர்களும் சகோதரர்களே; யார் மேலும் துவேஷம் கிஞ்சிற்றேனும் கிடையாது; ஆகையால், இன்றையத் தமிழ் இலக்கிய உலகில் என் பார்வைக்கு அகப்பட்ட ருசிகரமான அனுபவங்களைத் தைரியமாகப் பிரசண்ட விகடன் மூலம் வெளியிடத் துணிந்துவிட்டேன்!

அழகிய தமிழ் நடை எழுதுவதிலே ஆற்றல் உள்ள அநேகரில் முதன்மை ஸ்தாபனம், நண்பர் சி.என்.அண்ணாத்துரை அவர்களுக்குத்தான்; எளிமையிலே - அழகு ததும்ப அலங்கார நடை எழுதுவதிலே அவர் ஈடு இணையற்றவர்; அவர் தமிழ்லே, கவிதையின் அமைதியும் அழகும் அற்புதமாக அமைந்து - படிப்போரைப் பரவசப்படுத்தும்; காதலியின் இன்பக் கதைகளை அழகுபடத் தீட்டும் அவர் பேனாவிலே, வீரனின் வீரமொழிகள் தீப்பறக்கத் தெரிப்பது அதி அற்புதம்; வீரம், காதல், சோகம் மூன்றையும் கலையழகுடன் தீட்டும் அவர் பேனாவிற்கு, இன்று உண்மையான மதிப்பு தமிழ் இலக்கிய உலகில் அளிக்கப்படுவதில்லை; ஏன் - தனியாட்சி நடத்தும் வகுப்பார், அதற்கெல்லாம் இடமளிப்பதில்லை!

இன்று, சிறு ஹாஸ்யத் துணுக்குகளை, விசுவரூபமெடுப்பித்து - ஒரு பக்கத்திற்கு மேல் நிரப்பு - கதையென்று, சசி - ஆனந்த விகடனில் வெளியிடுகிறார்; அதை, ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழரகள் படித்துப் பரவசம் அடைந்து, அவரையும் ஒரு சிறந்த எழுத்தாளராகப் போற்றிப் புகழ்கின்றனர்!

அண்ணாத்துரையின் அழகிய கதைகளை எவ்வளவு பேர் படித்திருக்கிறார்கள்? அவர் ஒரு தலைசிறந்த எழுத்தாளர் என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்?

கரிச்சான் குஞ்சு போன்ற கலைஞர்களை, இதழ் தவறாமல் துதி பாடித் துதிக்கும் இலக்கிய முன்னணி வீரர்கள், உண்மை இலக்கியமாகக் கருத வேண்டிய அவர் கதைகளையோ - அவரது அற்புதத் தமிழ்நடைபற்றியோ ஒரு வார்த்தை கூறிவிட்டால் இழுக்கு வந்து விடும்?

அக்காலத்தில், சகோதரப் பத்திரிகைகளைத் தாக்கி எழுதப்பெற்ற இக் கட்டுரையை வெளியிட்ட பிரசண்ட விகடன் ஆசிரியர் நாரண, துரைக் கண்ணன், துணிச்சலுடன் இக்கட்டுரைக்கு ஒரு குறிப்பும் எழுதியிருந்தார்; அது வருமாறு:- வண்ணமும் வாசமும் உள்ள மலர்களைக் கண்ணெடுத்தும் பாராமல், வெறும் காட்டு மலர்களை வாசமில்லா வண்ண மலர்களை வாரித் தலையில் சூடிக் கொண்கிறார்கள் தமிழ் வாசகர்கள் பலர் என்று குறைபடுகிறார் - இந்த எழுத்தாளர்; நான் எழுத்தாளனல்லன் - ரசிகன் - ஒரு வாசகன் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, நவீன தமிழ் இலக்கியம் வளரும் போக்கை நடுநிலையாக விமர்சனம் செய்திருக்கும் இவரது கருத்து கவனிக்கத் தக்கது!

1935 இல் கல்லூரிப் படிப்பை முடித்துப் பெரியாரின் பாசறையில் சேர்ந்த அறிஞர் அண்ணா அவர்கள், 1934 முதல் பத்திரிகைகளுக்குப் பல படைப்புகளை எழுதத் தொடங்கினார்; ஆனந்த விகடன் இதழ்களுக்கு அவர் கதைகள் எழுதியதும் இக்காலத்திலேதான்; காஞ்சி மணிமொழியார் தொடங்கிய நவயுகம் என்னும் இதழில் தாமே ஆசிரியராக இருந்து சிறிது காலம் நடத்தினார்; 1939 முதல் பெரியாரின் குடியரசு இதழுக்குப் பல படைப்புகளைப் படைத்தளித்தார்; சுய மரியாதை இயக்கத்தின் நாறேடான விடுதலையின் ஆசிரியராக இருந்த பணியாற்றினார்; 1942-ல், திராவிட நாடு இதழைத் தாமே தொடங்கிய பின்னர் அவ்விதழிலேயே கதைகளையும், கட்டுரைகளையும் எழுதினார்.

அறிஞர் அண்ணா இக்காலத்தில் எழுதிய சந்திரோதயம் நாடகம் வெற்றிகரமாக நடைபெற்றது; இந் நாடகம், அண்ணாவை நடிகராகவும், தலைசிறந்த நாடக ஆசிரியராகவும் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தியது.

திராவிட நாடு இதழில், அண்ணா, வீனஸ் - சௌமியன் - பரதன் என்னும் புனை பெயர்களில், கலிங்க ராணி - பார்வதி, பி.ஏ - தசாவதாரம் முதலிய படைப்புகளைப் படைத்தளித்தார்! கற்பனைச் சித்திரங்களாகப் பல சிறுகதைகளையும் எழுதினார்!

இக்காலத்தில் அண்ணா, தலை சிறந்த பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் தமிழர் உள்ளங்களை ஆட்சி செய்யத் தொடங்கினார்! தம்முடைய தனித்துவத்தை மற்றவர்கள் உணரும்படிச் செய்தார்!

தமிழர்களின் ஒருங்கிணைந்த பாராட்டுதலைப் பெற்ற அறிஞர் அண்ணா வஅர்களை - தாங்கள்தாம் எழுத்தாளர்கள் என்று சொல்லித் தமிழ் எழுத்தாளர் உலகில் ஆதிககம் செலுத்தி வந்த கூட்டத்தினர், தம்மைப் போன்றதொரு எழுத்தாளராக மதிக்கவில்லை! இந்நிலையில் ஆரம்பத்தில் குறிப்பிட்ட ஜில்பாவின் விமர்சன் கட்டுரை, பிரசண்ட விகடன் இதழில் வெளியாயிற்று!

அவ்வளவுதான்; கடிதக் கணைகள் பல. பிரசண்ட விகடன் அலுவலகம் நோக்கிப் பாய்ந்தன; ஜில்பாவின் கருத்துக்கு ஆதரவாகவும் சில கடிதங்கள் அமைந்தன! தஞ்சையிலிருந்து 19.11.1945 நாளிட்டு, தஞ்சை வாணன் என்னும் புனை பெயரில் ஓர் அன்பர் எழுதிய கடிதம், 1945 டிசம்பர் முதல் தேதி இதழில், நேயர் விருப்பம் பகுதியில் வெளியாயிற்று; அது வருமாறு:-

ஆசிரியர் அவர்களுக்கு;
உண்மையிலேயே அறிவில்லாதவன் மடையன்; அறிவிருந்தும், ஆராயும் ஆற்றல் அற்றவன் சோற்றால் அடைத்த பிண்டம்; அறிவும் ஆராய்ச்சி வன்மையும் இருந்து - தான் கண்ட உண்மைகளை வெளியிட்டால் விறர் அதனால் நலம் பெறுவரே என்று கருதுபவன் சுயநலக்காரன்; வெளியில் கூறினால் மக்கள் ஏசுவரே என்று நினைப்பவன் கோழை - துரோகி; எவ்வளவு எதிர்ப்புகள் வரினும் பின்வாங்காது, தான் கண்ட உண்மைகளை வெளியிடுபவன்தான் வீரன், தியாகி!

அத்தகைய தியாகிகளின் உள்ளப் பிரதிபலிப்பு பிரசண்ட விகடன் என்பதை எவரும் மறைக்கவோ - மறக்கவோ முடியாது; புகழுரையன்று - முற்றும் உண்மை.

அக்கொள்கையைஇ பிரசண்ட விகடன் 15.11.1945 இதழில், ஙுலபா எழுதிய தமிழ் இலக்கிய உலகில் என்ற கட்டுரையை வெளியிட்டதன் மூலம் உறுதிப்படுத்திவிட்டது; அதைக் கண்டு உண்மைத் தமிழர்கள் உள்ளம் மகிழ்ந்துதான் இருக்கும்.

சிலர் கருதுவதைப் போல, தோழர சி.என்.அண்ணாத்துரை, சமுதாயத் துறையிலே நாஸ்திகராக இருக்கலாம்; ஆனால் அவரை - கலை உள்ளத்தோடு நோக்கின், அவர் ஓர் அறிஞராக - சிறந்து நவீன எழுத்தாளராகத்தான் இருக்க முடியிடம், தமிழ் இலக்கியமும் - நாடும் கண்டிராத முறையிலே, புதுமையிலும் புதுமையைக் கண்டிருக்கிறார்!

கராச்சியிலிருந்து 21.11.1945 நாளிட்டு, வீ.யஸ்ஸார் என்னும் பெரில் மற்றொரு அன்பர் எழுதிய கடிதம் 1945 டிசம்பர் 15 ஆம் தேரித இதழில் வெளி வந்தது:-

ஆசிரியரவர்களுக்கு, 15.11.1945 இதழில, நண்பர் ஜில்பாவின் தமிழ் இலக்கிய விமரிசனத்தை நான் உணர்ச்சியுடன் வரவேற்கிறேன்.

தந்போதைய நம் தமிழ் எழுச்சி, வெறும் கொடுக்கல் - வாங்கல் விவகாரம் நடத்தும் ஒரு வியாபார விஷயமாகவே போய்விட்டது; அதிலும், பிளாக் மார்க்கெட் முறையே மேலோங்கி நிற்கிறது. நண்பர் ஜில்பா நடுநிலைமையில் நின்று கூறி இருப்பதைப் பெரிதும் ஆர்வத்துடன் வரவேற்கிறேன்.

. . . தமிழ் மக்கள் வெறும் விளம்பரத்தில் மயங்கக் கூடாது . . உண்மையைக் கூறத் துணிந்த பிரசண்ட விகடனை மெச்சுகிறேன்.

திரு.கே.வைத்தியநாதன் என்பவர், ஜில்பாவின் கட்டுரையைக் கண்டித்து எழுதினார்.

அதற்கான மறுப்புக் கடிதத்தை விருதுநகரிலிருந்து, 19.12.1945 நாளிட்டு மாரியப்பன் என்னும் இன்னொரு நண்பர் எழுதினார்; 1946 சனவரி முதல் தேதி இதழில் வெளியான அந்த மறுப்புக் கடிதம் வருமாறு:-

கவியரசர் பாரதிதாசன் கவிதைகளையும், ஜீவா, சி.என்.ஏ. - இவர்களையும், பாமரர் முதல் பண்டிதர் வரையிலும் புகழ்ந்து படிக்கிறார்கள்; இவர்களுக்கு, முன்னணிப் படையின் போற்றுதல் இல்லாமலே மக்கள் மன்றத்தில் உயர்ந்த ஸ்தானம் கிடைத்துவிட்டது

ஆனால், மூவர்களைப் பற்றி முன்னணிப் படை ஏதாவது வாயைத் திறந்ததா - இல்லை; சாரமில்லாத கவி எழுதுகிறவர்களும், கதை எழுதுகிறவர்களும் தங்களைச் சேர்ந்தவர்களாகவும் - தங்கள் தாசர்களாகவும் இருந்ததால், அவர்களை வானளாவப் புகழ்கின்றது; இந்த நயவஞ்சகத்தைத்தான் ஜில்வா கூறினார்!

காட்டு முல்லை நல்ல மணம் உள்ளது; அது, மக்களைத் தன்பால் இழுக்கிறது; உண்மை; ஆனால், அறிவின் சோல் ஏஜெண்டுகள் என்று தங்களைத் தாங்களே கூறிக்கொள்ளும் கடைக்காரர்கள், அரணிப்பூவைக் கடையில் பார்வையாக வைத்து, இதுதான் உயர்ந்த பூ; இதைத்தான், அன்பர் ஜில்பா அழகாகத் தமிழ் மக்களுக்கு எடுத்துக் கூறினார் என்று ஸ்ரீ வைத்தியநாதனுக்கு கூற விரும்புகிறேன்.

ஜில்பா அண்ணாவைப் பற்றி எழுதிய இலக்கியத் திறனாய்வுக் கட்டுரை தொடர்பான வாதப் பிரதிவாதங்கள், பல மாதங்கள் பிரசண்ட விகடன் இதழில் நீடித்தன!

நேரடியாகவே சிலர், நாரண துரைக்கண்ணனைக் கேட்டனர்:-
அண்ணாத்துரை சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவரல்லவா? ஈ.வெ.ரா.வுடன் சேர்ந்து திராவிடஸ்தான் கேட்பவரல்லாவா? ஜஸ்டிஜ் கட்சிக்குத் தோள் கொடுத்துக் காங்கிரசை எதிர்ப்பவரல்லவா? கடவுள் இல்லையென்றும், ஆலயம் வேண்டாமென்றும் கூறித் தடுப்புத் துவேஷம் செய்யும் அவரைப் போய் எழுத்தாளரென்று சொல்ல முடியுமா? நவீன இலக்கியத்தைச் சிருஷ்டி செய்து வரும் நம்முடன், அவரை எப்படி சார்சேர்க்க முடியும்?

அண்ணாத்துரை ஏத்தாளராமே! இலக்கியச் சேவை செய்கிறாராமே! இப்படி உங்கள் விகடனில் யாரோ ஒருவர் எழுதியிருக்கிறாரே சார் - அதை நீங்களுமா வெளியிட்டிருக்கிறீர்கள்? நீங்கள்தாம் சொல்லுங்களேன் - அண்ணாத்துரை நம்மைப் போல எழுத்தாளரென்று நீங்களும் ஒப்புக்கொள்கிறீர்களா?

இப்படிக் கேட்டவர்களுக்கெல்லாம் நாரண.துரைக்கண்ணன் அமைதியாகச் சொன்ன பதில் இதுதான்:-

இப்படி ஒருவரைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ளாமலே நீங்கள் ஒருவித அபிப்பிராயம் கொண்டிருப்பது நியாயமா? நண்பர் அண்ணாத்துரை, தாம் நடத்திவரும்திராவிட நாடு என்னும் பத்திரிகையில் தொடர்ந்து கதைகள் எழுதி வருகிறார்; அவற்றைப் படித்துப் பார்த்துவிட்டு, அப்புறம் சொல்லுங்கள் - அவர், நம்மைப் போல எழுத்தாளரா, இல்லையா என்று!

அப்புறம் யாருக்கேனும் சந்தேகமிருக்குமானால், தஞ்சை இராமநாதன் செட்டியார் ஹாலில் நடந்துவரும் தேழர் அண்ணாத்துரை எழுதிய ஓர் இரவு நாடகத்தைப் போய்ப் பார்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அப்படிப் பார்க்குமுன், அண்ணாவைப் பற்றி முன்கூட்டிய எவ்வித அபிப்பிராயமும் கொள்ளாமல் - துவேஷ மனப்பான்மை இல்லமல் பார்க்கவேண்டும்

இச்செய்திகளெல்லாம், 1945 - 46 இல் பிரசண்ட விகடன் இதழ்களில் வெளிவந்தன!
பின்னர், அண்ணாவின் அரிய நாடகமான ஓர் இரவு கறித்து விரிவான சிறப்புக் கட்டுரை ஒன்றையும் 1946-லேயே தம்முடையபிரசண்ட விகடன் இதழில் எழுதி அண்ணாவைப் பெருமைப்படுத்தினார், நாரண. துரைக் கண்ணனார்:- ஓர் இரவு - நல்ல நாடகப் பண்பு அமைந்த சிறந்த நாடகம் என்பது என் அபிப்பிராயம்; ஓர் இரவு ஓர் உயர்ந்த இலட்சியத்துடன் எழுதப்பட்ட நாடகம்; நம் சமுதாயத்திலுள்ள ஊழல்களை நாகரிகமாக எடுத்துக் காட்டி, மக்கள் தங்களை மூடப் பழக்கவழக்கங்களிலிருந்தும் - அர்த்தமற்ற கொள்கைகளிலிருந்தும் விடுவித்துக்கொண்டு - நல்வாழ்வு வாழ வழி காட்டும் நாடகம் இது!

திரு.நாரண.துரைக்கண்ணன் இப்படி எழுதிய பின்னரே, கல்கி அவர்கள், நாரண.துரைக்கண்ணன் பேன்ற எழுத்தாளர்களால் அண்ணாவின் பெருமை உணர்த்தப்பட்டு உணர்ந்து, 1947-இல் அண்ணாவின் ஓர் இரவு நாடகத்துக்குத் தலைமை தாங்கிப் பாராட்டத் தாமே ஆர்வத்துடன் முன் வந்தார்.

03.08.1947-இல் தஞ்சை இராமநாதன் ஹாலில் அண்ணாவின் வேலைக்காரி நாடகம், வ.ரா.வின் தலைமையில் நடைபெற்றபோது, நாரண.துரைக்கண்ணன் இவ்விதம் பேசினார்:-

இலக்கியம் போல நாடகமும் மனித சமூக வளர்ச்சிக்கு அவசியமாகிவிட்டது; ஆதலால், இயற்றப்படும் நடகங்கள், இன்றையச் சமூக முன்னேற்றத்திற்கும் - மக்கள் மனப்பான்மைக்கும் தகுந்தவாறு அமையவேண்டும்; இப்சன், பெர்னாட்ஷா போன்ற மேனாட்டு நடக ஆசிரியர்கள் எழுதுவதுபோல், சமுதாய முன்னேற்ற நாடகங்கள் தமிழில் வரவேண்டும் என்று நான் அடிக்கடி சொல்லிவருவதை அன்பர்கள் அறிவார்கள்; அண்ணாவின் நாடகங்கள், சமுதாய முன்னேற்றத்தைக் குறிக்கோலாகக் கொண்டனவாக இருப்பது பாராட்டத்தக்கது!

தமிழ் எழுத்தாளர் கூடடம் அண்ணாவைத் தம்மோடு சேர்த்துக்கொள்ள மறுத்த காலத்திலேயே, அண்ணாவின் அறிவாற்றலையும் - மேதைமையையும் தம்முடைய பரந்த பார்வையால் உணர்ந்த நாரண.துரைக்ண்ணன் போன்ற நடுநிலை எழுத்தாளர்கள், எவ்வளவோ இடர்ப்பாடுகளுக்கிடையிலும் - கண்டனங்களுக்கிடையிலும் - எதிர்ப்புகளக்கிடையிலும் அண்ணாவைப் போற்றிப் பாராட்டி எழுதினார்கள்!

இதற்குப் பின்னரும், நாரண. துரைக்கண்ணன், அண்ணாவைப் பாராட்டிக் கட்டுரைகள் பல எழுதியுள்ளனர்!

1945-46 -லேயே அண்ணாவைப் புகழ்ந்துக்கொண்டு போற்றிய பெருமை, மாற்றுக் கருத்துள்ள எழுத்தாளர்களின் நாரண.துரைக்கண்ணன் அவர்களுக்கு மட்டுமே உண்டு; மேலும், அண்ணாவைத் தமிழ் எழுத்தாளர் மாநாடுகளுக்கு அழைத்துச் சிறப்புச் செய்த பெருமையும் அவருக்கு உண்டு!

அறிஞர் அண்ணா அவர்களும், நடுநிலை எழுத்தாளரான நாரண.துரைக்கண்ணன் அவர்களிடம தம்முடைய இறுதிக் காலம் வரை பெருமதிப்பு வைத்திருந்தார்!

1945-ல் நல்லவண்ணம் மலர்ந்திருந்த எழுத்தாளரான அண்ணா, நாரண. துரைக்கண்ணன் போன்றவர்களில் பாராட்டுதல்களாலும் - போற்றுதல்களாலும் முழுமை பெற்ற எழுத்தாளராகக் காய்த்துக் கனிந்தார்!

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai