சிறப்புக் கட்டுரை

இந்துமதமும் தமிழரும்!
(அறிஞர் அண்ணா நக்கீரன் என்ற புனை பெயரில் திராவிடநாடு இதழில் எழுதி வெளிவந்தது)
பகுதி:1 பகுதி:2 பகுதி:3 பகுதி:4

. . . . . . . . . . . . . . . .

மலடி மைந்தன் முயற்கொம்பை ஏணியாக அமைத்து வான் வெளியிலுள்ள மலரைப் பறித்து வந்தான் என்று ஒருவன் கூறும் கதையைப் போலத் தொடங்கமோ முடிவோ அற்ற ஒரு முழுமுதற் பொருளை மதநூல்கள் கூறும் வழியே சென்று அப்பெரும் பொருள் அளிக்கும் இன்பத்தைப் பெறலாம் என்ற கூறுவது போன்ற அறியாமை பிறிதொன்றில்லை. மலடி மைந்தன் போன்றது கடவுள் முயற்கொம்பு போன்றது மதநூல்கள் கூறும் நெறி. வான் மலர் போன்றது கடவுள் அளிக்கம் பேரின்பம். இது காறும் கூறியவை கடவுளைப் பற்றிய சுருக்கமான விளக்கமாகும். இதிலும் தெளிவடைய மாட்டார்க்கு, விரும்பினால், பின்னும் தெளிவாக விளக்கப்படும் ஐயுறுவார் கடாவுக.

திருஞான சம்பந்தர் என்ற பார்ப்பனச் சிறுவனுக்கு அவனுடைய மன்றாம் ஆண்டிலேயே பரமசிவன் தமதருமை மனைவுயாராகிய உமையம்மையாரோடு இடபத்தின் மீது ஏறிவந்து வான் வெளியிலே நின்றுகொண்டு சீர்காழியிலே ஒரு குளக்கரையிலே அழுதுகொண்டிருந்த அச்சம்பந்தரை உமையம்மைக்குச் சுட்டிக் காட்டி, அதோபார் நமதருமைப் புதல்வன் பசியால் வாடி அழுதுகொண்டு நிற்கின்றான்; உனது முலைப்பாலை ஒரு பொற்கிண்ணத்தில் கறந்துகொண்டு போய்க கொடுத்து அவனுடைய பசியை ஆற்றி வா என்ற பரமசிவன் சொல்ல உமையம்மையும் அங்ஙனமே செய்ததாகப் பெரிய புராணம் கூறும் பல புதுமைகளில் ஒன்றாகிய இந்நிகழ்ச்சியைப் படித்த அல்லது கேட்ட ஒரு பகுத்தறிவாளன், இந்நிகழ்ச்சியை அப்படியே நம்பி மகிழும் ஒரு கடவுளன்பனை நோக்கி, அப்பனே! அரனடிமறவாத அன்பனே! சிவப்பழம்பெரும் பொருடைச் செம்மையாய் வழிபடும் சீலனே! சிவபெருமானுடைய கட்டளையை மேற்கொண்ட உமையம்மையார் தமது முலைப்பாலைக் கறந்து அதனை ஒரு பொற்கிண்ணத்தில் பெய்து திருஞானசம்பந்தருக்குக் கொடுதததை நீர் நேரில் பார்த்தீரா? அல்லது பெரிய புராணம் பாடிய சேக்கிழார்தான் பார்த்தாரா? அல்லது சேக்கிழார் பெரியபுராணம் பாடுவதற்குக் கருவியாக இருந்த கலித்துரைத் திருவந்தாதியைப் பாடிய நம்பியாண்டார் நம்பியாவது பார்த்தாரா? அல்லது நம்பியாண்டார் நம்பிக்குப் பெரியபுராணக் கதைகச் சொல்லிரயதாகச் சொல்லப்படும் திருநாரையூர்ப் பொல்லாப் பிள்ளையாராகிய கல்லுப் பிள்ளையார்தான் பார்த்ததா? என்று கேட்டால், நீ ஒரு நாத்திகன், உன் முகத்திலும் முழிக்கப்படாது, நீ கடவுள் இல்லை என்று சொல்லும் கூட்டத்தைச் சேர்ந்தவன், குடியரசு - விடுதலை - பகுத்தறிவு படிப்பவன்போல் தெரிகிறது; உன் கேள்வி அடாவடியான கேள்வி; உனக்கு நான் விடைசொல்லப் போவதில்லை; அப்பாலே போ! என்று சொல்லிவிடுகிறான் அந்தக் கடவுளன்பன்.

நான், நீர் சொல்லுகிறபடி, ஒரு நாத்திகன் என்பதும் உண்மையே. கடவுள் இல்லை என்று சொல்லும் கூட்டத்தைச் சேர்ந்தவன் என்பதும் உண்மையே. குடிஅரசு - விடுதலை பகுத்தறிவு, படிப்பவன் என்பதும் மறுக்கமுடியாத உண்மைதான். ஆனால், பகுத்தறிவுக்கும் இயற்கைக்கும் பொருத்தமான எதனையும் யார் சொன்னாலலும, எந்தச் செய்தித்தாள் வெளியிட்டாலும், எந்த நூலில் படித்தாலும் அவற்றை உளமுவந்து ஒப்புக்கொள்ளும் இயல்பும் உடையவன் என்பதையும், உம்மைப்போல், ஆ, இவன் நாத்திகனா? இவன் முகத்தில் முழிக்கப்படாது. இவன் கடவுள் இல்லை என்று சொல்லும் கூட்டத்தைச் சார்ந்தவனா? இவனுடன் பேசவுங்கூடாது. இவன் குடியரசுபடிப்பவனா? இவனோடு சேர்ந்தால் குடியே முழுகிவிடும் என்று எண்ணும் குறுகிய மனப்பான்மை உடையன் அல்லன் என்பதையும் உமக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். நிற்கச், சில நாட்களுக்குமுன், நான் காஞ்சியிலிருந்து புறப்பட்டுத், தேர்க்காலிற் பட்டிறந்த ஒரு பசுவின் கன்றுக்காக, அத்தேரை ஓட்டிச்சென்ற தன் புதல்வனை அத்தேர்க்காலிற் போட்டுக் கொன்ற சோழமன்னனுக்குக் காட்சி கொடுத்து, இறந்த கன்றையும், அரசமைந்தனையும் அமைச்சனையும் உயிர்பெற்று எழுச் செய்ததாகப் பெரிய புராணத்திற் பேசப்படும் தியாகராயப் பெருமானாகிய சிவன் வாழும் திருவாரூருக்குப் போயிருந்தேன். அப்பொழுது, அப்பெருந்தகைத் தியாகராய சிவம் ஏறிவந்த தேர் அச்சுமுறிந்து தெருவிற் கிடைப்பதையும், அச்சுமுறிந்து தெருவில் கிடக்கும் அந்தத் தேருக்கள் தியாகராய சிவமும் கிடந்து துன்பப் படுவதையுங் கண்ட யான், அங்குள்ளவர்களை நோக்கி, இதென்ன காலவேற்றுமை! உலகிலுள்ள அமைவருடைய துன்பங்களையும் போக்கி அவர்களுக்கெல்லாம் நலமளிக்கும் நயனங்கள் மூன்றுடைய பெருந்தகைச்சிவம் இங்ஙனம் தனக்கேற்பட்ட இடரைக் களைய முடியாது தெருவிற்கிடந்து தவிப்பது ஏனோ என்று கேட்டேன். அதற்கவர்கள், எல்லாம் வல்ல எங்கள் சிவனுக்கு ஏற்பட்ட சீற்றமே தேரைச் சிதைந்தொடியும்படி செய்தது என்றார்கள். நான், அவர்களை மிகவும் பணிவுடன் நோக்கிச், சிவனுக்குச் சீற்றம் எப்படி உண்டாயிற்று? எதற்காக உண்டாயிற்று? யார் பேரில் சீற்றம்? இவ்வூரவர்கள் மீதா? இந்தியாவை நோக்கிப் படையெடுக்க முயற்சிக்கும் சப்பானியர்மீதா? அல்லது இந்தியாவைப்த துண்டாடிப் பிரிவினைகேட்கும் முஸ்லீம்களுக்கு ஆதரவாக நிற்கும் அன்பர் இராசகோபாலாச்சாரி மீதா? அன்றித், திராவிட நாட்டுப் பிரிவினைக்காகப் பெருங்கிளர்ச்சி செய்துவரும் எங்கள் தலைவர் இராமசாமிப் பெரியார் மீதா? ஒரு வேளை, கடவுளே இல்லை என்று சொல்லும் எம்மனோர் மீதா? யார் மீது? எதற்காக? அந்தச் சிவனுக்குச் சீற்றம் ஏற்பட்டதென்பது தெரிந்தது? கடவுளை நீங்கள் நேரில் பார்த்துர்களா. அல்லது கடவுள் தானாகவே வந்து எனக்கேற்பட்ட சீற்றங்காரணமாக நானே தேரச்சை முறியும்படி செய்தேன் என்று செப்பினாரா? அன்றி எழுத்து மூலமாய்த் தெரிவித்தாரா? என்பன கோன்ற கேள்விகளைக் கேட்டேன், நான் இங்ஙனம் பேசியதைக் கண்ட அவ்வூர்க் கடவுளன்பர்கள், ஓகோ! நாம் என்னவோ என்றெண்ணினோம்; இவன் ஒரு வடிகட்டிய நாத்திகன்; இவனோடு பேசுவதை அந்தச் சிவன் அறிந்தால் இன்னும் பாக்கியுள்ள தேரச்சுகளையும் முறித்துவிடுவார்; ஆகையால் இவன் முகத்தில்கூட முழிக்கப்படாதென்று சொல்லிக் கொண்டே மெதுவாக, ஒவ்வொருவராக என்னை விட்டு நழுவத்தொடங்கினார்கள். ஒரு சிலர் மட்டும் என்னை முறைத்துப்பார்த்துக்கொண்டே நின்றார்கள். நான் அவர்களை நோக்கி ஐயன்மீரே! அரனடிதொழும் என்பர் குழாங்களே! சீற்றத்தை ஒழிமின்! சிறிதே பகுத்தறிவைப் பயன்படுத்தி யான் கூறும் செய்திக்குச் செவிசாய்மின்! என்று பணிவான பீடிகையோடு பேசத் தொடங்கினேன். நான் இவ்வாறு பேசுவதக் கேட்டால் மட்டும என்னை நாத்திகன் என்கிநீர்களே! நான் கேட்கவில்லை, குடியரசு குறிக்கவில்லை, ஆனால், உங்கள் தினமணி நான் கேட்கும் இந்தக் கேள்விகளையே கடந்த 21.05.1942 இல் கேட்டிருக்கிறதே, அதற்கென்ன சொல்லுகிறீர்கள் என்றேன். நான் இங்ஙனம் கூறியதைக் கேட்டதும் ஒரு காங்கிரசன்பன் என்முன்னே வந்து தினமணியாவது நாத்திகம் பேசுவதாவது நீ கூறுவது சுத்தப்பொய் என்று என்மீது பொரிந்து விழுந்தார். நான் உடனே, என்னிடமிருந்த தினமணியை அவரிடம் கொடுத்து, நீரே படித்துப்பாரும் என்றேன். அவர் தினமணியை அதை மறந்துவிடு. இப்போது நான் மனமார நேசிக்கிறேன்.


பகுதி:1 பகுதி:2 பகுதி:3 பகுதி:4

வளரும். . .

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai