சிறப்புக் கட்டுரை

இந்துமதமும் தமிழரும்!
(அறிஞர் அண்ணா நக்கீரன் என்ற புனை பெயரில் திராவிடநாடு இதழில் எழுதி வெளிவந்தது)
)
பகுதி:1 பகுதி:2
பகுதி:3 பகுதி:4

சென்ற வாரம் திராவிடநாடு இதழில் எனது தோழன் பரதன் கேட்டுக்கொண்டதற்கேற்ப, இவ்வாரத்திலிருந்து, இந்து மதம் தமிழ் மக்களுக்கு ஏற்புடையது தானா? என்பது பற்றிய கருததுக்களை, இந்துமதமுந் தமிழரும் என்ற தலைப்போடு எழுத முன் வந்துள்ளேன்.

இந்து மதமென்றால், அது எங்களுடையது என்றெண்ணி ஒறும்பூதெய்தி இருக்கும் தமிழ் மக்கள் பலர்நம்மைச் சூழ்ந்திருக்கின்றனர் என்பதை நாமறிவோம். இந்து மதமென்றால், அது ஆரியர்கள் தங்கள் வாழ்க்கைக் கப்பலை ஓட்டிச்செல்வதற்காக வெட்டிய ஒரு அகழ் என்பதை நம்மவர் பலர் இன்னுந் தெரிந்துகொள்ள முடியாத நிலையிலேயே இருக்கின்றனர் என்பதையும் நாம் அறிவோம். எனவே, இவ்விந்து மதத்தைப் பற்றிய உண்மைகளைத் தமிழ் மக்கள் அனைவரும் தெரிந்து தெளிதல் பெரிதும் இன்றியமையாததாகும்.

இவ்விந்து மதம் தமிழ்நாட்டிற் பரவிய காலம், ஆரியர்கள் நம் நாட்டில் வந்து குடியேறித் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்தத் தொடங்கிய காலத்தைக் குறிப்பதாகும். ஆரியர்கள் நம் நாட்டுக்கு வருமுன் இந்து மதம் என்ற ஒரு மமோ அனிறி வேறு மதங்களோ இருந்தனவென்று துணிவதற்குத் துளி சான்று கூடக் கிடையாது. ஆகையால், ஆரிய மதமாகிய இவ் இந்துமதத்தைத் தமிழ் மக்களுடைய மதம் என்றுரைக்க ஆராய்ச்சித் துறை கண்ட அறிவுடைய எவரும் முன்வரமாட்டார்கள். ஆரியர்கள் நம் நாட்டுக்கு வருவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பிருந்தே சிறந்த நாகரிக வாழ்க்கையை மேற்கொண்டு செம்மை நெறியில் ஒழுகி வந்த தமிழ் மக்களுக்கு, இடைப்பட்ட காலத்தில் ஆரியர்களால் கொண்டுவந்து புகுத்தப்பட்ட இந்துமதம் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்லவென்பதை எடுத்துக்காட்டுதலே இக்கட்டுரையின் நோக்கமாகும் இதனைத் திராவிடநாடு பகுதி பகுதியாகத் தொடர்ந்து வெளியிட்டுவரும். இப்போது இந்துமதம் என்று வைத்து வழங்கப்பட்டு வரும் மதத்திற்குப் பலர் பலவாறு பொருள் கூறுகின்றனர். அவற்றுட் சில வருமாறு: இந்தியாவில் உள்ளவர்களின் மதமாதலால் இந்துமதம் என்றும்; (இது மேனாட்டறிஞரான மாக்ஸ்முல்லர் என்பவரின் கருத்து) சிந்து நதிக் கரையில் ஆரியர்கள் தங்கியிருந்ததால் அவர்கள் இந்துக்கள் என்றும், இந்துமதத்தினர் என்றும் அழைக்கப்பெற்றனர் என்றும், பொருள் கூறுகின்றனர். ஆனால் மேற்சொன்ன இரண்டு காரணங்களும் பொய் என்பதை வலியுறுத்தி ஒரு உபநிடதம் அதன் உண்மைப் பொருளை விளக்கிக் காட்டுகின்றது. எப்படியென்றால்,
ஹிம்ஸாயாம் தூய தேயஸ;
ஸ: ஹிந்துரி த்யபீதயதே.

இதன் பொருள்:- எவன் ஒருவன் துன்பம் என்பதில் நின்று அல்லற்படுகின்றானோ அவன் இந்து என அழைக்கப்படுகிறோன் என்பதாகும். எனவே, ஆரியர்கள் தங்களுக்கு இருக்க இடமும், உடுக்க உடையும், உண்ண உணவும் இன்றி ஊர் ஊராய்ச்சுற்றித் திரிந்து துனபுற்ற உண்மை பண்டைய வரலாறுகளால் வலியுறுவதால் அவர்களை இந்துக்கள் என்று கூறும் உபநிடதக் கருத்தையே நாமும உண்மையெனக் கொள்ளல் வேண்டும். அற்றன்று ஆரியரல்லாத தமிழ் மக்களை இந்துக்கள் என்றழைப்பது பொருந்தாதோவெனக் கடாவுவார்க்கும் பொருந்தாதென்றே கூறுவோம். ஏனெனில் தமிழ் மக்கள் வாழ்க்கையை நடாத்த வகையறியாது ஊர் ஊராய்ச் சுற்றித் திரிந்து துன்புற்றசெய்தி எந்த வரலாற்று நூலிலும் காண்பதற்கில்லை. மற்று, ஆரியர் அல்லற்பட்டு அலைந்து திரிந்து துன்புற்றமைக்குச் சான்று பலஉள. விரிவஞ்சி ஒன்றிரண்டை மட்டும் ஈண்டெடுத்துக் காட்டுவதம். ஆரியர்களின் முதல் நூலாகிய இருக்குவேத முதன் மண்டலத்தில் உள்ள 42-ஆம் பதிகத்தில் ஆரியர்கள் தங்கள் தலைவனான இந்திரனை நோக்கிப் பின்வருமாறு வேண்டிக்கொள்ளுகிறார்கள்.

1. யாங்கள் செல்வத்தை எளிதில் அடையுமாறு செய்.
2. புல்லடர்ந்திருக்கிற மேய்ச்சல் நிலங்களுக்கு எம்மை வழிகாட்டிச் செலுத்து
3. எங்களுக்கு வயிறு நிறைய உணவு கொடு.
4. சுவித்ராளின் இளங்கன்றே, ஓ பகவானே துக்கிரனுடைய வீடுகளிடையே எங்களுக்கு நிலம் கிடைத்தல் வேண்டி, நடந்த போரில் எங்களுக்கு உதவி செய்கின்றனை.

என்கின்ற இவ்விருக்குவேத உண்மைகள் ஆரியர்களின் மிடிப்பட்ட வாழ்க்கையைத் தெளிவாகக் காட்டுகின்ற தாகையால், இந்துக்கள் என்று அழைப்பதற்கு ஆரியமக்களே உரித்தானவர்கள் என்பது தெற்றெனப் புலனாகின்றது.

இனித் தமிழ் மக்கள் இருக்குவேத காலத்திற்கு முன்பிருந்தே சிறந்த செல்வ வாழ்க்கையில் திளைத்திருந்தனர் என்பதற்கும் அவ்விருக்குவேதமே பகர்கின்றது. அவற்றிலும் ஒன்றிரண்டு எடுத்துக் காட்டுதும். இருக்குவேத முதல் மண்டிலம் 104-ஆம் பதிகங்களில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
1. பொன் அணிகளாலும் மணிகளாலும் தம்மை ஒப்பனை செய்து கொண்ட அவர்கள் (தமிழர்கள்) இந்நிலத்தை மறைத்து ஓர் அடை விரித்தார்கள்.

2. இந்நிலத்தில் கடைக்கோடி வரை ஊடுருவிப் பரவிநிற்கும் அவர்கள் (தமிழரகள்) தம் மந்திர ஆற்றலால் இந்திரரை வெல்ல மாட்டாராயினர்.

3. இந்திரன் தனது குலிசப் படையால் அவர் (தமிழர்)களுடைய கோட்டைகளைப் பிளந்து துகளாக்கினான்.

4. குயவனுடைய மனைவியர் இருவரும் பாலிலே ரை முழுகுகின்றனர்! அவர்கள் சிபாயாற்றின் ஆழத்தில் அமிழ்த்தப்படுவாராக.

என்ற இவ்விருக்குவேத உண்மைகள் தமிழ் மக்களின் சிறந்த செல்வ வாழ்க்கையை நன்கு தெளிவுபடக் காட்டுவதோடு, தமிழ் மக்கள் எல்லோரும் செய்தொழிலை வேற்றுமையால் உயர்வு தாழ்வில்லாமல் ஒரே தன்மையாய்த் தங்கள் செல்வத்தினாற் பெறக்கூடிய இன்பங்களை நுகர்ந்து வந்தனர் என்பது, குயவனுடைய மனைவியர் பாலிலே தலைமுழுகினார்கள் என்பவை தெரியக் கிடக்கின்றது. என்றிதுகாறும் கூறியது கொண்டு தமிழ் மக்கள் எக்காரணத்தைக் கொண்டும் இந்துக்கள் என்றோ இந்து மதத்தினர் என்றே அழைக்கப்பட மாட்டார்கள் என்பது யாதொரு ஐயுறவுமின்றித் துணியப்படும். எனவே, இதுகாறும் தமிழ் மக்களை இந்துக்கள் என்ற பேதைமையினோர் இனி அவ்வாறு அழைக்க மாட்டார்கள் என்பது ஒரு தலை.

வடக்கே இமயமலைச் சாரலில் இருக்கும் கேதாரம் என்றும் இடத்திற்கும் தெற்கே தஞ்சாவூருக்கு அருகிலுள்ள திருவையாறு என்னும் இடத்திற்கும் இடையேயுள்ள தொலைவு ஏறக்குறைய 2500-கல் இருக்கும். இவ்வளவு தெலைவைத் திருநாவுக்கரசர் தம்முடைய காற்சுவடு நிலத்திற் படாமல் எப்படி வந்தார் என்பது தெரியவில்லை. ஒரு வேளை நீருள் மூழ்கியபடியே காற்சுவடு நிலத்திற் படாமல் வந்தார் என்றால், அத்தகைய ஒரு நீர்த்தொடர் கேதாரத்திற்கும் திருவையாற்றுக்கும் இருக்கிறதா என்பதை அறிய நில நூல் ஆராய்ச்சி வல்லுநர்க்கு விட்டுவிட்டாலும், 2500-க்கு தொலைவிற்குத் தொடர்பாகவுள்ள நீர்ப்பரப்பை ஒருவன் எங்ஙனம் ஊடுருவி வர முடியுமென்பதை யாவது இத்தகைய புராணப் புளுகுகளை நம்பும் அன்பர்கள் ஆராய்ந்து பாராமல் இருப்பது பெரிதும் வருந்தத் தக்கதும் இரங்கத் தக்கதுமாகவே இருக்கிறது. தண்ணீரில் மிதந்து செல்வது அதாவது நீந்திச் செல்வதில் பழக்கமுள்ளவர்கள் கூட ஐந்து அல்லது பத்துக்கல் தொலைவான நீர்ப்பரப்பைத் தானும் கடக்க முடியாது. தண்ணீரில் நீந்திச் செல்வதிலோ அன்றி அதனுள் மூழ்கிச் செல்வதிலோ மிகவுந்திறமை வாழ்ந்தவர்கள் தங்கள் கனவிலும் எண்ணமுடியாத ஒரு பெருந்தொலைவை, அத்துறையில் ஒரு சிறிதும் பழக்கமோ பயிற்சியோ இல்லாத திருநாவுக்கரசர் செய்து முடித்தார் என்பது வியப்பினும் வியப்பினும் வியப்பாகவன்றோ இருக்கிறது. இத்தகைய ஒரு அண்டப்புளுகை இந்து மதம் போன்ற மதநூல்களிலன்றி வேறெங்கேனும் காண முடியுமா? தமிழ் மக்களை இந்துமதமென்னும் படுகுழியில் வீழ்த்தி அவர்களைத் தங்கள் அடிமைகாளாக ஆக்குவதற்கு ஆரிவர்கனே புனைந்து வைத்த இத்தகைய கதைகளை இனிமேலாவது ஆராய்ச்சிக்கண் கொண்டு நோக்கி இயற்கை வழி நடக்க முயல்வது இனித் தமிழ் மக்கள் கடைப்பிடியாய்க் கொளற் பாலதொன்றாம்.

இனி, அக்கதையில், தமிழ்மக்கள் தங்கள், கருத்தைச் செலுத்திப் பார்க்க வேண்டியதொன்றுண்டு, அதாவதுஇ திருநாவுக்கரசர் அசையமுடியாது களைப் புற்றுக் கிடந்த இத்திற்கு வந்து அவருடன் உரையாடியவர், திருநாவுக்கரசரை நோக்கி, நீர் உமது உடம்பிலுள்ள உறுப்புக்கள் எல்லாம் அழிந்து போக வருத்தத்தோடும் இந்தக் கொடிய காட்டில் எதன் பொருட்டாக வந்தீர்? என்று வினவியதாகவும், அதற்குத் திருநாவுக்கரசர், நமது கடவுளாகிய சிவ பெருமான் வடகையையிலே பார்வதி அம்மையாரோடு வீற்றிருக்கும் காட்டிசியைக் கண்டு களிக்க விரும்பி வந்தேன் என்று விடை பகர்ந்ததாகவும், அதற்கு அவர் தேவர்களாலும் அடையப்படுவதற்கு அரிதாகிய திருக்கைலாயத்தை மக்களால் அடையப்படுவது ஆகக்கூடய காரியமா? நீர் இந்தக் கொடுஞ் சுரத்தில் வந்து என் செய்துர்? இனி நீர் திரும்பிவிடுதலே நலம் என்று கூறியதாகவும்; திருநாவுக்கரசர் திருக்கைலாய மலையில் வீற்றிருக்கின்ற சிவபெருமானைக் கண்டன்றித் திரும்பேன் என்று கூறி மறுத்ததாகவும்; திருநாவுக்கரசரின் உறுதிப்பாட்டையும் விடாப் பிடியையும் துணிவையுங்கண்ட அந்தப் பேற்வழி (ஆள்வடிவில் வந்ததாகச் சொல்லப்படும் சிவன்) மறைந்து நின்று, நாவுக்கரசனே எழுந்திரு என்ற உடனே திருநாவுக்கரசர் அழிந்த உறுப்புக்கள் எல்லாம் முன்போல நிரம்பப் பெற்று அழகிய வடிவோடும் எழுந்து, சுவாமி, தேவருர் திருக்கைலாய மலையில் எழுந்தருளியிருக்கின்ற வடிவத்தைக் கண்டு வணங்க அருள் செய்யும் என்று வேண்டிக்கொண்டதாகவும்; அதற்கு அவர் (சிவன்) நீ இந்தத் தடாகத்திலே முழுகித் திருவையாற்றிலுள்ள குளத்திலே கிளம்பிக், கைலாயமலையில் வீற்றிருந்தபடி காணப்படும் நமது காட்சியை அந்த இடத்திலே கண்டு வணங்கு என்று கூறியதாகவும் பெரிய புராணத்திற் காண்ப்படுகின்றது. திருநாவுக்கரசர் கதையின் பிற்பகுதியாகிய இந்த இடம்தான் பெரிதும் ஆராய்ச்சிக்குரியதாய் இருப்பதோடு தமிழ் மக்கள் கருத்தூன்றிப் பார்க்க வேண்டியதாகவும் இருக்கிறது.

இந்துமதத்தின் ஒரு பிரிவாகிய சைவமத்திற்குத் தலைவர்கள், திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர், சுந்தரர் மாணிக்க வாசகர் என நால்வர் என்று சைவநூல்கள் நுவல்கின்றன. எனவே, இந்நால்வரும திருநாவுக்கரசர் ஒரு தமிழன் என்பதும் மற்றைய மூவரும் பார்ப்பனர் என்பதும் நினைவில் வைக்கப்பட்டு, நாம் கூறும் உண்மைகளை ஆராய வேண்டியது தமிழ்மக்கள் கடனாகும். திருநாவுக்கரசர் காலம் இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகட்கு முற்பட்டதாய் இருத்தால் வேண்டுமென்பது ஆராய்ச்சியாற் புலனாகின்றது. ஆரியர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து நிலைபெற்றுத் தங்கள் முழு ஆதிக்கத்தையும் செலுத்தத் தொடங்கிய காலம் இன்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்டதாய் இருத்தல் வேண்டுமென்பதும் ஆராய்ச்சியாளர் கண்ட முடிபாகம். எனவே, திருநாவுக்கரசர் தோன்றிய காலம் ஆரிய மதமாகிய இந்துமதம் தமிழ் நாட்டில் வேரூன்றி நிலை பெற்ற காலமாகும். அக்காலத்தில் பிறந்த தமிழ் மகனாகிய திருநாவுக்கரசரும இந்து மதத்தின் ஒரு பிரிவாகிய சைவமதக் கொள்கைகளையே பெரிதும் பின்பற்றி ஒழுகி வந்தாராயினும், அவர் இளமையிலே கல்வி பயின்று அறிவு நிரம்பப் பெற்று இருந்தவராதலின், அவருக்கு ஆரிய மதமாகிய சைவமதத்தில் உண்மை எதுவும் இல்லை என்பது புலப்பட்டது.

பகுதி:1 பகுதி:2 பகுதி:3 பகுதி:4



முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai