பேரறிஞர் அண்ணாவின் இந்தி எதிர்ப்பு....

அணையாத தீ!
நாம் துவக்க இருக்கும் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி ஓரிரண்டு நாட்களில் முடியும் கிளர்ச்சியல்ல. தொடர்ந்து 10 வருடங்கள் இதே வேகத்தேழடம் கதகதப்போடும் இருக்கும் கிளர்ச்சி.
வீடுகளில் அடுப்பை பாலையில் மூட்டி, மதியம் அணைத்து விடுவார்கள்; ஆனால் வேலூர் ஜெயிலில் மூட்டிய தீ அணைக்கப்படுவதில்லை.
அதுபோல இப்போது பூணும் போர்க்கோலம், இந்தி வெறியர்கள் கண்டு இவ்வளவு எழுச்சி இருக்கிறதா என்று ஆச்சரியப்படத்தக்க அளவில் இருக்க வேண்டும்.

பிரகடனம்
தனியொரு ஆட்சி மொழியாக இந்தியைத் திணிப்பதை தி.மு.க. பணிந்து ஏற்காது. மாறாக, தேசிய மொழிகள் அனைத்துக்கும் ஒத்த தகுதி வேண்டும் என்ற தனது குறிக்கோளை அடையும் வரை தி.மு.க. அதை வற்புறுத்தியே தீரும்; போராடியே தீரும்! இது தி.மு.கழகத்தின் பிரகடனம்!

மெள்ள மெள்ள படரும் நோய்
இந்தி மொழி கட்டாயம் இல்லை; திணிக்கப்போவதில்லை; ஆட்சி மொழியாக அவசரப்பட்டு ஆக்கிடப்போவதில்லை. ஆங்கிலத்தை உடனடியாக அவசரப்படுத்தி நீக்கிடப்போவதுமில்லை என்று ஆணவத்தைப் பதுங்க வைத்துக்கொண்டு பேசிடக் கேட்கிறோம். எனினும் மெள்ள மெள்ள படரும் நோய் போல இந்தி எல்லா சந்து பொந்துகளிலும் நுழைகிறது, குழைகிறது. நமது தன்மானம் பறிபோகிறது.

உணர்வுவர வேண்டாமா?
ரயில்வே கம்பார்ட்மெண்டில் ஏறுகிறபோது தவறி இன்னொருவர் கால் மீது பட்டுவிட்டால் முறைக்கிறோம். "பார்த்துப் போகக்கூடாதா?" என்கிறோம். "இல்லண்ணே; கவனிக்கலே" என்பான். அவன், "கவனிக்காமல் இங்கே ஏன் வந்தாய்?" என்போம். உடனே சண்டை நடக்கும். உணர்ச்சி அங்கே இருக்கிறது. அற்ப விசயங்களுக்க எல்லாம் நமக்கு உணர்ச்சி இருக்கிறது. ஆனால் மக்களுடைய ஆத்மா என்று சொல்லப்படுகிற மொழி அழிக்கப்படுகிற நேரத்தில் உணர்ச்சி வருவதில்லையே, ஏன்?
10 பிணங்கள் இந்தி ஆதிக்கத்திற்காக இந்திக்காரர்கள் நடுப்பாதையிலே போடுவார்களேயானால் தமிழனுடைய பிணம் பத்துக்குப் பத்து நூறு பிணங்கள் தமிழ்நாட்டில் தமிழுக்க விழும் என்று எடுத்துக் காட்டவேண்டும்.

எழுச்சி வெள்ளம்
அகில இந்தியா என்னும் ஏகாதிபத்தியத்துக்கு, இந்தி முத்திரை மொழி! அந்த முத்திரை பொறிக்கப்பட்டவர்கள் எல்லாம், டில்லியின் அடிமைகள் என்பது பொருள். அதற்காகவே இந்தியை ஏற்றுக்கொண்டாக வேண்டும் என்கின்றனர்.

ஆதிபத்திய வெறியரின் அளவுகோல்!
இது மொழிப் பிரச்சினையே அல்ல! அரசியல் ஆதிக்கப் பிரச்சினை!
இன்றுவரை இந்திக்காரர்கள் தங்களது இந்தி வளமான மொழி - நல்ல மொழி என்று மார்தட்டிக் கூறிக் கொள்ளவில்லை.
இன்னும் சொல்லப் போனால், அவர்கள் மொழியிலே வார்த்தைகளைக் கண்டுபிடிக்க கமிட்டியை அமைத்து "ஒரு நாளைக்கு 400 சொற்கள் கண்டுபிடித்தோம்" என்று கூறிக்கொண்டிருக்கிறார்கள்.
வெளிப்படையாகவே சொல்கிறார்கள், இந்த இந்தி அரை குறை மொழி; ஆனால் அது எங்கள் மொழி என்கிறார்கள்.
இன்னும் சொல்லப் போனால், நாம் எந்த அளவு பணியப் போகிறோம் என்பதைக் கண்டுகொள்ள இந்தி ஆதிபத்திய வெறியர்கள்கொண்டு வந்திருக்கிற அளவுகோல்தான் இந்த இந்திச் சட்டம்.

மோகம் குறையவில்லையே!
சில மொழிகள் இருக்கின்றன. அவை, கற்க முடியாதவை; கற்றாலும் கருத்திற் பதியாதவை.
சில மொழிகள் இருக்கின்றன. அவை பேச மட்டும் முடிந்தவை. எழுத முடியாதவை. காரணம், அவற்றிற்கு இன்னும் எழுத்து வடிவம் உண்டாக்கப்படவில்லை.
சில மொழிகளுக்க எழுத்தும் உண்டு; பேச்சு வழக்கம் உண்டு. ஆனால், சரியான இலக்கியவளமோ, இலக்கண வரம்போ கிடையாது.
அப்படிப்பட்ட மொழிகளைக் கற்றால், அவை நினைவிலும் நில்லாது; நிலையான பயளையுந் தராது.
இப்படி, எழுதவும் முடிந்து, பேசயும் தெரிந்து, வளமான இலக்கியமோ, வரம்பு கண்ட இலக்கணமோ இல்லாத மொழி வரிகைகளில் இந்தியும் ஒன்ற எப்தை மொழி நூல் வல்லுனர் பலரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இந்தி, ஒரு மொழிக்கு உரிய வாய்ப்பினையும், வளத்தினையும் பெற இன்னும் பல ஆண்டுகள் பிடிக்கும் என்றும் திட்டவட்டமாகக் கூறப்பட்டுள்ளது.
என்ற போதிலும், ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்திப்போர், இந்தியே இந்நாட்டின் பொது மொழி என்று விளம்பரம் செய்து அதற்கான பெருமுயற்சிகள் பல வகையிலும் எடுத்துப் பார்க்கின்றனர்.
1965ல் இந்திதான் இந்நாட்டின் பொதுமொழி என்று அறிவித்தனர்.
ஆனால், அது முடியாதென்று தொரிந்ததும், இல்லை இல்லை, தெரிவிக்கப்பட்டதும், 1965க்குப் பின்னரும், ஆங்கிலமோ இந்நாட்டின் பொதுமொழியாக இருக்கும் என்று கால வரம்பு குறிப்பிடாமல் கூறிவிட்டனர்.
இந்தி வெளியர்களுக்கு இது ஒரு பேரிடியாகப் போய்விட்டது. இந்தியால் ஆதிக்கம் பெறக் கனவுகொண்டோரெல்லாம் கை பிசைந்து நிற்கும் காட்சி நமக்கு நன்றாகத் தெரிகிறது. என்ன செய்வது? அவர்களைப் பார்த்துப் பரிதாபப்படுவதை விட நம்மால் வேறென்ன செய்ய இயலும்?
ஏன் ஒரு வளவும் வாய்ப்புமற்ற மொழியை இந்நாட்டின் பொது மொழி என்று விளம்பரம் செய்ய வேண்டும்? பின்னர் அது முடியாத கார்யம் என்ற நிலை கண்டு கலங்கவேண்டும்?
இந்த இரங்கத்தக்க நிலை இந்திக்கு ஏற்பட்டும் இந்தி வெறியகர்களுக்கு அதன்பாலுள்ள மோகம் குறைந்ததாகத் தெரியவில்லை.
அதனை எப்படியாவது அரசு பீடத்தில் உட்கார வைத்து விடலாமென்று இன்னும் சிலர் பெரு முயற்சி எடுத்து வருகின்றனர்.
அந்த முயற்சி இனி கைக்கூடி வராது என்பதற்கு நாமும் நடு நிலையாளர் பலரும் பற்பல மேற்கோள்களை எடுத்துக் காட்டி வந்திருக்கிறோம்.

நம்மை அடிமை ஆக்கவோ?
நாக்கிலுள்ள மெல்லிய தோலை உரித்தால் மைனா பேசும்; அதுவும் சில வார்த்தைகள்தான் பேசும்.
அந்த நாக்குரித்த மைனாபோல்தான் நாம் என்னதான் இந்தி கற்றாலும பேச முடியும். நாம் கற்கிற இந்தி நாளாக ஆக தேயும்; இந்திக்காரம்ன கற்கிற இந்தி வளரும்; மலரும். ஏனெனில் அவன் இந்தியிலேயே பிறந்து வளர்கிறான். அவனது இந்தி மொழியை ஆட்சி மொழியாக்குவது, அந்த மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களுக்கு நம்மை அடிமையாக்குவது என்றுதான் பொருள்.

உனக்கு எப்போது?
வரலாற்றுச் சிறப்புப் படைத்த மொழியைப் பெற்றுப் பெருமை கொண்டவர்கள் மீது இந்தியைத் திணிக்கலாமா?
குறிப்பிட்ட சில மாநில மக்களின் தாய்மொழியான இந்தியை பொது ஆட்சி மொழி ஆக்கத் துடிக்கிறாயே, அதன் விளைவாக அந்த மக்களை மேலோர் ஆக்கி எம்மைத் தாசர்கள் ஆக்கிடும் சூழ்ச்சியைச் செய்யலாமா? என்றெல்லாம் சமூகம் கேட்கப் போகிறது. கேட்கும் தெளிவு பரவிவிட்டது; துணிவும் துளிர்த்துக் கொண்டிருக்கிறது.
அந்த விசாரணை நான் விரைந்து பெறப்படவேண்டும். அந்தப் பணியில் ஈடுபட்டிருப்போர், எத்தனை முறை வழக்குமன்றம் செல்ல வேண்டி வந்தாலும், அவை வாய்ப்புக்கள் என்றே கொள்ள வேண்டும்.
அத்தகைய வாய்ப்பு எனக்கு கிடைக்கிறது! உனக்கு? எப்போது?


வேறு மார்க்கமில்லை!
இந்தி, ஒரு தீராத தலைவலியாகவே இருந்து வருகிறது. அது அரசுக் கட்டிலில் அமர்த்தப்படாது என்கிற உறுதிமொழி, தெளிவாகக் கிடைக்க வேண்டும். இண்டு இடுக்குகள் மூலமும் அது புகுத்தப்படாது என்கிறஉறுதிமொழியும் பெற்றாக வேண்டும்.
தாய் மொழிக்காக, தமிழ்நாடு, சிறைக்கள் நுழைந்தது! எனும் கட்டம் விரைவில் ஏற்பட்டாலும் ஏற்படலாம். எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் வற்வுறுத்தியும், டில்லி பீடம், தனது எதேச்சாதிகாரத்தையும் சாணக்கிய புத்தியினையுமே பயன்படுத்துமென்றால், "தமிழர்காள்! தமிழ்நாட்டு மக்காள்! தயாராகுங்கள்!" என்று முரசொலிப்பதைத் தவிர வேறு மார்க்கமில்லை.
மேகங்கள் விலகுமென்கிற அறிகுறி தெரியவில்லை! அதற்கான உறுதிமொழியும் நடவடிக்கைகளும் இல்லையென்றால் மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை எனும் கீதத்தைப் பாடிக் கொண்டு - அணிவகுத்துக் கொண்டு அறப்போரில் ஈடுபட தாயகமே! தயாராயிரு! தயாராயிரு!

உயிர் வளர்க்கும் தாய்!
இந்தி எங்களுக்கு எடுப்புச் சாப்பாடு! ஆங்கிலம் எங்களுக்கு - நாங்கள் சொல்கின்ற முறைப்படி சமையல் செய்து போடுகின்ற சமையல்காரன்!
தமிழ் - எங்களுடைய மனை அறிந்து - எங்களுடைய மனமறிந்து - எங்கள் ஊனறிந்து உணர்வறிந்து - எங்கள் ஊனை - கயிரை வளர்க்கின்ற தாய். அப்படித் தாயின் கரத்தாலே எங்களுக்க உணவு கிடைத்துவிட்டால் - எங்களுக்கு எடுப்புச் சாப்பாடும் வேண்டாம் - ஆங்கில முறை உணவும் வேண்டாம்.

விட்டேனா பார் - என்று வீராப்பா?
தெரிந்தவர்களுக்கும் புரியாதவர்களுக்கும் விளங்காது. இப்படிப்பட்ட ஒரு மொழியை இந்நாட்டின் பொது மொழியாக்க முயல்கிறார்களே சிலர், அவர்களிடம் உண்மையிலேயே சிறிதளவுகூட சகிப்புத்தன்மை இல்லைபோலும்.
எனவேதான், இயலாத ஒன்றை இழுத்துப் பிடித்துக்கொண்டு விட்டேனா பார் என்று வீராப்பு பேசுகிறார்கள்.

போட்டியில் வெல்வார் யார்?
இந்தி படித்துவிட்டால் அந்த மொழியில் பாண்டித்யம் இந்திக்காரர்களைப் போலப் பெற்றுவிட முடியுமா? அது அவர்களுக்குத் தாய்மொழி. நமக்கு அது படிப்பு மொழி!
ஆங்கிலத்தைப் படிப்பதால் தந்தையை சிலர் 'டாடி' என்கிறார்கள். வயதானால் 'ஃபாதர்' என்கிறார்கள். செல்லமாக 'பப்பி' என்கிறார்கள். ஆனால் தாய் கற்றுக் கொடுத்ததற்கு இது இணையாகுமா?
தாய் மொழி என்பது தாயின் கருவில் உருவாகி - பிறந்தவுடன் சுற்றச் சூழ்நிலை அவனுக்கக் கற்றுத் தரும் மொழி. தமிழகத்தில் பிறந்த குழந்தை பிறந்து வளரும்போதே 'அம்மா' என்கிறது. 'அப்பா' என்கிறது 'அத்தை' என்கிறது 'அக்கா' என்கிறது
ஆனால் உத்திரப்பிரதேசத்தில் பிறந்து குழந்தை இவற்றையெல்லாம் இந்தியில் கூறுகிறது. பிறந்து வளர்கிறபோது இந்தி அவர்களுடன் இயைந்து வருகிறது. பிறகு படிக்கும்போது அதில் சிறந்த தேர்ச்சியடைகிறார்கள். ஆனால் நாம் பள்ளியில் போய்த்தான் கற்றுக் கொள்கிறோம்.
அப்படிப்பட்ட இரண்டு தரத்தாருக்கும் போட்டி நடந்தால் யார் வெற்றி பெறுவார்கள்? இரண்டு கால்கள் உள்ளவனுக்கும் ஒரு கால் இழுத்துக் கொள்பனுக்கும் போட்டி வைத்தால் யார் வெற்றி பெறுவார்கள்? பின்னர் எதிர்காலத்தில் உத்திரப்பிரதேசத்துக்காரன் கலைக்டராகவும் நமது நாட்டுக்காரன் கலைக்டர் ஆபீசில் பில்லை போட்ட சேவகனாகவும் நிற்பார்கள். இப்படி எண்ணிப் பார்க்கிறபோதுதான் எதிர்காலத்தில் நமக்கு நேரவிருக்கும் கேடு பற்றி உணர முடியும்!

மூன்று வெற்றிகள்
தாய்மார்கள் அழகாகக் கோலம் போடுவார்கள். எங்கே? வாயிற்படியில்! ஆனால் வீட்டுக்கு வந்த பெண் கட்டிலறையின் கீழே கோலம் போட்டால் - தொட்டுத் தாலி கட்டிய கணவன் என்ன கூறுவான்?
"ஆயிரம் இரண்டாயிரம் செலவழித்து இதற்குத்தானா உன்னைக் கூட்டிக் கொண்டு வந்தது?" என்றால், "உனக்கு அழகு இருக்கிற அளவு அறிவு இல்லை" என்றுதான் கூறுவான்.
அதைப் போல பெரிய இடத்திலே இருக்கிற மனிதர்களுக்கு இந்தி ஆட்சி மொழியாவதை நாம் எதிர்ப்பது புரிவதில்லை.
இங்கேயுள்ளவர்களுக்கு புரியவில்லையே தவிர டில்லியிலுள்ளவர்களுக்குப் புரிந்திருக்கிறது.
அந்த அளவில் இந்தி எதிர்ப்பும் போர் வெற்றியடைந்திருக்கிறது.
முதல் வெற்றி - அவர்களுக்கு மொழிப் பிரச்சினையில் கொஞ்சம் அடக்கம் வந்திருக்கிறது.
இரண்டாவது வெற்றி - அவர்களுக்குச் சந்தேகம் வந்திருக்கிறது - இந்தியை நிலையாக ஆட்சி மொழியாக்கி விட முடியுமா என்று!
மூன்றாவது வெற்றி - அவர்களுக்கு கொஞ்சம் அச்சம் வந்திருக்கிறது. இந்தியை தென்னாட்டில் கடுமையாக எதிர்க்கிறார்கள் என்று!

நோய்க் கிருமி
மரபு அழிக்கும் சதித் திட்டமாகவே நாம் இந்தியைக் கருதுகிறோம் - வெறும் மொழிப்பிரச்சினையாக அல்ல.
உடல் பெரிது; உள்ளே நுழையும் கிருமி மிகமிகச் சிறிது! அளவில்! ஆயின் என்ன? உடலை அரிந்து, அரித்து உயிரையே முடித்துவிடுகின்றன.
செம்மொழி, எம் தமிழ் மொழி! என்ற செப்பிக்கொண்டு இருக்கலாம். சின்னாட்கள் பிறகு எம்மொழி ஆட்சிமொழி? என்று உலகு கேட்குமே என்ன பதிலளிப்போம்? இந்தி ஆட்சி மொழி என்று கூறின் பிறகு செம்மொழிக்கு எவர் மதிப்பளிப்பார்


முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai.