அண்ணா நூற்றாண்டு விழா செய்திகள்

தமிழகக் கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம் - சென்னை & அண்ணா இலக்கியப் பேரவை - மன்னார்குடி
தமிழகக் கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம் - சென்னை மற்றும் அண்ணா இலக்கியப் பேரவை - மன்னார்குடி இணைந்து அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாடியது. மன்னார்குடியில் மாமன்னர் மருதுபாண்டியர் திருமண மண்டபத்தில் 19.09.2009 அன்று காலை 9.30 மணிக்கு மங்கள இசையுடன் தொடங்கிய விழா மாலை 7.00 மணி வரை சிறப்பாக நடைபெற்றது. அரங்கம் 1-ல் பெரியார் அமர்வும், அரங்கம் 2-ல் நாராயணகுரு அமர்வும், அரங்கம் 3-ல் சர்வக்ஞர் அமர்வும் நடைபெற்றன. இதில் பல்வேறு அறிஞர்கள் பங்கேற்று பேசினர்.

மாலை நடைபெற்ற நிறைவு விழாவில் முனைவர் பி.இரத்தினசபாபதி வரவேற்றார். 'அரிய நினைவுகளில் அறிஞர் அண்ணா' என்ற நூலை பேராசிரியர் வெங்கடராஜுலு அவர்கள் வெளியிட ஆந்திரா முனைவர் மஞ்சுநாத் ரெட்டி பெற்றுக்கொண்டார்.

'தன்மானக் கவிஞரின் அண்ணா காவியம்' என்ற நூலை தஞ்சாவூர் அண்ணா பேரவை தலைவர் திரு.வீ.சு.இராமலிங்கம் அவர்கள் வெளியிட்டு உரையாற்றினார். கேரளா முனைவர் கே.ஏ.இராஜாராம் நூலைப் பெற்றார்.

'இந்திய ஒருமைப்பாட்டில் அறிஞர் அண்ணா' என்ற நூலை மன்னார்குடி விசுவநாதன் வெளியிட்டார். பீகார் முனைவர் பிரேஷ் குமார் பெற்றுக்கொண்டார்

கவிவேந்தர் கா.வேழவேந்தன், தலைவர், அறிவியல் தமிழ் மன்றம் அவர்கள் படைப்பாளர்களுக்குப் பணமுடிப்பு வழங்கி விழா நிறைவுச் சிறப்புரையாற்றினார்.

முனைவர் சு.வஜ்ரவேறு நன்றியுரையாற்றினார்.

 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by Anna Peravai, Chennai, Tamil Nadu.