அண்ணா நூற்றாண்டு விழா செய்திகள்
:::
யாங்கோன், மியன்மா :::

பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா - யாங்கோன், மியன்மா
மியம்மா தமிழர்கள் சிறப்புடன் கொண்டாடிய பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா நாளது 29.11.2009ம் நாள் காலை 10.00மணிக்குத் தொடங்கியது.
தொடக்க நிகழ்ச்சியாக பேரறிஞர் அண்ணா கண்காட்சி அரங்கம் திறக்கப்பெற்றது.காலை 10.30மணிக்கு கருத்தரங்கம் இடம்பெற்றது.பகல்12.00மணிமுதல்1.30வரை உணவு உபசரிப்பு அதனைத் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மாலை 3.30 மணிக்கு பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா பல்வேறு சமயம் சார்ந்த தமிழர்கள் கலந்து கொள்ள அண்ணாவின் புகழ்மணங்கமழ சிறப்புடன் கொண்டாடப்பெற்றது.இரவு
6.30 மணிக்கு அண்ணாவின் புகழ் என்றும் சிறக்க ஒலித்து விழா நிறைவெய்தியது.

விழாப் புகைப்படங்கள் சில


பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாக்குழு தொடக்கவிழா - யாங்கோன், மியன்மா

தொடக்க விழா கோலாகலமாக நடைபெற்றது
மியன்மா நாட்டின், பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாக்குழுவினரின் அண்ணா நூற்றாண்டு தொடக்க விழா. நாளது (9-11-2008) நாள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு லும்பினி தமிழர் முது மலர்ச்சோலையில் சமூகக் காவலர் திரு மு.கா.முனியாண்டி அவர்களின் எழிலார்ந்த தலைமையில் நடைபெற்றது. தொடக்க விழா முன்னிலையாளர்களாக லும்பினி முதியோர் காப்பகத்தின் நிறுவனர், திரு இரு.ச.ராஜேந்திரன்(எ)ராஜூ, லும்பினி முதியோர் காப்பகத்தின் பொருளாளர் திரு கே.சௌந்தராஜன், பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாக்குழுவின் சிறப்பு மலர் பொறுப்பாசிரியர் திரு வீரா.முனுசாமி, பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாக்குழுத் தலைவர் திரு ஆ.வெள்ளைச்சாமி, மியம்மாத் தமிழ் இந்து மன்றத் தலைவர் திரு செ.பரந்தாமன், இறைப்பணித் திலகர் திரு அ.ஜோசப், சோலியா முஸ்லிம் சன்மார்க்க சேவைக்குழுவின் முன்னாள் செயலாளர் திரு.லியாகத்தலி B.Sc., பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா சிறப்பு மலர் வெளியீட்டுக் குழுத் தலைவர் திரு மா.சந்திரன் (M.R.C), சிறப்பு மலர் மியாம்மா மொழி பெயர்ப்பாளர் திருமதி.இராணிநடராஜன் ஆகியோர் வீற்றிருந்து சிறப்புரையாற்ற, சிறப்பு மலர் ஆசிரியர் குழுவின் அங்கம் திரு சோலை.தியாகராஜன் அவர்கள் சிறப்பு மலர் பற்றிய விளக்கவுரை ஆற்றினார்.

விழாவின் மையமாக தொடக்கவிழா நிகழ்வில் லும்பினி தமிழர் முதுமலர்ச் சோலையின் நிறுவனர் திரு இரு.சந்திரவேல்-கணேசம்மாள் குடும்பத்தின் சார்பாக கியா 510000/-, சிறப்பு வருகையாளர் திரு.எம்.கே.சேகர் (டோ மெய்ட் சுவே) உணவகத்தின் உரிமையாளர் கியா 300000/-, திரு.செ.பரந்தாமன், திரு.கே.சௌந்தராஜன், திரு எல்.எம்.பாண்டியன்-முத்துலெட்சுமி வட/அவுக்கலா ஆகியோர் தலா கியா ஒருலட்சம் வழங்கினார். பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டுவிழா தொடக்கவிழா சரியாக மாலை 6.30 மணிக்கு சிறப்புமலர் வெளியீட்டுக் குழுவின் செயலாளர் ஆர்.ஏ.செல்வகுமார் அவர்களின் நற்றமிழ் நன்றியுரையுடன் இனிதே நிறைவு எய்தியது...

செய்திகள்
மலர் வெளியீட்டுக் குழு
(யாங்கோன், மியன்மா)

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by Anna Peravai, Chennai, Tamil Nadu.