அண்ணா நூற்றாண்டு விழா செய்திகள்
:::
அண்ணா பேரவை - வேலூர் :::

14.09.2009 வேலூர் அண்ணா பேரவை மற்றும் தென்புலம் பதிப்பகம்-வேலூர்
வேலூர் அண்ணா பேரவை மற்றும் தென்புலம் பதிப்பகம் இணைந்து, பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவை 14.09.2009 அன்று மதியம் 2.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை வேலூர் நகர அரங்கத்தில் சிறப்பாக நடத்தியது. இதில் மாணவ மாணவியற்கான அண்ணாவைப்பற்றிய பல தலைப்புகளில் பேச்சுப்போட்டி நடைபெற்றது. இதில் நடுவர்களாக புலவர் சச்சிதானந்தம், அந்தோணி பிரகாசம் ஆகியோர் பங்கேற்றனர்.
மாலை 5.00 மணியளவில் நூற்றாண்டு நிறைவு விழா நடைபெற்றது. வேலூர் அண்ணா பேரவையின் தலைவரும் தென்புலம் பத்திரிகையின் ஆசிரியரும் அண்ணாவின் நெருங்கிய நண்பரும் அண்ணா காலத்தில் சட்ட மன்ற உறுப்பினருமான மிசா.தோப்பூர் திருவேங்கடம் அவர்கள் தலைமையில் தெ.சமரசம், மற்றும் த.புருடோத்தமன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. டி.எம்.முனிரத்தினம் வரவேற்புரையாற்றினார். பேராசிரியர் முனைவர் அ.விநாயகமூர்த்தி தொடக்கவுரையாற்றினார். கவிஞர் பேராசிரியர் முனைவர் அலிபூர் ரகீம், தஞ்சை குழ.செல்லையா, தளபதி செங்கம் ஜப்பார் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். உதவும் உள்ளங்கள் சந்திரசேகரன், பாலாறு.நடராசன், எஸ்.எம்.கலைமணி, குறளேந்தி கழிஞ்சூர் கோதண்டம், பெரியசாமி, வஞ்சூர் வில்வம், காட்டுக்கானூர் சங்கரன், பொன்.இராமசாமி, ீகூரராகவன், தாமோதரன், அறிவுச்சுடர், தசரதன், இராசு, மணி, தஞ்சை இரா.செம்பியன் மற்றும் பலர் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டனர்.
வாசு கண்ணன் அவர்கள் மற்றும் சேஷன் ஆகியோர் போட்டிகளில் கலந்துகொண்டவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். விழாவுக்கான பல ஏற்பாடுகலை செய்த திரு.செந்தில் குமார் அவர்கள் நன்றிரை வழங்கினார்கள்.

04.04.2009 வேலூர் மாவட்ட அண்ணா பேரவை

வேலூர் மாவட்ட அண்ணா பேரவையும் தென்புலம் பதிப்பமும் இணைந்து நடத்திய அண்ணா நூற்றாண்டு தென்புலம் 2009 சிறப்பு மலர் வெளியீடும், அண்ணா மகன்களான கௌதமன், இளங்கோவன், பாபு மற்றும் மருத்துவர் பரிமளத்தின் மகன்களான மலர்வண்ணன், சௌமியன் ஆகியோருக்கு சிறப்பு செய்தல் விழா 04.04.2009 அன்று மாலை 4.00 மணிக்கு வேலூர் நகர அரங்கில் நடைபெற்றது. வேலூர் அண்ணா பேரவைத் தலைவர் தோப்பூர் திருவேங்கடம் அவர்கள் வரவேற்புரையாற்ற கல்விக்கான வாழ்நாள் சாதனையாளர் வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன் அவர்கள் தலைமையில் வழக்கறிஞர் தெ.சமரசம் அவர்கள் முன்னிலையில் விழா சிறப்பாக நடைபெற்றது. வேந்தர் அவர்கள் அண்ணா நூற்றாண்டு தென்புலம் 2009 மலரை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். முதல் பிரதியை மருத்துவர் த.குமரகுரு அவர்கள் பெற்றுக்கொண்டார். அறிஞர் அண்ணா குடும்பத்தினருக்கு அண்ணா பேரவையின் சார்பில் வேந்தர் சிறப்புச் செய்தார். தோப்பூர் திருவேங்கடம் அவர்கள் பேசுகையில் தென்புலம் 2009 மலர் யாரிடமும் சிறு நன்கொடை பெறாமல் தாமே அதை தொகுத்து வழங்கவேண்டும் என்ற எண்ணத்தில் ஈடுபட்டு அதை அப்படியே நிறைவேற்றியதாகக் கூறினார். அந்த மலரில் அண்ணாவைப் பற்றிய முக்கிய தகவல்களும், அன்றைய நாட்களில் நடைபெற்ற அரிய சம்பவகளும் இடம்பெற்றிருக்கின்றன. பல அரிய புகைப்படங்களும் தொகுக்கப்பட்டுள்ளன. விழாவில் அண்ணா பேரவையின் தலைவர் அண்ணா மலர்வண்ணன் அவர்கள் பேரவையின் செயல்பாடுகள் குறித்து விளக்கிப் பேசினார். மேடையில் வீற்றிருந்த சிறப்புவிருந்தினர்கள் வாழ்த்துரை வழங்கினர். நிறைவாக திரு.கலைமணி அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by Anna Peravai, Chennai, Tamil Nadu.