அண்ணா நூற்றாண்டு விழா செய்திகள்
::: உலகத் தமிழர் பேரவை :::

06.09.2009 உலகத் தமிழர் பேரவை, சென்னை
உலகத் தமிழர் பேரவை, பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவை 06.09.2009 அன்று மாலை 6 மணிக்கு சென்னை தேவநேயப் பாவாணர் மாவட்ட மைய நூலகக் கருத்தரங்கு மண்பத்தில் நடத்தியது.
உலகத் தமிழர் பேரவவை பொதுச்செயலாளர் புலவர் இராமாநுசன் வரவேற்புரையாற்றினார். மத்திய அமைச்சர் மாண்புமிகு ஜகத்ரட்சகன் தலைமை தாங்கினார். கேரண மாநிலக் கல்வியமைச்சர் மாண்புமிகு எம்.ஏ.பேபி அவர்கள் முன்னிலை வகித்தார். முனைவர் ஔவை நடசாரன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
விழாவில் நடைபெற்ற கருத்தரங்கத்தில், தமிழ்ச்செம்மல் திரு.ஜமால், செந்தமிழ் மணி திரு.கோகுலன், திரு.ப.சந்தர் மற்றும் கல்லூரி மாணவர்கள் செல்வி மு.இரம்யா, செல்வி த.இலக்கியா, செல்வன் மன்னர் மன்னன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.
அண்ணாவின் எழுத்தோவியம் 'பாவையின் பயணம்' என்ற நாடகத்தை காயிதேமில்லத் அரசு மகளிர் கல்லூரியைச் சேர்ந்த 24 மாணவியர் நடித்து அரங்கேற்றினர்.
அன்று 73ஆம் அகவை எய்தும் பேரவைத் தலைவர் முனைவர் இரா.சனார்த்தனம் மற்றும் கே.ஆர்.ஆர்.நாடக மன்றத்தினர் கலைமாமணி டி.என்.கிருஷ்ணன், திரு.சர்தார்ஜி பங்குபெறும் 1945இல் அண்ணா எழுதி நடித்த 'சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்' என்ற நாடகம் அண்ணாவின் ஆற்றல் அரைகள் - பேரவையின் 40 ஆண்டு பணிகள் குறுந்தகடு வெளியிடப்பட்டது.
ஒப்பனை அண்ணாவிற்கு அந்நாளில் ஒப்பனை செய்த திரு.கி்ருஷ்ணன், இன்னிசை - ரகுவின் புதிய ஸ்வரங்கள்.
விழாவை பேரவையின் தலைவர் முனைவர் இரா.சனார்தனம் முன்னின்று சிறப்பாக நடத்தினார்.

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by Anna Peravai, Chennai, Tamil Nadu.