அண்ணா நூற்றாண்டு விழா செய்திகள்
:::
தமிழ் வயல் இலக்கிய அமைப்பு, கோவை :::

ஜனவரி 17.01.2009 தமிழ் வயல் இலக்கிய அமைப்பு, கோவை
பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா மற்றும் சிகரம் சிரிக்கிறது நூல் அறிமுக விழா கோவை சுந்தராபுரம் தமிழ் வயல் இலக்கிய அமைப்பு நடத்தியது. தமிழ் வயல் இலக்கிய அமைப்பு தலைவர் கவிஞர் ம.இளங்கீரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அண்ணா பேரவை கி.வெற்றிவேறு தொடக்க உரையாற்றினார். அண்ணா என்றொரு சுயமரியாதைச் சுடரொளி என்ற தலைப்பில் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேருரையாற்றினார். பெரியார், அண்ணாவின் பெயரால் கட்சி நடத்துவது முக்கியமல்ல. பெரியாரிடமும், அண்ணாவிடமும் உண்மையான அன்பு காட்டுபவர்கள் அவர்களது பாதையில் நடக்கவேண்டும். ஓர் இயக்கம் பல நூற்றாண்டுகள் கழித்துதான் வெற்றி பெற்றதாக வரலாறு உண்டு. ஆனால் பெரியார் தொடங்கிய பகுத்தறிவுக் கொள்கை அவரது வழியைப் பின்பற்றிய அண்ணாவின் காலத்திலேயே வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது என்றார். முன்னதாக ம.இளங்கீரன் எழுதிய சிகரம் சிரிக்கிறது என்ற கவிதை நூலை அவர் வெளியிட கோவை அரசினர் கலைக் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் புனிதா ஏகாம்பரம் பெற்றுக்கொண்டார்.

 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by Anna Peravai, Chennai, Tamil Nadu.