அண்ணா நூற்றாண்டு விழா செய்திகள்
::: தமிழ்நாடு அரசு :::

15.09.2009 தமிழக அரசு சார்பில் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா
தமிழக அரசு சார்பில் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவ்ர்கள் தலைமையில் 15.05.2009 அன்று மாலை 5.00 மணிக்கு நடைபெற்றது.
விழாவில் அண்ணா உருவம் பொறித்த 5 ரூபாய் நாணயம் மத்திய அரசால் மத்திய நிதியமைச்சர் மாண்புமிகு ப்ரணாப் முகர்ஜி அவர்களால் வெளியிடப்பட்டது. அறிஞர் அண்ணாவைப்பற்றி அறிஞர்களும், பேராசிரியர்களும், அண்ணாவோடு நெருங்கிப் பழகியவர்களும், எழுத்தாளர்களும், பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களும் எழுதிய கட்டுரைகள் அடங்கிய சிறப்பானதொரு மலர் ஒன்றை தமிழக அரசு சார்பில் டாக்டர் கலைஞர் அவர்களால் வெளியிடப்பட்டது. அண்ணாவைப்பற்றிய ஒரு சிறப்பு இணையதளம் ஒன்று(http://anna100.tn.gov.in) தமிழக அரசு சார்பில் மாண்புமிகு தமிழக துணை முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கிவைத்தார்கள்.
விழாவில் டாக்டர் கலைஞர், பேராசிரியர் அன்பழகன், திரு.மு.க.ஸ்டாலின், திரு.எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், திரு.தயாநிதிமாறன், திருமதி.கனிமொழி, திரு.பரிதி இளம்வழுதி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். மத்திய நிதியமைச்சர் ப்ரணாப் முகர்ஜி அவர்கள் அண்ணாவைப்பற்றி சிறப்பானதொரு ஆங்கில உரையாற்றினார். அதில் சில வரிகள் பின்வருமாறு
The DMK founder is a harbinger of social reforms. He was a great democrat, an excellent orator, a distinguished parliamentarian and a great leterary figure who dealy demonstrated the need for political leaders to emulate him as a role model...
... This transformation started aftera massive mandate to the DMK in the 1967 elections. The Congress, which considered ruling the Centre and the states as a "natural right", woke up to a "rude shock", with the party failing to muster majority in nine states, including Tamil Nadu.
The success of DMK, under the leadership of Dr.Annadurai, not only secured the decisive majority but perhaps created a history that since then only the Dravidian parties are getting the mandate....
.... he recognised the aspirations of the people and was able to operate on the basic fundamental principles of social transformation. Rather than emotion, Dr.Annadurai operated on the basis of logic and reason.

பேரறிஞர் அண்ணாவின் நினைவைப் போற்றும் வகையில் அவர் புகைப்படங்களும், ஒளிக்காட்சிகளும் அடங்கிய பாடல் ஒன்று விழாவின் இடையில் திரையிடப்பட்டது வந்திருந்த அண்ணா பற்றாளர்களையும், பொதுமக்களையும் மெய் சிலிர்க்க வைத்தது.


தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் (கலை பண்பாட்டுத் துறை)

பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவை டிசம்பர் 4, 5, 6 ஆகிய தேதிகளில் சென்னை தியாகராய நகரில் உள்ள சர்.பிட்டி.தியாகராய கலையரங்கத்தில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சிறப்பாக நடத்தியது.

4.12.2008 அன்று மாலை நடைபெற்ற விழாவில் உறுப்பினர் செயலாளர் கவிஞர் இளையபாரதி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். தமிழக அமைச்சர் சுரேஷ் ராஜன் அவர்கள் விழாவைத் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

பின்னர் நடைபெற்ற கவியரங்கத்தை கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் தலையேற்று அண்ணாவைப்பற்றிய கவிதைகளை சிறப்பாக வழங்கினார் அதனைத் தொடர்ந்து கவிதைப்பித்தன், யுகபாரதி, கவிமுகில், பா.ரவிக்குமார், ரசாக், விவேகா ஆகிய கவிஞர்கள் அண்ணாவின் புகழ் பாடினர். ஒவ்வொருவரும் தஙகள் நோக்கில் அண்ணாவை ஆய்ந்து கவிதை புனைந்தது மிகவும் அழகாகவும், பாராட்டுக்குறியதாகவும் இருந்தது. தலைமை வகித்த கவிஞர் தமிழன்பன் அவர்கள் இடையிடையே அண்ணாவின் வாழ்க்கையில் நடைபெற்ற அரிய சம்பவங்களையும் நினைவுகூர்ந்தது சிறப்பாக அமைந்தது.

05.12.2008 அன்று மாலை மறுவாசிப்பில் பேரறிஞர் அண்ணா என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. மாண்புமிகு மத்திய அமைச்சர் அ.இராசா அவர்கள் தலைமை வகித்து சிறப்புரை வழங்கனார்.

திரு.ஏ.எஸ்.பன்னீர் செல்வன் அண்ணாவின் கடிதங்கள் என்ற தலைப்பிலும், திரு.து.ரவிக்குமார் அண்ணாவின் கட்டுரைகள் என்ற தலைப்பிலும், அருட்தந்தை ஜெகத் கஸ்பார் அண்ணாவின் சொற்பொழிவுகள் என்ற தலைப்பிலும், திரு.இமையம் அண்ணாவின் சிறுகதைகள் என்ற தலைப்பிலும், பேராசிரியர் அ.ராமசாமி அண்ணாவின் நாடகங்கள் என்ற தலைப்பிலும், காவ்யா சண்முகசுந்தரம் அண்ணாவின் திரைக்கதைகள் என்ற தலைப்பிலும் கட்டுரைகள் வழங்கி சிறப்பித்தனர்.

06.12.2008 அன்று காலையில் அண்ணா கலைவிழாவை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவர் திரு.இராம.நாராயணன் அவர்கள் தலைமை தாங்கினார். இவ்விழாவில் கலை அறப்பேரவை கலைவாணர் குழுவினர் வழங்கிய பேரறிஞர் அண்ணாவின் சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் நாடகம் பொம்மலாட்ட வடிவில் வழங்கப்பட்டது. இயக்குநர் அமிர்தம் இயக்கிய அண்ணா வாழ்கிறார் என்கிற குரும்படமும், நக்கீரன் வழங்கிய கோவி.லெனின் உருவாக்கிய அண்ணா, பெருங்கடலிருந்து சில துளிகள் என்கிற குறும்படமும் திரையிடப்பட்டன.

மாலை 5.00 மனியளவில் கலைமாமணி சரஸ்வதி குழுவினர் பேரறிஞர் அண்ணா என்ற வில்லிசை நிகழ்ச்சியை சிறப்பாக வழங்கி அண்ணாவைப்பற்றிய அரிய செய்திகளை அளித்தனர்.

மாலை 6.30 மணியளவில் மாண்புமிகு நிதியமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் கவிஞர் கருணானந்தம் எழுதிய அண்ணா – சில நினைவுகள் என்ற நூலை வெளியிட்டு சிறப்புரையாற்றினார்.

உறுப்பினர் – செயலாளர் கவிஞர் இளையபாரதி அவர்கள் விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். பார்வையாளர்கள், தமிழகம் மட்டுமல்லாமல் உலகெங்கிலுமிருந்து வந்து கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by Anna Peravai, Chennai, Tamil Nadu.