அண்ணா நூற்றாண்டு விழா செய்திகள்
:::
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் :::

06.05.2009 உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
சென்னை தரமணியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மையம் நடத்திவரும் அண்ணா நூற்றாண்டு விழா தொடர் கருத்ரங்கு நிகழ்ச்சியின் எட்டாவது கருத்தரங்கு 06.05.2009 அன்று நடைபெற்றது. நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் முனைவர் கரு.அழ.குணசேகரன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். தஞ்சாவூர் அண்ணா பேரவையின் தலைவர் வழக்குரைஞர் வீ.சு.இராமலிங்கம் அவர்கள் பேரறிஞர் அண்ணாவின் ஆளுமை என்ற பொருளில் சிறப்புரையாற்றினார். பேசத்தொடங்கும்போதே அண்ணாவின் இறுதி ஊர்வலத்தைப் பற்றி விளக்கினார். இன்று வரை கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுள்ளது என்றால் அண்ணாவின் ஆளுமையின் சிறப்பு விளங்கும் என்றும், ஏழை, பணக்காரன், நாத்திகன், ஆத்திகன் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவரும் அண்ணாவைப் போற்றினர் என்றும் தொடங்கிய சொற்பொழிவை சுமார் இரண்டு மணிநேரம் விரிவாக நிகழ்த்தி பல அரிய செய்திகளை வழங்கினார். இதில் ஆராய்ச்சி மாணவர்களும், ஆசிரியர்களும் கலந்துகொண்டனர். மேலும் காந்தளகம் பதிப்பகத்தின் ஆசிரியர் மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்களும், இலண்டனிலிருந்து வந்திருந்த அண்ணா பேரவையின் இலண்டன் அமைப்பாளர் டாக்டர் இராம் அவர்களும் அவரது மனைவியும் கலந்துகொண்டனர். கருத்தரங்கு பொருப்பாளர் முனைவர் மு.வளர்மதி அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

 

இதற்கு முன்பு நடைபெற்ற கருத்தரங்கு தலைப்புகளும் சிறப்புரையாற்றியவர்களும் பின் வருமாறு.

30.10.2008 டி.கே.எஸ். இளங்கோவன அண்ணாவின் அரசியல் நாகரிகம்
28.11.2008 கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் அண்ணாவின் பிறநாட்டு அறிஞர்களும்
04.12.2008 பேரா. மறைமலை இலக்குவனார்  தமிழ் மறுமலர்ச்சியில் அறிஞர் அண்ணாவின் பங்களிப்பு
30.01.2009 பேரா.முனைவர் அருணா இராசகோபாலன் அறிஞர் அண்ணா பண்டபாட்டு மறுமலர்ச்சியின் தாய்
27.02.2009 திருமதி சுப்புலட்சுமி ஜெகதீசன்  மகளிர் முன்னேற்றத்தில் அண்ணாவின் பங்களிப்பு
16.03.2009 திருமதி. எஸ்.பி.சற்குணபாண்டியன்  அறிஞர் அண்ணாவின் மக்களாட்சி நோக்கு
23.04.2009 பேரா.முனைவர் சா.வளவன்  பேரறிஞர் அண்ணாவின் படைப்பிலக்கியங்கள்

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by Anna Peravai, Chennai, Tamil Nadu.