அண்ணா நூற்றாண்டு விழா செய்திகள்
::: புதுக்கோட்டை :::

03.10.2009 அண்ணா பேரவை - புதுக்கோட்டை
புதுக்கோட்டை அண்ணா பேரவை சார்பில் அண்ணா நூற்றாண்டு விழா நிறைவு நாள் 03.10.2009 அன்று ராதா கபே மாடியில் நடைபெற்றது. கவிஞர் முத்துப்பாண்டியன் தலைமைவகித்தார். அண்ணா பேரவைத் தலைவர் இரா.சோமசுந்தரம் எம்.ஏ. வரவேற்புரை நிகழ்த்தினார். வழக்கறிஞர் தஞ்சை ராமலிங்கனார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குழ.செல்லையா, வழக்கறிஞர் ஆர்.மதியழகன், திருக்குறள் கழகத் தலைவர் பா.இராமையா, தமிழிசைச் சங்கத் தலைவர் பொறிஞர் தா.கமலாசனம் ஆகிறோர் சொற்பொழிவாற்றினார்கள்.
கூட்டத்தில் பேசியவர்கள், அறிஞர் அண்ணாவின் பெருந்தன்மை மற்றும் மனிதாபிமானம் பற்றியும் மேலும் தலைவர்களை உருவாக்கிய தலைவர் என்றும் 1967-ல் காங்கிரசுக்கப் போடப்பட்ட பூட்டு இன்னும் திறக்கப்படவில்லை என்றும் வரலாற்றில் யாருடனும் ஒப்பிட முடியாத தலைவர் என்றும் தமிழனுக்கு முகவரி தந்தவர் என்றும் பேசினார்கள்.
அண்ணா பேரவை செயலாளர் சுப.தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார்.

செப்டம்பர் 14 - திருக்குறள் கழகம், புதுக்கோட்டை
புதுக்கோட்டை திருக்குறள் கழகத்தின் சார்பி்ல் 14.09.2008 அன்று அண்ணா நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. அதில் அண்ணா பேரவையின் துணை பொதுச் செயலாளர் திரு.வீ.சுஇராமலிங்கம் அவர்கள் அண்ணாவின் பன்முகம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.

 

 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by Anna Peravai, Chennai, Tamil Nadu.