அண்ணா நூற்றாண்டு விழா செய்திகள்
:::
பாவாணர் தமிழியக்கம், திருச்சி :::

அண்ணா நூற்றாண்டு விழா - பாவாணர் தமிழியக்கம், திருச்சி
திருச்சியில் பாவாணர் தமிழியக்கம் சார்பில் நவம்பர் 16ஆம் தேதி அண்ணா நூற்றாண்டு விழா சொற்பொழிவு நடைபெற்றது. இதில் தஞ்சாவூர் அண்ணா பேரவை தலைவர் வீ.சு.இராமலி்ங்கம் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். அண்ணாவை இப்போது சமுதாயம் அறியாமல் இருக்கிறது என்றும், அண்ணாவை எல்லோருக்கும் தெரியப்படுத்தவேண்டும், காரணம் இன்றைக்கு அண்ணா தேவைப்படுகிறார் என்று பேசினார். மேலும் அண்ணா தமிழுக்காக பாடுபட்டதை மிகவும் தெளிவாக எடுத்துரைத்தார். அண்ணா நாடாளுமன்றத்தில் தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் குரல் கொடுத்து தமிழ்நாட்டு பக்கம் இந்தியாவை திரும்பிப் பார்க்கச் செய்ததாக தெரிவித்தார்.

கூட்டத்தில் அண்ணாவைப்போற்றி கவிதை பாடப்பட்டது.

 

 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by Anna Peravai, Chennai, Tamil Nadu.