அண்ணா நூற்றாண்டு விழா செய்திகள்
:::
ஆவணப்படத்திரையிடல் விழா :::

அண்ணா பெருங்கடலிலிருந்து சில துளிகள்-ஆவணப்படத்திரையிடல் விழா.

தமிழ்ப்புலனாய்வு இதழில் தனி இடம் பெற்றுள்ள நக்கீரன் பத்திரிகை நிறுவனம் முதன்முதலாக காட்சி ஊடகத்தில் கால் பதித்துள்ளது. நக்கீரன் தயாரிப்பில் அதன் தலைமைத்துணையாசிரியர் கோவி.லெனின் எழுதி இயக்கிய அண்ணா-பெருங்கடலிலிருந்து சில துளிகள் என்ற ஆவணப்படத்தின் திரையிடல் நிகழ்ச்சியும் அதனையொட்டிய கருத்தரங்கமும் 29-10-08 அன்று சென்னை எழும்புரில் உள்ள இக்சா மையத்தில் நடைபெற்றது.
தீபாவளித் திரைப்படங்கள் பல வெளியாகியுள்ள நிலையில், ஓர் ஆவணப்படத்திற்கு அரங்கு நிறைந்ததுடன்50க்கும் மேற்பட்டோர் நின்றுகொண்டே படம் பாத்தது,தமிழத்தில்குறும்பட-ஆவணப்படங் கள்குறித்த விழிப்புணர்வு பெருகியிருப்பதன் அடையாளமாக இருந்தது. இந்த ஆவணப்படம் தொடர்பான கருத்தரங்கில் பேசிய முன்னாள் எம்.எல்.ஏவும் வழக்கறிஞருமான கடலுர் இள.புகழேந்தி“அறிஞர் அண்ணாவை இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் விதத்தில் இந்தப்படம் அமைந்துள்ளது. இது மிகவும் அவசியமான பணி” என்றார். திரைப்பட இயக்குநர் செல்வபாரதி பேசும்போது, “இரண்டரை மணி நேரம் ரசிகர்களை அரங்கத்தில் அமரவைக்கவேண்டும் என்பதற்காக திரைப்படங்களை உருவாக்கும்போது பல உத்திகளைச்சேர்க்கிறோம். ஆனால், இந்த ஆவணப்படம் அத்தனை பேரையும் கட்டிப்போட்டுவிடுகின்ற அளவுக்குஅண்ணாவைப் பற்றியசெய்திகளை சுவைபடத் தெரிவித்துள்ளது” என்றார்.
கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் இந்த ஆவணப்படத்தின் தேவை குறித்து தெரிவித்ததுடன்,“இன்றைய மாணவர்கள் அயல்நாட்டு இலக்கியவாதிகளை அறிந்த அளவுக்கு அண்ணாவை அறிந்திருக்க மாட்டார்கள். அவர்கள் அறிந்துகொள்ளும் வகையில் இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது” என்றார்.
விழாவில் மாநில மகளிர் ஆணையத்தலைவர் முனைவர் ராமாத்தாள் , இந்த ஆவணப்படம் தனக்குள்ஏற்படுத்திய தாக்கம் குறித்து பேசினார். ஆவணப்படம் உருவான பின்னணியைஅதன் தயாரிப்பாளரான நக்கீரன் கோபால் தெரிவித்ததுடன், “இந்த ஆவணப்படம் வணிகரீதியாகவும் வெற்றி பெற்றிருக்கிறது“ என்று சொன்னது இத்துறையில் கால் பதிக்க விரும்புவோருக்கு நம்பிக்கை அளித்தது. விழாஅரங்கிலும் அண்ணா ஆவணப்படத்தின் குறுந்தகடுகள் விற்பனையாயின. படத்தை இயக்கிய கோவி.லெனின், ஒளிப்பதிவு செய்த ஃபெலிக்ஸ் இன்பஒளி உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியைத்தொகுத்து வழங்கிய சித்ராபாலசுப்ரமணியம் குறிப்பிட்டது போல, அண்ணா-பெருங்கடலிலிருந்து சில துளிகள் ஆவணப்படத்தை காட்சிப்புத்தகம என்று சொல்வது மிகவும் பொருத்தமாக இருககும் என்ப தே திரையிடல் நிகழச்சிக்கு வந்திருந்த பத்திரிகையாளர்கள், குறும்பட-ஆவணப்பட இயக்குநர்கள், திரைப்படத் துறையினர், பார்வையாளர்கள் ஆகியோரின் கருத்தாகவும் இருந்தது. தமிழகம் கண்ட மகத்தான தலைவர்களில் ஒருவரான அண்ணாவைப் பற்றி அவரது நுற்றாண்டில் வெளியாகியுள்ள காட்சிப்பதிவு என்ற அளவில் இந்த ஆவணப்படம் கவனம் பெற்றுள்ளது.


 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by Anna Peravai, Chennai, Tamil Nadu.