அண்ணா நூற்றாண்டு விழா செய்திகள்
:::
மருதப்பா அறக்கட்டளை, தஞ்சை சங்கத் தமிழ்க் கழகம் :::

ஜனவரி 14,15,16, 2009 மருதப்பா அறக்கட்டளை, தஞ்சை சங்கத் தமிழ்க் கழகம்
மருதப்பா அறக்கட்டளை, தஞ்சை சங்கத் தமிழ்க் கழகம் சார்பில் அண்ணா நூற்றாண்டு விழா நடைபெற்றது. புதியபார்வை ஆசிரியர் முனைவர் ம.நடராசன் அவர்கள் முன்னின்று விழாவை சிறப்பாக நடத்தினார். அண்ணாவின் பாதையில் இன்றைய இளைஞர்கள் நடைபோட தடையாக இருப்பது வீடா? வீதியா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. கவிஞர் பாரதன் நடுவராக பங்குபெற்ற நிகழ்ச்சியில் ச.சேது மாதவன், க.காளியப்பன், அரசு பரமேஸ்வரன், அ.ரேணுகா தேவி ஆகியோர் பங்குபெற்று உரை நிகழ்த்தினர். ஜனவரி 16 அன்று மாலை நடைபெற்ற நிறைவு விழா, முனைவர் ம.நடராசன் தலைமையுரையாற்றினார், விழாவில் சிறப்பு விருந்தினர்களாக, ஸ்ரீலஸ்ரீ மதுரை ஆதீனம், நடிகர் கார்த்திக், வின் டிவி தேவநாதன் நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரையாற்றினர். மூன்று நாட்கள் நடைபெற்ற விழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தேறியது.

 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by Anna Peravai, Chennai, Tamil Nadu.