அண்ணா நூற்றாண்டு விழா செய்திகள்
::: அண்ணா பேரவை - மதுரை :::

13.09.2009 அண்ணா பேரவை - மதுரை
மதுரை அண்ணா பேரவையின் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா 13.09.2009 அன்று மாவட்ட அமைப்பாளர் வல்லாளப்பட்டி திரு.பெரியய்யா அவர்கள் சீரும் சிறப்புமாக நடத்தினார்.
முதலில் பேரறிஞர் அண்ணா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. விழாவுக்கு திரு. ந.பெரியய்யா தலைமையேற்றார். திரு.வ.க.க.மகேந்திரன் முன்னிலை வகித்தார். திரு.வ.ரெகுபதி, திருவ்.மோகன், திரு.சி.ஜெயராமன், திரு.சி.ஆசைத்தம்பி, திரு.எஸ்.அன்வர்பேக், திரு.சிங்காரம், திரு.காந்திநாதன் மற்றும் திரு.செல்வக்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
விழாவில் உயர்நிலைப்பள்ளி, ஆரம்பப்பள்ளி ஆகிய இரண்டு பள்ளிகுளுக்கும் உலக உருண்டை(குளோப்) அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் புலவர் நெ.சுந்தரராசன், திரு.அ.கருப்பன்செட்டி மற்றும் டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருது பெற்ற திரு.டி.தேவராஜ் ஆகியோருக்கு பாராட்டு செய்யப்பட்டது.
தன்னலம் கருதாது, படித்த இளைஞர்களுக்கு காவலர் பயிற்சியளிக்கும் திரு.வி.கலங்கமலை அவர்களுக்கு பாராட்டு செய்யப்பட்டது.
மேலூர் கல்வி மாவட்டதில் 10-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று இரண்டாவது இடத்தைப் பெற்ற மாணவி வெல்வி எம்.வினோதா 500/482, தமது ஊர் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவன் செல்வன் பி.பாலமுருகன் 500/473 ஆகியோருக்கு பாராட்டு செய்யப்பட்டது.
மரநடுவிழாவும், விளையாட்டுப்போட்டிகளும் நடைபெற்றது.
13.09.2009 காலை 7.00 மணிமுதல் மாலை வரை நடைபெற்று முடிந்த விழாவில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1.நமது ஊர் மேல் நிலைப்பள்ளிக்கு நிலம் தந்தோர் மற்றும் நிதி உதவியும், பொருளுதவியும் செய்த அனைவரையும் பாராட்டி அண்ணா பேரவை நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
2. தமிழ் மொழியை செம்மொழியாக்கிய தமிழக அரசை பேரவை பாராட்டுகிறது.
3. மதுரையிலிருந்து மேலூர் - காரைக்குடி வழியாக சென்னை வரை ரெயில் போக்குவரத்து ஏற்படுத்தித்தர மத்திய மத்திய மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறது.
4. தமிழுக்க முகவரியாம் மதுரை. அங்கே உள்ள சென்னை உயர்நீதிமன்ற கிளையில் நுழைவாயிலில் இரண்டு பக்கமும் ஆங்கிலத்தில் பெயர்பலகை வைக்கப்பட்டுள்ளதை ஒரு பக்கத்தில் தமிழில் பெயர்பலகை வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறது.
5. அண்ணா நூற்றாண்டு விழாவிற்கு நிதி உதவி செய்தும், பரிசு பொருட்களும், புத்தகங்களும், டிஸ்னரி(அகராதி) மற்றும் பொருட்களும் தந்த நல்ல உள்ளங்களுக்கு பேரவை நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by Anna Peravai, Chennai, Tamil Nadu.