அண்ணா நூற்றாண்டு விழா செய்திகள்
::: சென்னை பல்கலைக்கழகம் :::

14.09.2009 சென்னை பல்கலைக்கழகம் - அண்ணா பொதுவாழ்வியல் மையம்

சென்னை பல்கலைக்கழகத்தின் அண்ணா பொதுவாழ்வியல் மையம் நடத்திவரும் அண்ணா நூற்றாண்டு விழாத் தொடர் நிகழ்வுகள் வரிசையில், 14.09.2009 அன்று தான் தயாரித்துவரும் அண்ணா 100 ஒரு வராலற்றுப் பார்பை என்ற ஆவணத் திரைப்படத்தின் ஒரு முன்னோட்டம் மாலை 3.00 மணியளவில், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் திரையிடப்பட்டது. முன்னோட்டம் அடங்கிய குறுந்தகட்டை நீதியரசர் ச.ஜெகதீசன் வெளியிட திரைப்பட இயக்குநர் அமீர் பெற்றுக்கொண்டார். துறைத் தலைவர், பேராசிரியர் இரா.தாண்டவன் அவர்கள் தயாரித்து வருகிறார். மக்கள் ஊடகம் மற்றம் தொடர்பியல் துறை இதை உருவாக்கிவருகிறது. நெறியாளர் பேராசியர்.கோ.இரவீந்தின், உதவி இயக்குநர் ரபீக், ஒளிப்பதிவாளர்கள் ஆர்.கணேசன், இளந்திருமாறன், ஆர்.ஆர்.சீனிவாசன், படத்தொகுப்பு பி.தங்கராஜ், தயாளன், இணை இக்குநர் குட்டி ரேவதி, ஆய்வு வடிவம்-இயக்கம் ஆர்.ஆர்.சீ்னிவாசன்.
இந்த ஆவணப்படத்தின் முழுவடிவிலான வெளியீட்டை வெகுவிரையில் செய்யவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
மேலும் அண்ணாவின் புகைப்படங்கள் அடங்கிய ஆல்பம் ஒன்று வெளியிட இருப்பதாகவும், இதுவரை நடைபெற்ற நூற்றாண்டு கருத்தரங்கங்களில் படிக்கப்பட்ட கட்டுரைகளைத் தொகுத்து மலர் வெளியிட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by Anna Peravai, Chennai, Tamil Nadu.