அண்ணா நூற்றாண்டு விழா செய்திகள்
:::
அண்ணா பேரவை, சென்னை :::

25.09.2009 சென்னை அண்ணா இல்லத்தில் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா
சென்னை அண்ணா இல்லாத்தில், அண்ணா பேரவையின் சார்பில் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழா 25.09.2009 அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. டாக்டர் அண்ணா பரிமளம் அவர்களின் மகன் அண்ணா மலர்வண்ணன் தலைமையேற்றார். மதிப்பிற்குரிய திரு.இராம.வீரப்பன் அவர்கள் சிறப்புரை வழங்கினார். அவர் பேசும்போது, அண்ணாதான் தன் வாழ்க்கைக்கு வழிகாட்டினார் என்பதை பல நிகழ்ச்சிகளை நினைவு கூர்வதின் மூலம் வெளிப்படுத்தினார். தன் உடல்நிலை சரியில்லாத நேரத்தி்லும் அண்ணா இல்லத்தில் நடைபெறுகிற விழா என்பதால் தவறாமல் கலந்துகொள்ளவேண்டும் என்றே தான் வந்ததாகத் தெரிவித்தார்.

வாழ்த்துரை வழங்கிய திரு.கண்ணியம் குலோத்துங்கன் அவர்கள் அண்ணாவோடு தான் அறிமுகமாகி இன்று வரை அண்ணாவுக்கு செய்யும் பணிகளை பற்றிப் பேசினார். திரு.மறைமலையான் அவர்கள் அண்ணாவின் சிறப்புகள் சிலவற்றை எடுத்துரைத்தார். மதுரை மாவட்ட அண்ணா பேரவை அமைப்பாளர் திரு.பெரியய்யா அவர்கள் அங்கே அவர் செய்யும் பணிகள் பற்றி விளக்கினார்.

விழாவிற்கு வந்திருந்தவர்களுக்கு, இனிப்புகள் மற்றும் அன்பளிப்பாக அண்ணாவின் நூல் ஒன்றும் வழங்கப்பட்டது. திரு.கண்ணியம் குலோத்துங்கன் அவர்கள் நன்றி கூற விழா இனிதே நிறைவுபெற்றது.


25.03.2009 டாக்டர் அண்ணா பரிமளம் நினைவு நாள் கூட்டம் - அண்ணா பேரவை, சென்னை

பேரறிஞர் அண்ணாவின் மகனும் அண்ணா பேரவையின் நிறுவனருமான டாக்டர் அண்ணா பரிமளத்தின் முதலாம் நினைவு நாள் கூட்டம் அண்ணா பேரவையின் சார்பில் அண்ணா இல்லத்தில் 25.03.2009 அன்று நடந்தது. கூட்டத்திற்கு திரு.இராம வீரப்பன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். டாக்டர் பரிமளத்தின் மூத்த மகனும் அண்ணா பேரவையின் தலைவருமான மலர்வண்ணன் வரவேற்புரையாற்றினார். கூட்டத்திற்கு முன்னாள் மேயர் சா.கணேசன் தலைமையேற்று நடத்தித் தந்தார் கவிஞானி மறைமலையான் சிறப்புரையாற்றினார். அவர் டாக்டர் அண்ணா பரிமளத்தின் பணிகளை விளக்கி கூறினார். மேலும் டாக்டரின் விட்டுப்போன பணிகளை பேரவை மூலம் தொடர்ந்து செய்யவேண்டும், அதற்கு நாம் அனைவரும உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். பின்னர் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் மற்றும் கண்ணியம் இதழின் ஆசிரியர் ஆ.கோ.குலோத்துங்கன் உரையாற்றினார்.

கூட்டத்திற்கு அண்ணா பேரவையின் உறுப்பினர்களும், அண்ணா பற்றாளர்களும் திரளாக வந்திருந்தனர்.

கூட்டத்தின் முடிவில் கே.ஆர்.இராஜாராம் (பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் - ஓய்வு) பேரவை நிதியாக ரூ.10,000த்திற்கான காசோலையை மலர்வண்ணனிடம் வழங்கினார்.

 

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by Anna Peravai, Chennai, Tamil Nadu.