அறிஞர் அண்ணாவின் கவிதைகள்

ஜுவசின் 'திருக்கல்யாண' குணம்

கருத்தெலாம் அறியும் கண்ணன்
பாரெலாம் பார்த்திருந்தான்!
பத்தரை மாற்றுத் தங்கம்,
பகவான் வீற்றிருந்த பீடம்.
என்னகாண் அவன்தன் ஆற்றல்
என்றுள இடியோன் அவனே!
தேவர்தம் உலகைத் தானே
தன்திருப் பாதம் தாங்கும்.
ஆசன மாகக் கொண்டான்
அருந்திறன் உடையோன், கண்டாய்!
அவனுரை கேட்ட அண்டம்
அதிர்ந்திடும் அச்சம் கொண்ட!
அவன்சிரம் அசையக் கண்டு
தேவரும் பெறுவர் திட்டம்!
விதிஎனும் கோலும் ஆடும்
வினைஎலாம் ஓடும் அவைமுன்,
ஆண்டவன் அவன்முன் அண்டம்
அதிர்ந்திடும் அச்சம் கொண்டே.

(திராவிடநாடு - 21.08.1949)