அறிஞர் அண்ணாவின் கவிதைகள்

எதிர்கால நிலைமை

வடஇந்தியா தொழில் கொழித்த பகுதி ஆகவும்
திராவிடம் தேய்ந்த இடமாகவும்,
தொழில்கள் இலாப வேட்டைக் காடாகயும்,
தொழிலாளர் உழைத்து உருக்குலைவோராகவும்
விலைகள் விஷம்போல் ஏறவும்
பொதுமக்கள் அகவிலையால் அல்லற்படவும்,
வேலையில்லாத் திண்டாட்டம் பெருகவும்,
வேதனை, தற்கொலை அதிகமாகவும்,
இயற்கை வளங்கள் பாழ்படவும்,
இல்லாமை மக்களைத் தாக்கவும்,
தாய்மொழியின் எதிர்காலம் பாழ்படவும்,
இந்திமொழி ஆதிக்கம் ஏற்படவும்,
மாநில அரசு தலையாட்டியாகவும்,
பேரரசு ஆட்டிப் படைக்கவும்,
உழவுத் தொழில் உருக்குலையவும்
நெசலாளர் வாழ்க்கை நொந்து போகவும்,
வரிச்சுமை அதிகமாகவும்,
ஏழை எளியோரை வரி தாக்கவும்
ஊழல்கள் பெருகவும்,
உலுத்தர்கள் கொழுக்கவும்,
சமதர்மம் பாழ்படவும்,
சுரண்டல்காரர் கரம் ஓங்கவும்,
மக்கள் உரிமைகள் அழிக்கப்படவும்,
அடக்கு முறைகள் தலைவிரித்தாடவும்...!

(திராவிடநாடு - 24.12.1961)