அறிஞர் அண்ணாவின் கட்டுரைகள்


எந்த ‘ஜீ’யும் நமக்கு வேண்டாம்

“ஆகா! இதென்ன சோதி! கண்கூசுகிறதே! தலை சுழலுகிறதே! வானவீதி பூராவும் ஒளிமயமாகி விட்டதே, என்னால் இதைக்கண்டு தாங்கவும் முடியவில்லையே1 ஆ! ஆகா!”

டமாஸ்கஸ் நகருக்கருகே சென்று கொண்டிருந்த யூதர் சால். திடீரெனத் தோன்றிய வோர் சோதியைக் கண்டு, இங்ஙனம் கூவினார், கூவிக்கொண்டே உடல் பதறநின்றார், பதறியவரின் கண்கள் சுழன்றன மயக்க முற்றார், மண்ணில்புரண்டார், “உண்மை! உணர்ந்தேன்! உயர்ந்தேன்!” என்றுரைப்பவர் போல், முகமலர்ச்சி கொண்டார். செவியிலே, வானொலி கேட்கிறது ஏசுவின் விசுவாசிகளை, அவிவேகிகள்” என்று தூற்றி, அவர்களை அழித்தொழிக்கக் கங்கணங்கட்டிக் கொண்டிருந்த சால், டமாஸ்கஸ் நகரருகே, திடீரென ஓர் சோதியைக் கண்டாரென்றும், ஏசுவின் மகிமையைச் சோதியைக் கண்டாரென்றும், ஏசுவின் மகிமை கடவுள் அவருக்கு எடுத்துரைத்தார் என்றும், யூதர் அக்கணமே ஏசுவின் இணையடி தொழுவேன் என்று இயம்பினாரெனவும், உடனே டமாஸ்கஸ நகர் சென்று ஏசுவின் மார்க்கத்தைத் தழுவி, சால் என்ற பெயரை மாற்றிக்öõண்டு, பால், என்ற புதுப்பெர் சூட்டப்பெற்று, பாரினோருக்கு கிருஸ்தவ மார்க்கத்தை போதிக்கும் பணியை மேற்கொண்டாரென்றும் கிருஸ்தவ வேதம்கூறும். மேனாட்டுப் பகுத்தறிவாகளர்கள், சோதிதோன்றியது, பரவசமானது, ஆண்டவன் மொழிகேட்து ஆகியவைகளை, வேறுவிதமாக விளக்கியுள்ளனர். பலமை படைத்த சால் என்நபடி யூதக்கெள்கையின் பயனாக ஏசுவை இகழ்ந்துரைத்து வாழ்ந்தார். டமாஸ்கஸ் போகையிலே ஓர் நாள் ஏதோ ஓர்விதவலிகண்டது. அதன்பயனாக அவருடைய சிந்தனைக் கருவிலே, மாறிவிட்டது. யார்மீது துவேஷங்öõகட்õரோ, அதே ஏசுவின்மீது அவருக்கு அன்பு உண்டாயிற்-று. அதன்பயனாக அவசிந்தனைக் கருவியே, மாறிவிட்டது. யார்மீது துவேஷங்ககொண்டாரோ, அதே ஏசுவின்மீது அவருக்கு அன்பு உண்டாயிற்று. உடல் குலுங்கின்று, உள்ளமும் குலுங்கிற்று, உள்ளத்திலே ஊறிக்கிடந்த சோதி கண்டார் என்றுரைப்பதிலே அற்புதமில்லை. வின்னிலே பல விசித்திரங்கள் இயற்கைக் காரணமாக உண்டாகின்றன. அத்தகையது, உளிதோன்றி அதை மதத்தோடு பிணைத்தனர், என்றுரைப்பார்.

கால், பால், ஆனது, கருஸ்தவ மார்க்கம் கதிõ விட்டுப் பரவ உதவியாற்று. மனமாற்றம், மார்க்கத் துறையில் இதுபோல் பலப்பல ஏற்பட்டதுண்டு. சில மனமாற்றங்கள், மாறினோருக்கு மகத்தான இலாபத்øத் தந்ததுண்டு, சிலருக்கக் கஷ்டநஷ்டம் ஏற்பட்டதுண்டு. சால் என்ற யூகர் பால் ஆக மாறாதிருந்திருப்பின், கிறிஸ்தவ மார்க்கத்துக்கும், உலகுக்கும் எவ்வளவோ நஷ்டமன்றோ! இத்தகைய மாற்றங்கள் உலகத்தின் போக்கையே மாற்றிவிட்டது. சால், பாலாக மாறினது, சமணநிபுணர் சைவ நாயன்மாரானது, காளமேகம் வைணவத்திற்குச் சென்றது, திரை கடலோடித் திரவியம் தேடிய வியாபாரக் கோமான் பட்டினத்தடிகளாகி இனிக்கும் பேய்க் கரும்புக்குத் தேடி அலைந்தது, மந்திரிவேலையைத்துறந்து எங்கும் பிரகாசமாய் இருப்பவர் எவர்? என்று கேட்டுக்கொண்டு தாயுமானார் வெளிப்போந்தது, துடுக்குக் குணமுள்ளவர் விவேகாநன்தரானது, ஆகிய இத்தகைய மாறுதல்களை மகத்தான சம்பவங்களான்றோ!

அரலங் குமாரரான சித்தார்த்தர், புத்தராகமாறினது, உலகினுக்கு எவ்வவ்ளவோ நன்மை பயத்ததன்றோ” என்று தோழரொருவர் மாலைப் போதினிலே என்னிடம் மொழிந்தார். அவரது எண்ணம், பால், புத்தர், நாவுக்கரசர், தாயுமானார் ஆகியவர்கமீது பயந்ததற்குக் காரணம், நான் ஆச்சரியார், மாற்றத்தைக் குறித்து அவரிடம்பேசியதேயாகும். ஆச்சாரியாரின் மனமாற்றம், மகத்தான ஒரு சம்பவம், வரவேற்க வேண்டிய விஷயம், ஆதரிக்க வேண்டியதே என்று தோழர் வாதிட்டார். எனக்கென்ன கரும்புத்தின்னக் கூலியாவேண்டும்! ஆச்சாரியார், மனம்மாறி, திராவிட நாட்டுப் பிரிவினைக்கு இசைந்தால், பழமும் நழுவிப் பாலில், விழுந்தது என்று பரமானந்த மடைவேன். ஆனால், ஆச்சாரியார் மாறி இருக்கிறார் என்பது உண்மையே யொழிய. அது மனமாற்றமா, வேடமாற்றமா, என்பதிலேதான் சூட்சமம் இருக்கிறது. எனது தோழர் எடுத்துக்
காட்டிய மேற்கொள்ள உண்மையான மன ஊற்றங்களைக் காட்டுவனவாகும்! அதே ரகமானதுதானா, ஆச்சாரியாருடையது? புத்தர், சித்தார்த்தராகிவிட வில்லை, பட்டினத்தடிகள் பட்டத்தரராகி விடவில்லை.

“இந்தத்தடவை அவர் பாகிஸ்தானைப் பற்றியும் திராவிடநாட்டுப் பிரிவினையைப் பற்றியும் பேசிக் கொண்டுவருவது, நமக்குச் சாதகமாக இல்லையோ” என்று கேட்டார் நண்பர்.

“சாதகந்தான், சந்தேகமில்லை, கொண்டையை வீசி விரால் இழுக்கிறார் போலிருக்கிறதே நண்பா. அவருடைய பேச்சு, வேதம், உபநிஷத்போல், விதவிதமான வியாக்யானத்துக்கு இடந்தருவதாகவன்றோ இருக்கிறது” என்று நான் கேட்டேன்.

“எது எப்படியிருந்தாலும், ஆச்சாரியாரின் மன மாற்றம் உண்மையோ, இல்லையோ, அவர் இப்போதிருப்பதைப்போல் என்றும் இருப்பாரோ அன்றி வேறுவிதமாக மாறிவிடுவாரோ, வாயாரக்கூறி மனமாற எண்ணாதிருக்கிறாரோ, அன்றி உள்ளும் புறமும் ஒத்து உரைக்கிறாரோ, அவைகள் ஒருபுறம் கிடக்கிட்டும். இப்போது அவர்செய்யும் பிரச்சாரம், நமக்கு ஆதரவுதானே!” என்றேன் நான்.

இரண்டு “ஜீ”க்களுக்கும் சண்டை! ஒருவரையொருவர் “சீ” சொல்லிக்கொள்ளவில்லை, “தூ” என்று உமிழ்ந்துöõகள்ள வில்லை. மற்றது நடந்துவிட்டது. இரண்டு ஆசிரமங்களிலும், ஆயாசம் மேலிட்டு விட்டது. குருவின் புத்தி கோணலாகி விட்டதென்று பிரதம சீடர் கூறுகிறார். பிரதம சீடருக்குச் சித்த சுவாதீனமில்லையென்று குரு கூறுகிறார். ஆசிரமத்திலே, இருவரையும் வாழ்த்தி வணங்கி வரங்கேட்டு நின்ற திருக்கூட்டம், திணறுகிறது. எந்த “ஜீ” சொல்வது சரி, எந்த “ஜீ”யின் பக்கம் சேருவது என்று தெரியாது திணறுகிறார்கள். தோழனே! இதைக் காணும் போதுதான் எனக்குக் கைகொட்டி நகைக்க வேண்டுமென்று தோன்றுகிறது.

எங்களைப் பிரிக்க முடியுமா? எமக்கள் பிளவுவருமா? நாங்கள் ஒன்றுபட்ட கருத்துடையவர்களாயிற்றே, என்று ஜம்பமாகப் பேசிக்கொண்ட கூட்டம் அன்பும், பாரதமாதாவினிடம் கொண்ட பக்தியும் வெள்ளையரை விரட்டவேண்டுமென்ற வைராக்கியமும் எங்களைப் பிணைத்து வைத்திருக்கிறது என்று பெருமை பேசிக்கொண்ட கூட்டம், காரணமின்றி, இதோசர். சிகந்தர், ஜின்னாவைவிட்டுப் பிரிந்துவிடப் போகிறார். இன்னொரு பிரமுகர் லீகிலிருந்து பிரிந்துவிடுகிறார், என்று பேசியும் எழுதியும் பேதத்தை விதைந்து லீக்கைப் பிளந்துவிட முயற்சித்த கூட்டம், இன்று இருக்கும் நிலைமையைக் காணும்போதே எனக்கு மிகச்சிரிப்பாகத்தான் இருக்கிறது. அதிலும் எப்படிப்பட்ட நேரத்திலே இத்தகைய பிளவு! நாட்டுக்கும் உலகிக்கும் நெருக்கடி ஏற்பட்டிருக்கும் நேர்த்தில் யாராருக்குள் புளவு? அவல் காந்திக்கும் கேட்டா காந்திக்கும் பிளவு? அசல் காந்திக்கும் கேட்டா காந்திக்கும் பிளவு! எவ்வளவு பேதம் அவர்களுக்குள் வெண்ணெய்க்கும் சுண்ணாம்புக்கும் உள்ள பேதம் என்று காந்தியார் கூறுகிறார். இத்தகைய அவலட்சணக் காட்சியைக் இன்னமும் கட்டிஅழும் இங்கிதமில்லாதவர்களே, வாருங்கள் வெளியே, என்று அழைக்கிறேன்.

கூரையில்லா வீட்டிலே குடி இருக்கலாமோ குலராமன் தூதுவனிடம் கொஞ்சுவதோ, வேண்டாமப்பா, இவர்களின் உறவையே நீக்கிவிடு, தலைøமுழுகி விட்டு, தமிழர் கட்சியிலேவந்து சேர், என்று தோழரை நான் அழைக்கிறேன்.

ஆச்சாரியார், இன்னமும், காங்கிரஸ்காரராக இருந்துகொண்டு, காங்கிரஸ்வாதிகளிடையே காங்கரஸ் இன்னவிதமாக நடந்துகொள்ள வேண்டுமென்று கூறிக்கொண்டு வருகிறாரேயன்றி, காங்கிரசை எதிர்த்தொழிக்க புது அமைப்பு ஏற்படுத்தும் நோக்கங்கொண்டாரில்லை. அத்தகைய புது அமைப்பு உண்டாக்கினால் அது போது நாம், ஆச்சாரியாருக்குத் தளவாடம் தருவோம், படை அளிப்போம், தோளோடு, தோள் நேரநிற்போம். இதற்கு ஆச்சாரியார் தயாரா? என்பதை நான் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.

வடக்கே தோழர் M.N. ராய் காங்கிரசை எதிர்த்தோர் கட்சி அமைத்துள்ளனர். அதற்கப் பெரியோர் உபதலைவர்! ஜனாப் ஜின்னா, காங்கிரசைத் தாக்குகிறார், அவருடன் நாம் தோழமை கொண்டுள்ளோம். டாக்டர் அம்பேத்காரிடமும் அதுபோன்றே. ஆச்சாரியாரின் நிலைமை இது போன்றதல்ல!

நட்புவேறு, கூட்டுவேறு! இருவிதமான, முரண்படும் கருத்துக்கொண்டோரும் நட்புடன் இருக்கமுடியும், ஆனால் அவர்கள் கூட்டாகவேலை செய்ய முடியாது. இரு இயல்பினர், ஒரேசமயத்தில், ஒருநோக்கங் கொண்டிருக்க வேண்டிய அவசியம் நேரிடும்போது அவர்களுக்குள் தொடர்பு உண்டாகிறது, தொடர்பு, நட்பல்ல, கூட்டுமல்ல, தனியானது. தொடர்பு நிலைத்தால் நட்பாகும். கூட்டு, என்றால், இருவரும் இன்ன காரியத்துக்காக ஒன்ற சேர்ந்துழைக்கவேண்டும் என்ற ஏற்பாட்டின் மீது இருவர் ஒன்றாகி, தமது பலத்தையும் திறனையும் கூட்டாககி வேலைசெய்வது. எனவே நட்பு, தொடர்பு, கூட்டு, எனும் மூன்றனுள், பெரியாருக்கும் ஆச்சாரியாருக்கும் நட்பு இருக்கக்காண்கிறோம், ஆனால் இருதலைவர்களின் கட்சிகளிடையேயும் கூட்டோ, தொடர்போ ஏற்படவேண்டுமானால், ஆச்சாரியார். அச்சத்தைவிடுத்து, காங்கிரசுக்கு எதிரிடையான முன்னணியைத் துவக்கவேண்டும், அதிலே, லீகின் திட்டம், நீதிக்கட்சித் திட்டம், அமைதல்வேண்டும். பிறகு, கூட்டாக வேலைசெய்து கோரும் இலட்சியத்தை அடைய முடியும், கிருபளானிகள் சீறி, ஜவஹர்கள் குதித்து, காந்தியார்கள் பதைத்து எழுந்தாலும் கவலையில்லை. ஆச்சாரியார், இதனை விடுத்து, இன்றோர் “ஜீ” க்களின் போரை நடத்துவருவது, பயன் தராது! ஆசிரமங்களுக்குள் அமளி நடக்கிறதென்றால், நான்வேடிக்கை பார்க்காமல் வேறென்னசெய்வது! ஆச்சாரியார், திடீரென்று, காந்திபக்தராக இருந்தவர் மாறிவிட்டார் என்றுரைக்கும் தோழரை’ நான் கேட்கிறேன். மாற்றம் என்ன விதமானது, பச்சை ஓணான், கலரை மாற்றிக் காட்டுகிறதே அடிக்கடி. அது போன்றதா, அல்லது சித்தார்த்தர் புத்தாரானாரே, அதைப் போன்றதா! காந்திஜீ, ராஜாஜீ, எனும் இரண்டு ஜீக்களும், ஆரியத்துக்கு உழைப்பவர்களே. இருவரின் போர்த் திட்டங்
களிலே மாறுபாடுகள் காணப்படலாம். நோக்கத்தில் அல்ல! ஆகவே நமக்கு இந்த இரண்டு ஜீக்களில், எந்த ஜீயும் வேண்டாம்.

(திராவிடநாடு - 14.6.1942)